பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 29 செப்டம்பர், 2026

பாடலின் வரிகள் - ஏஸ் - உருக்குது உருகுது உரை பனி உருகுது

 படம் : ACE (ஏஸ்)

பாடியவர்கள்  : கபில் கபிலன், ஸ்ரேயா கோஷல்
பாடல் எழுதியவர் : தாமரை
இசை : ஜஸ்டின் பிரபாகரன் 




உருகுது உருகுது உரை பனி உருகுது
நானே ஓர் இரவில் நதியானேன் கார் இருளில்
வழியெங்கிலும் பூக்கள் நீரில்
மருகுது மருகுது மனமெல்ல மருகுது
ஏனோ என் வரையில் கரையானேன் பால் நிலவில்
வரும் ஒவ்வோர் நாளும் தீயில்
அலாதி சுகம் அது என் நரகம்
அதாக வரும் அது என்னைச் சுடும்
வரும் நாட்கள் மனப்பூக்கள் உனக்காக பூக்கும்
நிறைய  நேரப் பேச நினைக்கிறேன்
குறைய பேசி முடிக்கிறேன்
இடைப்பட்ட நேரம் உன்னை பார்த்துக் கொண்டே நிற்கிறேன்

உனது பேச்சை ரசிக்கிறேன்
விழியின் வீச்சில் திளைக்கிறேன் 
விருந்தோம்பல் காலம் தீர்ந்து வீட்டின் ஆளாய் பார்க்கிறேன்

நீ கலக்கலாக ஓ சிரிப்பதற்காக
என்ன விலை தர வேண்டும் என்றாலும் நான் தரப் போகிறேன்

இருள் விலகிடும் சூரியனாலே
முகம் மலர்ந்திடும் தாமரை ஆனேன்
எதைப் பார்த்தும் யாரைப் பார்த்தும் நெருங்கா நான்
உன்னை பார்த்த பின்புதானே தளர்வானேன்

சருகாய் இருந்தேன் சாமரம் ஆனேன்
உருக்குது உருகுது உரை பனி உருகுது
நானே ஓர் இரவில் நதியானேன் கார் இருளில்
வழியெங்கிலும் பூக்கள் நீரில்
மருகுது மருகுது மனமெல்ல மருகுது
ஏனோ என் வரையில் கரையானேன் பால் நிலவில்
வரும் ஒவ்வோர் நாளும் தீயில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக