பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 9 நவம்பர், 2013

பாடலின் வரிகள் - இறகை போலே - நான் மகான் அல்ல

படம் : நான் மகான் அல்ல 
பாடல்:இறகை போலே 
பாடியவர்:யுவன் ஷங்கர் ராஜா
இசை:யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர் :நா.முத்துக்குமார்


இறகை போலே அலைகிறேனே
உந்தன் பேச்சை கேட்கையிலே
குழந்தைபோலே தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டையிலே
தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னை தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சுக்காற்றுப் பட்டதும்
அணியாயக்காதல் வந்தது
அடங்காத ஆசை தந்தது
எனக்குள்ளே ஏதோ மின்னல் போலே
தொட்டுச்சென்றதுகண்ணோரம் காதல் வந்தால்
கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவை இல்லை
நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால்
எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவை இல்லை
நீமட்டும் போதும் போதும்

கூட வந்து நீ நிற்பதும்
கூடு விட்டு நான் செல்வதும்
தொடருதே தொடருதே நாடகம்
பாதி மட்டுமே சொல்வதும்
மீதி நெஞ்சிலே என்பதும்
புரியுதே புரியுதே காரணம்
நேரங்கல்  தீருதே வேகங்கள் கூடுதே
பூவே உன் கண்ணுக்குள்ளே
பூமி பந்து சுத்துதே

கண்ணோரம் காதல் வந்தால்
கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவை இல்லை
நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால்
எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவை இல்லை
நீமட்டும் போதும் போதும்

என்னானதோ ஏதானதோ
இல்லாமல் போச்சே தூக்கமும்
கண்ணே உன்னை காணாமல் நான் இல்லை
என் மீதிலே உன் வாசனை
எப்போதும் வீசப்பார்க்கிறேன்
அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை
நீ என்னை காண்பது
வானவில் போன்றது
தூரத்தில் உன்னைக் கண்டால் தூறல் நெஞ்சில் சிந்துது

கண்ணோரம் காதல் வந்தால்
கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவை இல்லை
நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால்
எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவை இல்லை
நீமட்டும் போதும் போதும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக