பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 8 ஜூன், 2014

புற்றுநோய் பாதிப்பை ஆர்.என்.ஏ. மூலம் தெரிஞ்சுக்கலாம் ... !!

ஸ்கேன் செய்வதற்குப் பதிலாக, ரத்தப் பரிசோதனை மூலம் கண்களைப் பாதிக்குற புற்றுநோயைக் கண்டு பிடிக்க முடியும்னு கண்டுபிடிசிருக்காங்க, சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். 

இதனால, ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயைக் கண்டுபிடிச்சு சிகிச்சை எடுத்துக்கறதுகான சாத்தியங்கள் அதிகரிசிருக்கு. கண்ல கட்டி இருக்குற இடத்தில இருக்குற ரத்தத்தைப் பரிசோதிச்சு , அதுல இருக்குற மைக்ரோ ஆர்என்ஏ (micro-RNA) அளவை வைச்சு புற்று நோய் பாதிப்பு இருக்காங்கறதை கண்டு பிடிக்க முடியும். 

‘‘கீமோதெரபி கதிரியக்க சிகிச்சையை எடுத்துக்குற நோயாளிக்கு, புற்றுநோய் பாதிப்பு எந்த அளவு இருக்குங்கறதை தெரிஞ்சு , அதுக்கேத்த  சிகிச்சையை தொடரவும் இந்தக் கண்டுபிடிப்பு உதவும்’’ -னு இந்த ஆராய்ச்சியின் திட்ட 
இயக்குநர் டாக்டர். எஸ். கிருஷ்ண குமார் சொல்லிருக்கார்

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக