பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 18 அக்டோபர், 2013

இதெப்டி இருக்கு?

இதயத்துல கோளாறுனு ஓரளவுக்கு பிரச்சனை பெருசானதுக்கு அப்பறம் தான் நமக்கு தெரியவரும்.இதயத்துல ஏற்படுற மாற்றத்தை டாக்டர்க்கு உடனடியா 24 மணிநேரமும் தானா தெரியப்படுத்தினா எப்படி இருக்கும்?

இப்படியும் கண்டுபிடிச்சு இருக்காங்க.இது ஒரு சின்ன கருவி.தா நம்ம உடம்புல சின்ன ஆபரேஷன் மூலமா பொறுத்திட்டா ,இதயத்தோட செயல்பாடு ,நுரையீரல்ல நீர்கோர்வை ,நாடித்துடிப்பு எல்லாத்தையும் துல்லியமா கணக்கெடுத்திடுமாம் இந்த கருவி.

நாடித்துடிப்பு குறஞ்சா ,அத அதிகரிக்க பயன்படுற பேஸ்மேக்கராவும்,இதயத்தோட செயல்பாடு குறஞ்சா அதை சரி பண்ற 'ரீசிங்கரனைஷேஷன் டிவைஸ்' ஆக ,நாடிதுடிப்பைஉம் இதய துடிப்பையும் சரி பண்ற டீபிப்ரில்லேட்டெர் ஆக இந்த கருவி செயல்படுமாம்.

இந்த கருவி தானாகவே வயர்லெஸ் மூலமா 5 மீட்டர் தொலைவுக்குள்ள இருக்குற செய்தி கடத்தி கருவிக்கு தெரிவிச்சுடுமாம் .அது சர்வரை அடஞ்சு டாக்டரோட செல்போன்  இல்ல ஈமெயில் முகவரிக்கு செய்தி போயிடுமாம் .

அவசர நிலைமைனா சிவப்பு நிறத்துல லைட் ,சீரான நிலைமைனா மஞ்சள் நிற லைட் எரியுமாம் .

எவ்ளோ சிம்பிள் ஆக்கிட்டாங்க வேலையை ..என்ன சொல்றீங்க?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக