பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 13 டிசம்பர், 2013

இன்டெர்வியூ - என்ன வாழ்க்கங்க இது..

நீ போய் இன்டெர்வியூ அட்டெண்ட் பண்ணிடுவ இல்ல ,கண்டிப்பா போறதானேனு ரெண்டு நாளா , நச்சரிச்சு இன்டெர்வியூ  அன்னைக்கு காலைல அலாரம் வச்சு எழுப்பிவிட்டு பல்லு தேச்சுவிட்டு குளிச்சுட்டு சீக்கிரம் கிளம்புனு சொல்லாத கொறையா கன்சல்டன்சிக்காரன் ஒரு பக்கம் ..

சரின்னு காலைல 7 மணிக்கே அவசர அவசரமா சாப்பிட்டும் சாப்டாமலேயும் இந்த பஸ் விட்டுட்டா அடுத்து 20 நிமிஷம் கழிச்சுத்தானே அடுத்த பஸ்னு ஓடினா ,ரோடு கிராஸ் பண்ண முடியாத அளவுக்கு எல்லாவித வாகனமும் கொஞ்சம் கூட கருணை காட்டாம போய்கிட்டே இருப்பாங்க ,இதோ கிராஸ் பண்ணிடலாம்னு நின்னுகிட்டு இருக்குறசமயம் 'கெலம்பிட்டியா'னு ஒரு கால் கன்சல்டன்சிகாரங்கிட்ட இருந்து வரும்,கெலம்பிட்டேனு சொல்லி போன் வைக்குற நேரம் பாத்து என்னைக்கும் 10 நிமிஷம் லேட்டா வர நாம ஏற வேண்டிய பஸ் இன்னைக்கு 5 நிமிஷம் முன்னாடியே வந்து நிக்கும் ,இதுல ஏறினாதானே இந்த டிராஃபிக்ல ரெண்டு மணி நேரத்துக்குள்லையாவது அங்க போய் சேர முடியும்னு ரோட்ல வர வண்டிக்கெல்லாம் கைகாட்டி நிறுத்திட்டு ரோடு கிராஸ் பண்ணி ஆப்போசிட் ரோடு கிராஸ் பண்ணி ,கடைசி படிக்கெட்டுல தொத்திகிட்டு கொஞ்சம் உள்ள நகருங்க ப்ளீஸ்னு கெஞ்ச 'எங்க இருக்கனு' ஒரு கால் கன்சல்டன்சிகாரங்கிட்ட இருந்து வரும்,அவனுக்குபதில் சொல்லிட்டு போன் வச்சா , பொம்பள புள்ள இவ்ளோ கூட்டத்துல கடைசி படிகெட்டுல இப்படி நிக்குறியேம்மா அடுத்த பஸ்ல வரக்கூடதானு ஒரு பெருசு சவுண்ட் குடுப்பாங்க ,


நம்ம கஷ்டம் புரியவா போகுதுன்னு அமைதியா உள்ள நிக்குறவங்கள கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி உள்ள நகருங்கனு சொல்லி மெதுவா உள்ள போய் ஒரு இடத்துல நிக்க முடியாம நின்னு அதுலயே இடத்த விட்டு எந்திரிச்சு வராத கண்டக்டர்க்கு நிக்குற நாங்க எல்லாம் ஒருஒருத்தரா டிக்கெட்க்கு பணத்த பாஸ் பண்ணி ,மறுபடியும் டிக்கெட் பாஸ் பண்ணி ,எனக்கு சில்றவரல ,எனக்கு டிக்கெட் வரலனு சொல்றவங்களுக்கு அவங்கவங்களுக்கான சில்லறையையும் டிக்கட்டையும் சரியா பாஸ் பண்ணி ,கொஞ்சம் கொஞ்சமா கூட்டம் குறைய ஃப்ரீயா நிக்குறதுக்கு ஒரு இடத்தை பிடிச்சு கம்பியை பிடிச்சுக்கிட்டு இண்டர்வியூக்கு லேட் ஆகிடுமோனு டென்ஷன் ஆகி இருக்குற சமயம் 'இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் போகனு' அடுத்த கால் கன்சல்டன்சிகாரங்ககிட்ட இருந்து வரும் இதோ இறங்கபோறேன்னு அவங்களுக்கு பதில் சொல்லிட்டு நாம எறங்க வேண்டிய ஸ்டாப் வந்ததும் அடிச்சுபிடிச்சு எறங்கி வேக வேகமா நடந்து கம்பனிக்கு போனா,...

செக்யூரிட்டி இந்த கேட் இல்லமா அந்த கேட் வழியா போங்கனு  சொல்ல மறுபடியும் அடுத்த கேட்டை தேடி ஓடி உள்ள போனா bag செக் பண்ணி ஆள செக் பண்ணி,உங்க பான்-கார்டு குடுத்துட்டு போங்க ,நீங்க இந்த விசிட்டர் ஐ.டி ரிட்டர்ன் பண்ணும்போது பான்-கார்டு திரும்ப வாங்கிக்கலாம்னு பான்-கார்டு வாங்கி வச்சுக்கிட்டு, நமக்கு ஒரு விசிட்டர் ஐ.டி, கேமரா ஃபோனா? உள்ள கொண்டுபோகக் கூடாது , இங்க குடுத்துட்டு கார்டு வாங்கிட்டு போங்கனு ஃபோன்க்கு ஒரு கார்டு நமக்கு ஒரு கார்டுனு குடுக்குறத வாங்கிட்டு காலைல 9 மணிக்கு இண்டர்வியூக்கு போய் உக்காந்தா.... ,

அங்க நமக்கு முன்னாடி 20 பேர் உக்காந்துருப்பாங்க,ரிசெப்ஷன்ல ரெஸ்யூம் குடுத்ததும் ,ஒரு 5 பக்க ஃபார்ம் குடுத்து ஃபில் பண்ண சொல்வாங்க.அதை எல்லாம் ஃபில் பண்ணி குடுத்துட்டு ,வாக்-இன்க்கு வந்துட்டோமோனு யோசிச்சுகிட்டே பக்கத்துல இருக்குறவங்க கிட்ட கேட்டா இல்ல இது ஷெட்யூள் இன்டெர்வியூனு சொல்லி நம்ம வயித்துல பால வாப்பாங்க .

12.30 மணி போல 'ஸ்ரீவித்யா கோவிந்தராஜ்'னு கேட்டதும் வேற யாரையும் இல்ல நம்மலதான் கூப்பிட்ராங்கனு நிம்மதியா உள்ள போனா நமக்குன்னு வந்து மாட்டுவாங்க ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபீசர்.அவங்க முகத்துல சிரிப்பை தேடினாலும் கிடைக்காது . (வீட்ல யார்கூடயாவது சண்டைபோட்டுட்டு வந்துருப்பாங்க போல) .

அவங்க கேக்குற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லி முடிச்சதும் வெயிட் பண்ண சொல்றாங்கலேனு மறுபடியும் கேபின்ல வெயிட் பண்ணினா 1.30 ஆகிடுச்சுனு கம்பெனி ஆளுங்க மட்டும் சாப்ட போறேன் நீ பாத்துக்கோ நீ பாத்துக்கோனு எதாவது ஒரு அப்பாவி தலையில எல்லாரையும் கட்டிவிட்டுட்டு சாப்ட போய்டுவாங்க.அட பாவிகளா ,எங்களையும் சாப்ட்டு வர சொல்லலாம் இல்ல பசிக்குதுயானு மனசுக்குள்ளையே திட்டிகிட்டு ,பக்கத்துல இருக்குறவங்க கிட்ட பொலம்பிக்கிட்டு உக்காந்து இருந்தா... ,

பக்கத்துல இருக்குற பீட்டர் ஆசாமி ,"யு நோ வாட் , நா என் கம்பெனில நல்ல பொசிஷன்ல இருக்கேன் ,பட் பேக்கேஜ் பத்த மாட்டேங்குது,இன்னம் கொஞ்சம் குடுத்தா நல்லா இருக்கும்னு கேட்டா இன்க்ரிமென்ட் இப்போ இல்லைங்குறான் ,அதான் வேற வேல தேடலாம்னு வந்துட்டேன்.நீங்க அந்த கம்பெனி ட்ரை பண்ணலாமே ,இந்த கம்பெனி ட்ரை பண்ணலாமே நல்ல பேக்கேஜ் தருவாங்களே"னு வெறுப்பேத்த அப்போ நீ போகவேண்டியதுதானே வெளக்கென்னனு மனசுக்குள்ளையே நினச்சுகிட்டு ,"ஓஹ் !!! அப்டியா"னு சொல்லிகிட்டே யாராவது நம்ம பேர கூப்பிட மாட்டாங்களா,யோவ் அட்லீஸ்ட் போயிட்டு வாங்கனாவது சொல்லுங்கையானு பாத்துகிட்டே இருக்க... ,

செகண்ட் ரவுண்டுக்காக வெயிட் பண்றவங்க எல்லாம் ஃபஸ்ட்  ஃப்ளோர் போங்கனு சொல்ல , ஃபஸ்ட்  ஃப்ளோர் போனா அங்க நமக்கு முன்னாடி ஒரு 10 பேர் உக்காந்து இருப்பாங்க,நீங்கலாம் எப்பயா இங்க வந்தீங்க நாமளும் இவ்ளோ நேரம் கீழ தானே இருந்தோம்னு யோசிச்சுகிட்டே உக்காற பொறுமையா 3.15 மணிக்கு நம்ம பேர கூப்பிடறது கெணத்துக்குள்ல  இருந்து கூப்பிடற மாதிரி நமக்கு கேக்கும் (அட , பசில காதடச்சி போய் இருக்கும்ங்க) , நான் தான்னு வாய்க்குள்ளயே சொல்லிக்கிட்டு எழுந்து போக.. ,

'பூஸ்ட் இஸ் தி சீக்ரெட் ஆஃப் மை எனெர்ஜி'-னு நம்மள ஊக்க படுத்திகிட்டே உள்ள போய் ஹலோ சொல்லிட்டு இன்டர்வியூ பண்றவங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிகிட்டே வர ,திடீர்னு 'அட்வான்ஸ் டெக்னாலஜி' கேள்வியா கேக்க ,நல்லாதானே போய்க்கிட்டு இருந்ததுனு நினைச்சுக்கிட்டே 'அட்வான்ஸ் டெக்னாலஜி' எக்ஸ்பீரியன்ஸ் இல்ல பட் என்னால சீக்கிரம் கத்துக்கமுடியும்னு சொல்ல ,'ஓஹ் !! ஓ !! நாங்க இந்த பொசிஷன்க்கு தான் ரெக்ரூட் பண்றோம் ,இந்த 'நாலேஜ்' கண்டிப்பா வேணும்மே ,சரி நீங்க வெயிட் பண்ணுங்க'னு சொல்லும்போதே ஆஃப் ரிசல்ட் தெரிஞ்சுடும் .

இருந்தாலும் வெயிட் பண்ண சொன்னதுக்காக வெயிட் பண்ணினா, 10 நிமிஷம் கழிச்சு ஒருத்தங்க வந்து 'ஸாரி ,நாங்க இந்த பொசிஷன்க்கு தான் ரெக்ரூட் பண்றோம் , பட் உங்க டீடைல்ஸ் எங்க டேட்டா பேஸ்ல இருக்கும் மேச்சிங் பொசிஷன் வரும்போது கண்டிப்பா கூப்பிட்ரோம்'னு சொல்ல , 'ஓகே நோ ப்ராப்லெம்'னு சொல்லிட்டு , செக்யூரிட்டி குடுத்த ஸ்லிப்ல சைன் வாங்கிட்டுபோய் ,செக்யூரிட்டிகிட்ட குடுத்துட்டு நம்ம பான்-கார்ட் வாங்கிட்டு , நமக்கு குடுத்த விசிட்டர் ஐ.டி கார்ட் குடுத்துட்டு ,மொபைல்க்கு குடுத்த ஐ.டி கார்ட் குடுத்து மொபைல்-ஐ வாங்கிகிட்டு சுவிட்ச் ஆன் பண்ணினதும் கன்சல்டன்சிகாரனுக்கு போன் பண்ணி இன்ஃபார்ம் பண்ணிட்டு ,

மறுபடியும் பஸ் ஏறி ,ரெண்டு மணிநேரம் கழிச்சு வீட்டுக்கு போனா , இன்டெர்வியூ என்னாச்சுனு அம்மா கேக்க ,கிடைக்கலன்னு சொன்னதும் , 'நல்லா வாய் பேசணும் இப்படி இருந்தா என்ன பண்ண முடியும் ,உன் வாய் எல்லாம் என்கிட்டே தான் இந்நேரம் அந்த பொண்ணா இருந்துருந்தா வேலையோட வந்துருக்கும்'னு நம்மள கடுப்பேத்த , 'சரி அடுத்த இன்டெர்வியூல பாத்துக்கலாம்'னு அண்ணன் போன்ல சொல்ல ,'என்ன மிஸ்டேக் பண்ணின பாரு அடுத்த இன்டெர்வியூல அத சரி பண்ணிக்கோ'ன்னு அப்பா அட்வைஸ் பண்ண ,ஒரு காஃபியை குடிச்சுட்டு அப்பாடான்னு போய் கால நீட்டி படுத்தா ....

'இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது'-னு ரிங்டோன் கேக்க 'ஹலோ'னு சொன்னதும் , 'மே ஐ ஸ்பீக் டூ ஸ்ரீவித்யா கோவிந்தராஜ் ,ஆர் யு லுக்கிங் ஃபார் எ ஜாப் சேஞ்ச் ,வி ஆர் காலிங் ஃப்ரம் ​​​​ ---- கன்சல்டன்சி' .....

என்ன வாழ்க்கங்க இது ........................

(இது என்னுடைய ஜூலை(1/7/2013) மாச போஸ்ட் ,சும்மா ,ரீபோஸ்ட் பண்ணிருக்கேன்)

15 கருத்துகள்:

 1. வட்டங்களில் சுழலுது
  வாழ்க்கை...!

  பதிலளிநீக்கு

 2. அனுபவ உண்மை போலிருக்கிறது....இங்கே அமெரிக்காவில் இண்டர்வ்யூ பண்ணுறவன் இந்தியனா இருந்த மிக தொல்லைங்க.. நாம் இண்டர்வ்யூக்கு கஷ்டப்பட்டு ப்ரிப்பர் பண்ணுறது மாதிரி அவனும் எப்படி கஷடமான கேள்வி கேட்டு அத்ற்கு பதில் நமக்கு தெரியாது மாதிரி இருக்கும்படி செலக் செய்வான் ஆனால் அமெரிக்கனாக இருந்தால் நமக்கு அந்த சப்ஜெக்ட்ட பற்றி கொஞ்சம் பேசிக்காக தெரியுமா என்று அறிந்துவிட்டு இவன் டீம் ஃப்ளேயராக இருப்பானா ஏன்ரு அறிய முயற்சி செய்வார்கள். அதுமட்டுமல்ல அவர்கள் கேட்ட கேள்விக்கு நமக்கு பதில் தெரியாவிட்டால் அதற்கான பதிலை நமக்கு விளக்கி சொல்வார்கள் அதுமட்டுமல்ல

  பதிலளிநீக்கு
 3. bloga நல்ல காமெடிய எழுதி இருக்கீங்க
  ..But i think it was your own EXPERIENCE. உங்க ப்ளோக ஒன்று அல்லது இரண்டு படித்து இருக்கேன்.THEY WERE GOOD.

  பதிலளிநீக்கு
 4. NOT ONLY FUNNY SREE... ALSO IT IS VERY USEFUL TIPS FOR JOB SEARCHING PERSONS YOU NO?

  பதிலளிநீக்கு
 5. பகிர்விற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 6. க க போ.. :) super.. . . வேலை, இண்டர்வியூ கொஞ்சம், முக்கியமான விஷயம். பல பேர் அத ரொம்ப சீரியஸா எடுத்துப்பாங்க. அளவுக்கு அதிகமாக.

  நீங்க யதார்த்தமா எழுதீருக்கிங்க... நகைச்சுவையுடன், நீங்க ஏன் RJ va முயற்சி பண்ணகூடாது? Not saying for fun, seriously.

  பதிலளிநீக்கு
 7. :) :) :) Same Same Blood ....

  One of your best write up ...!

  காடுகளில் வாழ்ந்த மனிதன் இப்பொழுது CARD களோடு வாழ்கிறான் ...!

  பதிலளிநீக்கு
 8. பதில்கள்
  1. யோவ்! உனக்கு என் போஸ்ட் படிக்க மாசக்கணக்காகுது .இப்போவந்து Fact Fact -னு சொல்ற .

   நீக்கு