பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 10 நவம்பர், 2013

பாடலின் வரிகள் - வான் எங்கும் நீ மின்ன - என்றென்றும் புன்னகை

படம் : என்றென்றும் புன்னகை
பாடல் : வான் எங்கும்  நீ மின்ன 
பாடியவர்கள் : ஆலப் ராஜ் ,ஹரிணி 
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : மதன் கார்கி My love its all for you
The moon and the stars
Shine on you

வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் எண்ணக் கிண்ணத்தில் நீ உன்னை ஊற்றினாய்
கை அள்ளியே வெண் விண்ணிலே
ஏன் வண்ணம் மாற்றினாய்

வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் வானவில்லிலே நீ நூல் பறிக்கிறாய்
அந்நூலிலே உன் நெஞ்சினை ஏன் கோர்க்க பார்க்கிறாய்ஓ ஓ ப்ரியா ப்ரியா
இதயத்தில் அதிர்வு நீயா
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே
தரை வந்த வரம் நீயா

பூக்கள் இல்லா உலகினிலே
வாழ்ந்தேனே உன்னைக் காணும் வரை
நான் இன்றோ பூவுக்குள்ளே சிறை
பெண் வாசம் என் வாழ்வில் இல்லை என்றேனே
உன் வாசம் நுரை ஈரல் நான் தீண்டக் கண்டேனே
மூச்சும் முட்ட தான் உன் மேல் காதல் கொண்டேனே

வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் எண்ணக் கிண்ணத்தில் நீ உன்னை ஊற்றினாய்
கை அள்ளியே வெண் விண்ணிலே
ஏன் வண்ணம் மாற்றினாய்

பாலை ஒன்றை வரைந்திருந்தேன்
நீ காதல் நதியென வந்தாய்
நீ வாழ்வில் பசுமைகள் தந்தை
என் நெஞ்சம் நீர் என்றால் நீந்தும் மீனா நீ
என் காதல் காடென்றால் மேயும் மானா நீ
எந்த வெட்க தீயில் குளிர் காயும் ஆணா நீ

வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் எண்ணக் கிண்ணத்தில் நீ உன்னை ஊற்றினாய்
கை அள்ளியே வெண் விண்ணிலே
ஏன் வண்ணம் மாற்றினாய்

ஓ ஓ ப்ரியா ப்ரியா ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக