பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 14 செப்டம்பர், 2026

உங்க சலுகைகளே கடைசியில வேலைக்கு தடையா இருக்க போகுது

 இப்போ கவர்மெண்ட் வந்து புதுசா ஒரு ரூல்ஸ் போட்டு இருக்காங்களாமே. அதாவது மூன்றாவது குழந்தை பிறக்கிற சமயத்திலயும் அந்த பெண்ணுக்கு ஒரு வருஷம் சம்பளத்தோட லீவு கொடுக்குற  மாதிரி. அதாவது அல்ரெடி  ஃபர்ஸ்ட் டெலிவரி அப்போ ஒரு வருஷம் சம்பளத்தோட லீவும்.,அதே மாதிரி இரண்டாவது டெலிவரி அப்பயும் சம்பளத்தோட ஒரு வருஷம் லீவும் கொடுத்துட்டு இருந்தாங்க. மூன்றாவது குழந்தைக்கு சம்பளத்தோடஆறு மாதம் லீவு கொடுத்துருக்காங்க. ஆனா அந்த ஆறு மாதத்தை இப்போ மறுபடியும் ஒரு வருஷமா நீட்டிச்சு இருக்காங்க. 

 இது கவர்மெண்ட் ஆபீஸ்ல வேலை செய்றவங்களுக்கு சூப்பர். ஓகே. நீங்க கவர்மெண்ட் நீங்க உங்களால காசு கொடுக்க முடியும் நீங்க பண்றீங்க. ஒரு பெரிய பிரைவேட் கம்பெனி அப்படின்னா சரி. இப்போ வளர்ந்துட்டு வர ஒரு சின்ன கம்பெனினு வச்சுக்கோங்க. அப்போ அந்த கம்பெனியால எப்படி இப்போ ஆறு மாத கால லீவும் சம்பளமும் கொடுக்க முடியும்?..அந்த பொண்ணு  மினிமம் 80 நாள் அதாவது அந்த டெலிவரிக்கு முன்னாடி மினிமம் 80 நாள் வந்து அந்த ஆபீஸ்ல வேலை செஞ்சு இருக்கனும் அப்படின்னு ரூல்ஸ்.

 இப்போ ஒருத்தவங்க வந்து ஒரு ஆபீஸ்ல ஜாயின் பண்றாங்க ,இன்னும் மூணு மாசத்துல எனக்கு டெலிவரி அப்படின்னுட்டு சொல்லிட்டு ஒருத்தவங்க வந்து ஜாயின் பண்ண முடியுமா?  இப்படி ஒரு ரூல்ஸ் இருந்துச்சி அப்படின்னா அந்த ஆபீஸ் அந்த பெண்ணை வேலைக்கு எடுப்பாங்களா? 

ஒரு வேளை அப்படி இல்லாம ஒருத்தவங்க வந்துட்டு ஒரு 5 மாதம் அந்த ஆபீஸ்ல வேலை செய்றாங்க. ஜாயின் பண்ணும் போது அவங்க பிரெக்னன்ட் அப்படிங்கறதை சொல்லாம ஜாயின் பண்ணிடுறாங்க. ஒரு 4-5 மாதத்துலயே அவங்களுக்கு டெலிவரி டைம் வருது அப்படின்னா அவங்களுக்கு ஆறு மாதம் லீவு பிளஸ் அதுக்கான சம்பளத்தையும் கொடுக்கணும் .

இப்போ இப்படி நீங்க ரூல்ஸ் வச்சீங்க அப்படின்னா எப்படி ஒரு கம்பெனிக்காரன் ஒரு பொண்ண வேலைக்கு எடுக்கிறத யோசிக்காம வேலைக்கு எடுப்பான். கொஞ்சம் யோசிச்சு பாருங்க. சாமி, பொண்ணே வேலைக்கு வேணாம்னு தானே நினைப்பானே தவிர.கல்யாணம் ஆன  பொண்ணே வேலைக்கு வேணாம்னு நினைப்பானே தவிர எப்படி அவன் வேலைக்கு எடுக்கலாம்னு நினைச்சு வேலையை எடுப்பான். 

ஒரு வளர்த்து வரும் ஒரு சின்ன கம்பெனி இடத்துல இருந்து நீங்க யோசிச்சு பாருங்களேன் , எவ்ளோ கஷ்டம் அவங்களுக்கு இந்த சலுகைனு . முட்டி மோதி எப்படியாவது கம்பனிக்கு ப்ரோஃபிட் ஏத்தனும்னு வேலை செஞ்சா எதுவுமே செய்யாம 6 மாசம் இப்படி லீவோட சம்பளம்னு கொடுக்க சொன்னா அந்த கம்பெனி நிலைமையை நினச்சு பாருங்க .சில வருஷம் அந்த கம்பெனில வேலை செஞ்சு லாயலா இருக்கிறவங்களுக்கு கம்பெனி கண்டிப்பா சில சலுகைகளை கொடுக்கும்.ஆனா இப்போதான் சேருறாங்க , ஒரு ஒர்க் கத்துக்கிட்டு அதுல தடை இல்லமா வேலை செய்ய குறைஞ்சது 5 மாசமாவது ஆகும் , சரியா அப்படி ஆகுற சமயத்துல லீவு குடுத்து சம்பளம் குடுத்து போக சொன்னா , அது அந்த கம்பனிக்கு நஷ்டம் தான்.

ஒரு பொண்ணா நீங்கள் கொடுக்குற இந்த சலுகைகள் ரொம்ப உபயோகமாக இருக்கும். ஆனா இதே  ஒரு கல்யாணமான பொண்ணுங்களுக்கு வேலை கிடைக்கிறதுல  கஷ்டம் அப்படிங்கற நிலைமைக்கும்  கொண்டு போய்விடப் போகுது .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக