பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 13 நவம்பர், 2013

டிரைவ் பண்ணும் போது தயவு செஞ்சு இப்படி செய்யாதீங்க ...


தயவு செஞ்சு டிரைவ் பண்ணும்போது செல்போன்ல பேசாதீங்க..

மெசேஜ் அனுப்பிக்கிட்டே டிரைவ் பண்ணாதீங்க ..

பின்னாடி உக்காந்து இருக்குறவங்கள திரும்பி திரும்பி பாத்து பேசிக்கிட்டே டிரைவ் பண்ணாதீங்க..குடிச்சுட்டு டிரைவ் பண்ணாதீங்க...

இது 2வீலர் /4வீலர் ஏன் 6வீலர் /8வீலர் ஓட்டினாகூட ,ஓட்ற எல்லாருக்கும் பொருந்தும்..

இந்தியாவுலையே அதிகமா விபத்து நடக்குறது தமிழ்நாட்டுலதான் ..

ஒரு சின்ன பையன தன் மடியில உக்காரவச்சுகிட்டு ஒரு ஆள் கார் ஓட்டிக்கிட்டு போறார்,

செல்போன் பேசிக்கிட்டே பைக் ஓட்டிக்கிட்டு போறார் ஒருத்தர் ,

Notepad-ஐ ஸ்டீரிங் மேல வச்சுக்கிட்டு அதுல டைப் பண்ணிகிட்டே கார் ஓட்றார் ஒரு ஆள் ,

இத்தனையும் சென்னைல ஒரு பிஸி ஏரியால ஒரு பிஸி ரோடுல ... இவங்கள எல்லாம் என்ன பண்றதுனே தெரியல

அப்படி ஏதாவது ரொம்ப முக்கியமான போன் கால் ,பேசியே ஆகணும் ரொம்ப அவசர அழைப்புனா தயவு செஞ்சு ஓரமா வண்டிய நிறுத்திட்டு பேசிட்டு அப்பறம் டிரைவ் பண்ணுங்க..ப்ளீஸ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக