பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 15 அக்டோபர், 2013

என்ன சாதிச்சுட்டோம் ?

14 மொழிகளில் 8000-த்திற்கும் அதிகமான பாடல்களை பாடின வாணிஜெயராம் அம்மாவிற்கு ,ஃபிலிம்ஃபேரின் 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கப்பட்டது..அப்போ அவங்க பல்வேறு மொழிகள்ல தான் பாடிய பாடிகளில் இருந்து ரெண்டு வரி பாடினாங்க..பாடும்போது அவங்க தன்னோட செருப்பை கழட்டிட்டு பாடினாங்க.பாடி முடிச்சதும் தான் செருப்பை மறுபடியும் காலில் போட்டுகிட்டாங்க....இந்த மரியாதை ,தொழில் பக்தி இந்த கால இளம் பாடகர்களில் எத்தனை பேருக்கு இருக்கு?


20000-த்திற்கும் மேல பாடல்களை பாடின SPB சார்,ஜானகி அம்மா.சித்ரா அம்மா இப்பவும் பணிவா,தன்னடக்கத்தோட தான் இருக்காங்க..ஆனா ஒன்னு ரெண்டு படத்துல ஒன்னு ரெண்டு பாட்ட பாடிட்டு நம்ம இளசுகள் சிலபேர் பண்றத பாக்கும்போது பெரும் அக்கப்போராக அல்லவா இருக்கின்றதுனு புலிகேசி சொல்றமாதிரி சொல்லவேண்டியதா இருக்கு...

எங்க இருந்து வருது நமக்கு இந்த 'தலைக்கனம்'? என்ன அப்படி சாதிச்சுட்டோம் நமக்கு 'தலைக்கனம்' வருது?



நான் யாரோட உதவியும் இல்லாம முன்னுக்கு வந்தேன்னு ஒருத்தர் சொல்லமுடியுமா?..இந்த உலகத்துல இருக்குற ஒரு ஒருத்தரும் கண்ணுக்கு தெரிஞ்சோ கண்ணுக்கு தெரியாமலோ யாரோ ஒருவரோட உதவியோட தான் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்..

எந்த தொழிலாகட்டும் , அந்த தொழிலை கத்துக்குடுத்தவர்னு ஒருத்தர் நமக்கு இருப்பார்,இல்ல அவர பாத்துக்கத்துக்கிட்டேன்னு சொல்லக்கூடிய ஒருத்தர் இருப்பார்..இல்ல இவரப்பாத்து அதுமாதிரி ஆகணும்னு நான் நினச்சேன் உழச்சேன் முன்னுக்கு வந்தேன்னு சொன்னா அது முட்டாள் தனம் தான்..நமக்கு முதல் முதல்ல வாய்ப்புக் குடுத்தவங்க இல்லைனா நாம ஒரு வேலையை/தொழிலை செஞ்சிருக்க முடியாது,அதுல சாதிச்சு இருக்க முடியாது..

நாம தினமும் யூஸ் பண்ற ப்ரஷ்,பேஸ்ட்,கார்,போன்,ஏ.சி சாப்பிடுற சாப்பாடு,அரிசி பருப்பு,போடுற டிரஸ் வரைக்கும் எல்லாத்துலையும் யாரோ ஒருத்தரோட/இல்ல பல பேரோட உழைப்பும் உதவியும் இருக்குதானே...

எங்க இந்த எல்லா வேலையையும் நாமளே பாத்துக்கிட்டு நமக்கு வேண்டியதை எல்லாம் நாமளே தயார் படுத்திக்கிட்டு வாழுரோமா?அப்டி வாழ்ந்தா நான் யார் உதவியும் இல்லாம வாழ்றேனு சொல்லி 'தலைக்கனம்'மா இருங்க...

நீங்க எவ்ளோ பெரிய கோடிஸ்வரனா,மில்லினியரா,பில்லினியரா இருந்தாலும் உங்களுக்கு கீழ வேல செய்யுற தொழிலாளிகள் இல்லைனா நீங்க  அந்த உயரத்துக்கு இன்னைக்கு வந்துருக்க முடியாது...'உழைப்புக்கு தகுந்த ஊதியம்' குடுத்துடறோம் தானேனு சொல்லலாம்...

நீங்க சரியான ஊதியம் குடுத்தா முதலாளி தொழிலாளி,பணக்காரன் ஏழை,நடுத்தரவர்கதுக்காரன்னு இருக்க மாட்டோமே....சமமா இருப்போமே...

ஒரு பகுதி பங்க அவங்களுக்கு குடுத்துட்டு பெரும் பகுதி பணத்தை முதலாளிகள் வச்சுக்குறாங்க இல்லையா?உண்மைதானே.....ஸோ ,உங்க ஆடம்பர வாழ்க்கைக்கு கூட இன்னொர்தர் /பல பேரோட உழைப்பு காரணாமா இருக்குங்கறதை நாம எப்பவும் மனசுல நினச்சாலே 'தலைக்கனம்' வர வாய்ப்பு இருக்காது....

இதை உணர்ந்து 'தலைக்கனம்' இல்லாமா எல்லாரையும் மதிச்சு வாழப்  பழகுவோம்


2 கருத்துகள்:

  1. தலைக்கனம் கூடாதென்பதை அருமையாக உணர்த்திய பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  2. அத சொன்னோம்ன்னா இந்த காலத்து புள்ளைங்க எங்க கேக்குதுங்க.....கிண்டல் பண்ணுதுங்க...மூட நம்பிக்கை அப்பிடின்னுது சொல்லுதுங்க....

    பதிலளிநீக்கு