பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 9 அக்டோபர், 2013

காலி பாட்டிலுக்கு ரயில் டிக்கெட் !!!!

காலி குடிநீர் பாட்டில்களை குடுத்து ரயில் டிக்கெட் வாங்குற முறையை பீஜிங் அரசு செஞ்சுருக்காங்கலாம்.


சீனாவுல ரயில்ல பயணம் செய்றவங்க ,அங்க அங்க காலி பாட்டில்களை தூக்கி போட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துறாங்கனு அந்த நாட்டு அரசு காலி குடிநீர் பாட்டில்களை மறுசுழற்சி செய்ய ஒரு ஐடியா பண்ணிருக்காங்க.

ரெண்டு சப்வே ரயில் நிலையத்துல காலி பாட்டில்களை சேகரிக்கும் இயந்திரத்தை வச்சுருக்காங்க.ஒரு காலி பாட்டிலை இந்த இயந்திறத்துல போட்டா 0.15 டாலர் தொகை அவங்களுக்கு கிடைக்கும்.15 பாட்டில்களை போட்டால் குறிப்பிட்ட தூரத்துக்கு ரயில்ல பயணம் செய்ய டிக்கெட் எடுக்குற அளவுக்கு பணம் கிடைக்குமாம்.

நல்ல ஐடியா தான்.....

இடத்தை சுத்தமா வச்சுக்க என்ன என்ன தில்லாலங்கடி வேல செஞ்சு மக்களை கவரவேண்டியதா வேண்டியதா இருக்கு..

1 கருத்து:

  1. இங்கு அமெரிக்காவிலும் பல மாநிலங்களில் காலிபாட்டில்கள் சோடா கேன் களை இப்படி போட்டு காசு பெறலாம். அநேக சூப்பர் மார்கெட்டில் இதற்கென மிஷிங்கள் உண்டு

    பதிலளிநீக்கு