பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 29 டிசம்பர், 2016

அர்ஜுனனும் ஆணவமும் !!



பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி,அர்ஜூனா! போர் தான் முடிந்து விட்டதே! இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய்.

தேரை விட்டு இறங்கு! என்றார்.

மைத்துனா! நீ என்னை போரில் வெற்றி பெறச் செய்தாய். மகிழ்ச்சி! ஆனால், வெற்றி பெற்றவனை, தேரோட்டி தான் கையைப் பிடித்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டே! அதை மறந்து விட்டாயே! அப்படி செய்வது எனக்கும் பெருமை அல்லவா! நீயோ என்னைக் கீழே இறங்கு என்று ஆணையிடுகிறாய்.இது என்ன நியாயம்?

அர்ஜுனனின் வார்த்தைகளை கிருஷ்ணர், காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. ""தேரை விட்டு இறங்கு!'' என்றார் கண்டிப்புடன்.

வருத்தத்துடன் அர்ஜுனன் கீழிறங்கினான்.

அப்போது அவர், தேரின் பக்கத்தில் நிற்காதே! சற்று தள்ளி நில்! என்றார் அதட்டலுடன்!

அர்ஜூனனால் கிருஷ்ணரின் அதட்டலைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. வெற்றி பெற்ற மகிழ்ச்சி கூட மனதை விட்டு அகன்றுவிட்டது.

ஒன்றும் புரியாதவனாய் தள்ளி நின்றான்.

வாடிய முகத்துடன் நின்ற அவனைக் கண்டு புன்னகைத்த கிருஷ்ணர், தேரிலிருந்து குதித்து ஓடிச்சென்று, அர்ஜுனனை இறுகக் கட்டியணைத்துக் கொண்டார்.

அந்த கணமே தேர் தீப்பற்றி எரிந்தது.

பார்த்தாயா? தேர் எரிகிறது! அதனால் தான் உன்னை இறங்கச் சொன்னேன்! என்றார் புன்முறுவலுடன்.

'தேர் ஏன் எரிந்தது?' அர்ஜுனன் ஏதும் புரியாமல் கேட்டான்.

அர்ஜூனா! போர் புரியும்போது கவுரவர்கள் உன் மீது பல அஸ்திரங்களை ஏவினர்.அவற்றின் சக்தி அளவிட முடியாதது. தேரில் நானும், தேர்க்கொடியில் அனுமனும் இவ்வளவுநேரம் அதை தடுத்துக் கொண்டிருந்தோம். அதனால், அவை வலிமையற்றுக் கிடந்தன.தேரை விட்டு நான் குதித்ததும், தேர்க்கொடியில் இருந்து அனுமனும் புறப்பட்டு விட்டான்.அஸ்திரங்களின் சக்தி தலைதூக்கியது.தேர் பற்றி எரியத் தொடங்கிவிட்டது.உண்மை இப்படி இருக்க, நீயோ போரில் வெற்றி பெற்ற உன்னைக் கவுரவிக்கவில்லை என்று வருத்தப்படுகிறாய்.வெற்றி பெற்றதும் "நான்' என்னும் ஆணவம் உனக்கு வந்து விட்டது.ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை மறந்து விடாதே என்று அறிவுரை கூறினார்.

தேர் பற்றி எரிந்ததுபோல, அர்ஜுனனிடம் இருந்த ஆணவமும் பற்றி எரிந்து சாம்பலானது.

இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை !

வெள்ளி, 23 டிசம்பர், 2016

மிதக்கும் பாலம்


சீனாவில் ஒரு வித்தியாசமான பாலத்தை தண்ணீரின் மீது கட்டியிருக்கிறார்கள். முழுக்க மரத்தினால் கட்டப்பட்ட இந்த மிதக்கும் பாலம், மத்திய சீனா ஹூபாய் மாகாணத்தில் ஓடும் ஒரு நதியின் மீது அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நடைப் பாலத்தின் மீது சுற்றுலாப் பயணிகள் நடந்தவாறே இயற்கையை ரசிக்கலாம்.

வியாழன், 17 நவம்பர், 2016

ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்...

சிலர் இதை அறிந்திருக்கலாம், சிலர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால், இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்து ஆன்மீக விஷயமாகும்.

எந்தவொரு அறிவியல் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப கருவிகளும் இல்லாத பண்டைய காலத்திலேயே சிவனின் பஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும், இந்தியாவில் ஒரே நேர்கோட்டில் கட்டப்பட்டிருக்கின்றன. மிக கச்சிதமாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் இதை எளிதாக எதிர்பாராமல் நடந்த விஷயமாக கருத முடியாது. கேதார்நாத்லிருந்து, ராமேஸ்வரம் வரை நேர்கோட்டில் கோவில்களை எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள் என்பது இன்றளவும் நீடிக்கும் மர்மமாகவே இருந்து வருகிறது.


பஞ்சபூத ஸ்தலம்:
நிலம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
நெருப்பு - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
நீர் - திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில்
ஆகாயம் - சிதம்பரம் நடராசர் கோயில்
காற்று - திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில்

செவ்வாய், 1 நவம்பர், 2016

செம்புல இத்தனை இருக்கா?



செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, 4 மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன. ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன. பித்தளை பாத்திரத்தில் 4 நாட்கள் உயிர் வாழ்கின்றன. ரத்தத்தில் செம்புக் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை குறைகிறது. இ-கோலி பாக்டீரியாவைக் கொல்லும் திறன், செம்பு உலோகத்திற்கு உண்டு என, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்..

புதன், 19 அக்டோபர், 2016

சுவிட்சர்லாந்து டு ஜெர்மனி – 8 நிமிடம் தான்!

சுவிட்சர்லாந்து டு ஜெர்மனி – 8 நிமிடம் தான்! இதுதான் மிக குறைந்த நேர சர்வதேச விமான சேவை!

இந்த விமான சேவை, சுவிட்சர்லாந்தின் செயின்ட் கேலனில் இருந்து ஜெர்மனியின் பிரைட்ரிச்ஷபென் வரை என அறிவித்துள்ளது இந்த நிறுவனம்.

கான்ஸ்டன்ஸ் ஏரியின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு செல்லும் இந்த விமானத்தின் பாதை தொலைவு வெறும் 20 கிலோமீட்டர் மட்டுமே. இந்த விமான பயனத்திற்கு 40 யூரோக்கள் செலவாகும் என கூறப்படுகிறது. இந்த இரு ஊர்களுக்கு இடையே ரயில் வழியாக சென்றால் கூட 1 மணி நேரம்தான் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் ஆஸ்திரியா, வியன்னாவில் இருந்து ஸ்லோவாக்கின் பிரட்ஸ்லாவா வரை இயக்கப்பட்ட விமானம் தான் மிக குறைந்த நேர சர்வதேச விமான சேவையாக இருந்தது. இதன் தொலைவு 50 கிலோமீட்டர் மற்றும் விமான பயண நேரம் 10 நிமிடம் என்பது குறிப்பிடத்தக்கது.


                                  ----நன்றி சமூக வலைத்தளம் 

வியாழன், 13 அக்டோபர், 2016

காரணம் இல்லமா சொல்லல பெரியவங்க !!!

1.தாழ்ப்பாளை சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆட்டக்கூடாது. அப்படிச் செய்தா... வீட்டுல சண்டை வரும்.'

அதாவது, தாழ்ப்பாளை அடிக்கடி ஆட்டினால், கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் தாழ்ப்பாள், லொட லொடக்க (ஸ்க்ரூ, சக்கை கழன்று) ஆரம்பித்துவிடும். திருடர்கள் வீட்டுக்குள் சுலபமாக வருவதற்கு நாமே வழி ஏற்படுத்தியது போலாகிவிடும்.


2. 'வீட்டுக்குள்ள நகம் வெட்டினா... வீடு விளங்காது.'

வெட்டித் துண்டாகும் நகம் எங்காவது தெறித்து விழும். சமயங்களில் உணவுப் பொருளில்கூட கலக்க வாய்ப்புண்டு. காலில்கூட அது ஏறி... வில்லங்கத்துக்கு வழிவகுத்துவிடும்.


3. 'நகத்தைக் கடித்தால் தரித்திரம்.'

நக இடுக்குளில் உள்ள அழுக்கு, வாய் வழியாக உடலுக்குள் சென்று, பல்வேறுவிதமான நோய்களுக்கு வழி ஏற்படுத்திவிடும்.


4. 'உச்சி வேளையில கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.'

கிணற்றுக்குள் பல்வேறு விஷவாயுக்கள் உற்பத்தியாகும். உச்சிவெயில் நேரத்தில் நேரடியாக சூரிய வெளிச்சம் கிணற்றுக்குள் விழுவதால் அந்த வாயுக்கள் வெப்பத்தால் லேசாகி மேலே பரவும். எட்டிப் பார்ப்பவர்களை அது தாக்கினால் ஆபத்து.

வெள்ளி, 7 அக்டோபர், 2016

Whatsapp Update !!

வாட்ஸ் அப்-பில் 2.16.272 என்ற புதிய அப்டேட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட அந்த அப்டேட் மூலம் இனி வாட்ஸ் அப்-பில் குழு சாட் செய்யும் போது, குழு உறுப்பினர்களை தனியாக Tag செய்யலாம்.


எவ்வாறு Tag செய்வது?

குழுவில் மெசேஜ் அனுப்பும் போது அந்த மெசேஜினை பேஸ்புக், டிவிட்டரில் tag செய்ய உபயோகிக்கப்படும் ‘@’ என்ற குறியீட்டை பயன்படுத்தும் போது நமது contacts list-ல் உள்ள பெயர்கள் தோன்றும், இவ்வாறு நாம் நமது நண்பர்களுக்கு குறிப்பிட்ட மெசேஜினை tag செய்யலாம். ஒன்றிற்கு மேற்பட்ட நண்பர்களுக்கும் tag செய்யலாம்.

நமது வாட்ஸ்ஸப் உரையாடல்களை இவ்வசதி மேலும் சுவாரஸ்யம் ஆக்கும் என்பது உறுதி.

மேலும், நீங்கள் tag செய்யும் உங்களுடைய நண்பர் அக்குழுவினை mute செய்திருந்தாலும் கூட அவருக்கு அறிவிப்பு செய்தி (Notification message) திரையில் தோன்றும்.
                       
                                        ----நியூஸ் 7