பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 6 நவம்பர், 2013

பாடலின் வரிகள் - என்னை சாய்தாலே - என்றென்றும் புன்னகை

படம் : என்றென்றும் புன்னகை
பாடல் : என்னை சாய்தாலே
பாடியவர்கள் : ஹரிஹரன் ,ஸ்ரேயா கோஷல் 
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : தாமரை 


என்னை சாய்தாலே உயிர் தேய்த்தாலே
இனி வாழ்வேனோ இனிதாக..
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக

இதழோரத்தில் நகை பூத்தாளே
என்  பாவங்கள் தீர்த்தேன்
மழை ஈரத்தில் நனையாமல் நான்
வெளியேரத்தான் பார்த்தேன்
நடக்கிறவரை நகர்கிற தரை
அதன் மேல் தவிக்கிறேன்
விழிகளின் பிழை விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்

நேற்றுபோலே வானம்
அட இன்று கூட நீலம்
என் நாட்கள் தான் நீளும்
தள்ளிப்போக என்னும்
கால் பக்கம் வந்து பின்னும்
கேட்காதே யார் சொல்லும்
பறவை நான் சிறகு நீ
நான் காற்றை வெல்ல ஆசை கொண்டேன்
பயணம் நான் வழிகள் நீ
நான் எல்லை தாண்டி செல்லக் கண்டேன்

என்னை சாய்தாலே உயிர் தேய்த்தாலே
இனி வாழ்வேனோ இனிதாக..
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக

மாலை வந்தால் போதும்
ஒரு நூற்றிபத்தில் தேகம்
செங்காந்தாள் போல் காயும்
காற்று வந்து மோதும் உன்
கைகள் என்றே தோன்றும்
பின் ஏமாற்றம் தீண்டும்
தவிப்பதை மறைக்கிறேன்
என் பொய்யை பூட்டி வைத்துக் கொண்டேன்
கனவிலே விழிக்கிறேன்
என் கையில் சாவி ஒன்றை கண்டேன்

என்னை சாய்தாலே .....
இனி வாழ்வேனோ இனிதாக..
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக

இதழோரத்தில் நகை பூத்தாளே
என்  பாவங்கள் தீர்த்தேன்
மழை ஈரத்தில் நனையாமல் நீ
வெளியேரத்தான் பார்த்தாய்

நடக்கிறவரை நகர்கிற தரை
அதன் மேல் தவிக்கிறேன்
விழிகளின்  பிழை விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக