பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 26 அக்டோபர், 2013

டெடி பியர் - பேர் ஏன் வந்ததுன்னு தெரியுமா?

அநேகமான இந்த காலேஜ் படிக்குற பொண்ணுங்களுக்கு டெடி பியர் பொம்மைனா  ரொம்ப பிடிக்கும், பல பெண்களுக்கு ரொம்ப நெருங்கிய ஃப்ரண்ட் இந்த டெடி பியர் பொம்மை தான்.. சின்ன குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும்...

டெடி பியர் பொம்மையை பிடிச்ச வளந்த குழந்தைகள் மற்றும் வளராத குழந்தைகளுக்கு பியர் பொம்மைக்கு 'டெடி பியர்'-னு பேர் ஏன் வந்ததுன்னு தெரியுமா?

கரடி பொம்மை முதல் முதல்லா அமெரிக்காவில் தான் அறிமுகம் ஆச்சு...
அப்போ அமெரிக்க அதிபரா இருந்த 'தியடோர் ரூஸ்வெல்ட்' வேட்டையாடுறதுல ரொம்ப விருப்பமா இருந்தார்.1902-ஆம் வருஷம் நவம்பர் 14 -ல மிசிசிபி பகுதியில அவர் வேட்டையாதிட்டு இருந்தப்போ , ஒரு சின்ன கரடி அடிப்பட்டு இருக்குறதை பாத்துருக்கார்..அவர் கூட வந்தவங்க அந்த கரடியை சுட்டுட சொல்லி சொல்லிருக்காங்க ..ஆனா அதிபர் அதை சுடாம விட்டுட்டார்.

இந்த செய்தி நாடு முழுக்க பரவி ,பத்திரிக்கைல அந்த கரடிக்குட்டியோட புகைப்படத்தோட  செய்திகள் வந்துருக்கு..
அதிபர் 'தியடோர் ரூஸ்வெல்ட்' -க்கு 'டெடி ' -னு செல்லப் பேரும் இருந்துருக்கு...அந்த நேரத்துல அதிபர் 'தியடோர் ரூஸ்வெல்ட்' -டையும் கரடிக் குட்டியையும் சேத்து பத்திரிக்கைல கார்ட்டூன் படம் போட்டு அதுக்கு 'டெடி - பியர்'-னு தலைப்பு வச்சுருக்காங்க .அதாவது 'ரூஸ்வெல்ட்டும்  -கரடியும்' - னு அர்த்தம்...

இந்த பெயரை பொம்மை நிறுவனங்கள் எல்லாம் பயன்படுத்திக்கிட்டு இந்த பொம்மைக்கு 'டெடி-பியர்' - னு பேர் வச்சுருக்காங்க.அப்போதிலிருந்து இந்த பெயர் கொண்ட பொம்மை பிரபலம் ஆகிடுச்சு..

அமெரிக்காவுல நவம்பர் 14 - டெடி பியர் தினம்னு கொண்டாடுறாங்களாம்..(ஏம்பா அப்டியா?)

                                                            ---நன்றி நாளிதழ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக