பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 16 அக்டோபர், 2013

உடல் உறுப்பு,ரத்த தானம் - டோனார் கார்டு

நாம இறந்ததுக்கு அப்பறம் நம்முடைய உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலமா பல பேரின் வாழ்க்கைக்கு நல்லது செஞ்ச திருப்தி மட்டும் இல்லாம அவங்க மூலமா நாம இறந்ததுக்கு அப்பறமும் இந்த உலகத்துல வாழ்ந்துகிட்டே தான் இருப்போம்......

நாம இறந்ததுக்கு அப்பறம் ,யாருக்கும் உபயோகப்படாம எறிஞ்சு சாம்பல் ஆகவோ இல்ல மக்கி அழுகப் போகும் இந்த உடல் உறுப்புகளை தானம் பண்ணலாமே நாம்..


உடல் உறுப்பு தானம் பண்றதை பற்றியான விழிப்புணர்வு இப்போ நிறையவே இருக்கு....

நீங்க உடல் உறுப்பு தான் செய்ய விருப்பப்பட்டீங்கனா  கீழுள்ள இன்டர்நெட் பேஜ்க்கு போங்க அதுல ரெஜிஸ்டர் பண்ணுங்க..அதுல இருக்கும் டோனார் கார்ட் ப்ரிண்ட்அவுட் எடுத்து எப்பவும் உங்க கூட இருக்குற அட்ரஸ் ஃப்ரூப் ,ATM கார்ட் ,கிரெடிட் கார்ட் கூட இதையும் வச்சுக்கோங்க..



http://www.ndtv.com/convergence/ndtv/new/NDTV-Show-Special.aspx?ID=526

or

http://www.mohanfoundation.org/download_donorcard.asp

முக்கியமான விஷயம் ,நாம்  இறந்த பிறகு உடலுறுப்பு தானம் செய்ய நமக்கு விருப்பம் இருக்குனு நம்ம உறவினர்கள்/ நண்பர்கள் கிட்ட சொல்லிவைக்கணும் அதுதான் முக்கியம்..

என்னதான் நாம ரெஜிஸ்டர் பண்ணினாலும் நாம இறந்ததுக்கு அப்பறம் நம்மால நம்ம விருப்பதை சொல்ல முடியாதுல்ல அதனால நம்ம குடும்பத்தோட முழு விருப்பமும் இருக்கணும் இதுல..இந்த மாதிரி டோனார் கார்டு நம்ம கூட இருந்தா நம்ம விருப்பம் மத்தவங்களுக்கு தெரியவரும்.

என்னைக்காவது ஒரு நாள் கண்டிப்பா எல்லாரும் சாகத்தானே போறோம் அப்போ கூட நம்மளால முடிஞ்ச இந்த உதவியை மத்தவங்களுக்கு செஞ்சுட்டு போவோமே ...

அதே போல , நாம இருக்குற வரை ரத்த தானம் பண்ணலாமே..
ரத்த தானம் செய்றதன் மூலமா நம்முடைய பழைய ரத்தம் போய் புது ரத்தம் நம்ம உடம்புக்குள்ள உருவாகும்..அது நம்முடைய ஹெல்த்துக்கும் நல்லது..பொதுவா பெண்கள் ரத்த தானம் பண்ணனும்னு ரொம்ப அவசியம் இல்ல..இயற்கையாகவே அவங்களுக்கு பழைய ரத்தம் போய் புது ரத்தம் உருவாகும் ...ஆனா ,உடம்புல சரியான சத்தும்,சரியான எடையும் இருந்தா அவங்களும் தாராளமா ரத்த தானம் பண்ணலாம்..

இதுவரை ரத்த தானம் பண்ணாதவங்க இனியாவது செய்ய ஆரம்பியுங்க..முதல்ல உங்க ரத்த வகை (ப்லட் க்ரூப் )என்னனு தெரிஞ்சுவச்சுக்கோங்க ...(நான் மட்டும் மெடிக்கல் டிபார்ட்மெண்ட்ல இருந்தேனா சில்ளு சில்ளு பேசுற சில பேர் வாயிலையே ஊசி குத்தி நாலு யூனிட் ரத்தம் எடுத்துருப்பேன்   :))    )

எந்த வகை ரத்தம் இருக்குறவங்க, எந்த வகை இருக்குறவங்களுக்கு ரத்த தானம் பண்ணலாம்னு தெரியுமா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக