பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 27 ஜூன், 2014

அறுந்து விழும் மின் கம்பிகளில் பாயும் மின்சாரத்தை நிறுத்தும் தானியங்கிக் கருவி

புயல் காற்றிலோ அல்லது விபத்திலோ எதிர்பாராமல் அறுந்து விழும் மின் கம்பிகளில் பாயும் மின்சாரத்தை நிறுத்தும் தானியங்கிக் கருவியை உருவாக்கியுள்ளனர், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள VRS பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஹரிஷங்கர், மணிவண்ணன் மற்றும் தீனதயாளன் ஆகியோர்.

டிரான்ஸ்பார்மரில் மைக்ரோ கண்ட்ரோலரை பொருத்தியுள்ளோம். அதற்கு உதவும் நோக்கில், ட்ரான்ஸ்பார்மரிலிருந்து செல்லும் ஒவ்வொரு மின் கம்பியிலும் சென்சார்களை இணைத்துள்ளோம். இதன் மூலம் மின்கம்பிகளில் ஏதேனும் பழுது/அறுபட்ட நிலையிலிருந்தால் உடனடியாக சென்சார்கள் மூலம் கண்டறியப்பட்டு மைக்ரோ கண்ட்ரோலருக்கு தகவலை அனுப்பும். அதன் பின் மைக்ரோ கண்ட்ரோலர் தானாக செயல்பட்டு அதன் கட்டுப்பாட்டிலுள்ள ரிலே சுவிட்ச்சை அணைத்து விடும். இதன் மூலம் அந்தக் குறிப்பிட்ட பகுதிக்கு இடையே பாயும் மின்சாரம் தானாக நிறுத்தப்படுகிறது. எப்படி தெரு விளக்குகள் தானாக ஒளிர்ந்து மீண்டும் அணைகின்றதோ அதே போல்தான் இக்கருவியும் செயல்படுகிறது. மேலும் மைக்ரோ கண்ட்ரோலர் செயல்பட வெறும் 3.3 வோல்ட்ஸ் மின்சாரம் மட்டுமே தேவை" என்கிறார் மற்றொரு மாணவர் மணிவண்ணன்.

ஹரிஷங்கர் கூறும்போது, அனைத்து நேரங்களிலும் இக்கருவி தானாகச் செயல்படும் தன்மை உடையது. மைக்ரோ கண்ட்ரோலருடன் GSM மோடமும் பொருத்தியுள்ளதால் மின்கம்பி அறுபட்டுள்ளதை உடனடியாக சம்பந்தப்பட்ட லைன்மேனுக்கும் மற்ற உயர் அதிகாரிகளின் மொபைல் போனுக்கும் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதைக் குறித்து குறுந்தகவல் அனுப்பிவிடும். எங்கள் கருவியை டிரான்ஸ்பார்மரில் பொருத்த சுமார் 60,000 ரூபாய் வரை செலவு ஆகிறது. தற்போது மாதிரிக் கருவியை உருவாக்கியுள்ள எங்களுக்கு அரசு உதவினால் இதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து பெரும் விபத்துக்களைத் தவிர்க்கலாம்" என்கிறார்.

தொடர்புக்கு : 96590 95472

                                             --நன்றி புதியதலைமுறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக