பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 30 அக்டோபர், 2013

எப்படித்தான் யோசிப்பாங்களோ ?


சீனாவுல ஆண், பெண் பாலின விகிதாசாரத்துல ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை குறைவா இருக்கு இதனால கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்குறது பெரும் பாட இருக்காம்.அதேசமயம் 18 கோடிப் பெண்கள் துணையின்றி தனியே வசித்து வருவதா சொல்றாங்க. இதனால சீனப் பெண்களுக்கு உள்நாட்டில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக சீனாவில் பெண்களுக்கெதிராக கடத்தல் மற்றும் பாலியல் சம்பவங்களும் அதிகரிச்சு வருது .

இந்தச் சூழ்நிலையை சாதகமாக்கி, சீனாவின் முக்கிய ஆன்லைன் விற்பனை நிலையமான, ‘தோபோ டாட்.காம்’ (Taobao.com) என்கிற நிறுவனம், ஒரு புதுத்திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கு. அதுதான், பெண்களுக்கு துணையாகச் சென்று வர, ஆண் நண்பர்களை வாடகைக்கு அனுப்பி வைக்கும் திட்டம்.

இத்திட்டத்தின்படி, வெளியூர், கடைகள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் எந்தவொரு இடத்திற்கும் தனியாக செல்லத் தயங்கும் பெண்கள், இந்த நிலையத்தை அணுகி ஆண்களை அழைத்துச் செல்லலாம். இதற்கு ஒரு மணி நேரத்திற்கு வாடகையாக, 3,000 யுவான்கள் ( இந்திய மதிப்பில் 29,000 ரூபாய்) சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படுதாம்..

இந்த வேலையை  சில  கல்லூரி மாணவர்கள் பகுதி நேரமாகசெய்றாங்க . மேலும், வேலை தேடும் இளைஞர்களும் தற்காலிகமாக இங்கு பணிபுரியிறாங்கலாம்..
                        நல்லா யோசிக்க்குறாங்கயா .....

1 கருத்து: