பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 20 ஜூன், 2014

இப்படியும் ஒருத்தர்

1991-ஆம் ஆண்டிலிருந்து தற்போதுவரை செய்தித்தாள்களையும் பல்வேறு வார, மாத இதழ்களையும் தொடர்ந்து படிப்பதோடு நில்லாமல் அவற்றைப் பாதுகாத்து பத்திரப்படுத்தி வருகிறார், சென்னை அசோக்நகரைச் சேர்ந்த விஸ்வநாதன். நாற்பதுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் 15,000-க்கும் மேற்பட்ட செய்தித்தாள் பிரசுரங்களை சேகரிச்சு வச்சுருக்காராம் . பொறியியல் பட்டதாரியான இவர், பாரத் பெட்ரோலியத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.


40-க்கும் மேற்பட்ட தலைப்புகளாகப் பிரித்து செய்தித்தாள்களிலும் பல்வேறு வார, மாத இதழ்களிலும் வெளிவரும் முக்கிய நிகழ்வுகள் தொடர்பான எல்லா செய்திகளையும் தினமும் தவறாமல் சேகரிக்க ஆரம்பித்து கடந்த 6 மாத காலமாக முடிந்தவரை சேகரித்த தகவல்களை கணினியில் பதிவு செய்ய முயற்சித்து வருகிறாராம் இவர்.இதற்கென்றே அத்தனை நாளிதழ்களையும் தன் அறையில் உள்ள 5 அலமாரிகளில் பிளாஸ்டிக் கவர்களில் போட்டு தேவையானபோது தேடி எடுத்துக்கொள்ள வசதியாக அகர வரிசைப்படி அடுக்கிவச்சுருக்காறாராம் ..

அறிவியல், மருத்துவம், விளையாட்டு, கலைகள், பொதுவான தலைப்புகள் என மொத்தம் 40-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் இவர் செய்திகளை சேகரித்திருந்தாலும், ஆன்மிகம், கணினி, மருத்துவம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டதால் அவை தொடர்பான செய்திகள்அதிகமா இருக்கு இவர்கிட்ட .

58 வயதில் தொடங்கி 20 வருடங்களுக்கும் மேலாக இன்றுவரை இப்பழக்கத்தைத் தொடர்ந்துவரும் விஸ்வநாதன், ஒருபோதும் தனக்கு சலிப்பு ஏற்பட்டதில்லை என்றும், நேரத்தைப் பயனுள்ள வகையில் இதில் செலவழிக்க முடியுதுனு சொல்றார். பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கல்வி சம்பந்தமான தகவல்களைத் திரட்ட இவரை அணுகிப் பயன்பெறலாம்.

தொடர்புக்கு: 044-24894694  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக