பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 12 நவம்பர், 2013

வாத்து மடையன்னு சொல்வியா இனி ?!?

வழக்கமாக துப்புத் துலக்க மோப்ப நாய்களைப் பயன்படுத்துவாங்க . நாய்களை குற்றவாளிகள் எளிதில் ஏமாத்திடுறாங்கனு  நாய்களைவிட மோப்ப சக்தியில் அதிக ஆற்றல் உள்ள வாத்துக்களை தங்கள் பணிகளுக்குப் பயன்படுத்தி வராங்களாம்  சீனக் காவல்துறை.


சீனாவின் - ஜின்ஜியாங் மாகாணத்தின் கிராமப்புறப் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் குற்றவாளிகளைத் துப்பறியவும், காவல் நிலையத்தைப் பாதுகாக்கவும் வாத்துக்களைப் பயன்படுத்துறாங்க .

காவல் நிலையத்தில் குற்றச் சம்பவங்களுக்குப் பயன்படுத்திய வாகனங்களை நிறுத்தி வைத்திருந்த பகுதியிலிருந்து, இரு சக்கர வாகனம் ஒன்றை நள்ளிரவில் திருட முயன்ற திருடனை சத்தம் போட்டே காட்டிக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அக்குற்றச் சம்பவத்தை ஒரு வாத்து தடுத்துள்ளதாகவும்சொல்றாங்களாம் இந்த காவலர்கள்.



இயற்கையாகவே வாத்துக்கு மோப்ப சக்தி அதிகமாகவும், கண்பார்வை கூர்மையாகவும் இருப்பதால் பழக்கமில்லாத புதிய நபர்களைக் கண்டதும் / மோப்பம் பிடித்ததும் ஒலி எழுப்புகின்றன என்றும், வாத்துக்களின் ‘க்வாக்... க்வாக்...’ சத்தத்தை அதனை வளர்ப்பவர்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்பதையும் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளது, Food Agriculture Organisation of United Nation என்கிற அமைப்பு.

அதுமட்டுமல்லாது, பல ஆண்டுகளாக பல்வேறு மனிதர்கள் தங்களின் உடைமைகளைப் பாதுகாக்க வாத்துக்களைக் காவலுக்காக வைத்துள்ளனர் என்று கூறுகிறது மற்றொரு ஆய்வு. அதுமட்டுமல்லாது, தென்கிழக்கு ஆசியாவில் வசிக்கும் மக்கள் நாய்க்குப் பதிலாக, வாத்துக்களைக் காவலுக்காகஇன்னைக்கும் பயன்படுத்திவராங்களாம்

                                                                 ----நன்றி வார இதழ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக