பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 12 ஜூன், 2014

பறக்கும் ஊர்தி

UAV (Unmanned Aerial Vehicle) என்று அழைக்கப்படும் மனிதர்களால் எளிதில் செல்ல முடியாத சந்து பொந்துகளிலும் பறந்து செல்லும் திறன் உடைய ஊர்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .


இந்த UAV கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பத்தில் உளவு பார்க்கவும் தகவல்களைச் சேகரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. பார்ப்பதற்கு ஹெலிகாப்டர்களின் சிறு வடிவம் போலக் காணப்படும் இந்த உளவு ஊர்திகள், தற்போது பல்வேறு தேவைகளுக்கும் பயன்படும் வகையில் தயாரிக்கப்படுகின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த டீல் குரூப் எனும் வானியல் ஆராய்ச்சி மையம், வான்வெளித் துறையில் 11.6 பில்லியன்கள் செலவிடும் பெரும் துறையாக இது இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

நம் நாட்டிலும் இலகுரக UAVக்கள் ராணுவம்,கடற்படை,விமானம் என்று முப்படைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

காசிரங்கா தேசிய வனவிலங்குப் பூங்காவில் மிருகங்களைப் பாதுகாக்கவும் இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தேசியப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் (DRDO), தேசிய வான்வெளி ஆய்வுக்கூடங்கள், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் லிமிடெட் (HAL) போன்ற அரசுத்துறை நிறுவனங்கள்தான் UAV உளவு ஊர்திகளை உருவாக்கி வந்தன. தற்போது தனியார் நிறுவனங்களும் இந்த சிறிய ரக ஊர்திகளைத் தயாரித்து வருகின்றன. மும்பை நிறுவனமான ஐடியா போர்ஜ், நெத்ரா எனும் குறைந்த எடையுள்ள UAVயை உருவாக்கியுள்ளது. இதன் எடை 1.5 கிலோகிராம் மட்டுமே. இதன் மீது பொருத்தப்பட்ட கேமரா உதவியுடன் கண்காணிப்பின் போது குறிப்பிட்ட பகுதியை மட்டும் Zoom செய்து பார்க்க முடியும். மேலும் அது காட்டும் படக்காட்சியையும் கணினியின் உதவியுடன் நேரலையாகப் பார்க்க முடியும்.



300 மீட்டர் உயரத்தில் 2 முதல் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு நெத்ரா பறக்கும் திறனுடையது. HAL நிறுவனம், இதை வடிவமைக்கும் மற்றும் மேம்படுத்தி சந்தைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.UAVக்களில் பல ரகங்கள் உள்ளன.

HALE ரக UAV 30 முதல் 30,000 அடி உயரத்திற்கு மேலேயும் –MALE எனும் ரகம் 20 முதல் 30,000 அடி தொலைவிலும் பறக்கும் திறனுடையவை. மைக்ரோ ரக UAVக்கள் எளிதில் ஒருவராலேயே தூக்கிச்செல்லக் கூடியது. மினிரக UAV உள்ளங்கையில் அடக்கிவிடக்கூடிய அளவு மிகவும் சிறியது. அமெரிக்க விமானப்படை தற்போது UAV ரக ஊர்திகளை இயக்கும் பயிற்சியை விமானிகளுக்கு அளித்து வருகிறது.

                                                      ---நன்றி வார இதழ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக