பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

விர்ர்... விர்ர் ... வீராங்கனை அலீஷா ...

கார்,பைக் ரேஸில் பட்டையை கிளப்பிக்கிட்டு இருக்கும் அலீஷா அப்துல்லா , இவர் இந்தியாவின் ஒரே பெண் ரேஸர்  ..
இவரின் அப்பா அப்துல்லாவும் ஒரு சிறந்த பைக் ரேஸர்..அவரை பார்த்து பார்த்து ரேஸிங் மேல அலாதி ஈர்ப்பு வந்துடுச்சுன்னு சொல்ற இவர்  தன்னோட 8 வயசுல இருந்து பைக் ஓட்ட ஆரம்பிச்சுருக்காங்க .
தன்னோட அப்பாவைதான் தனக்கு  ரோல் மாடல்னு  அலீஷா  சொல்றாங்க.


முதல்ல பைக் ரேஸில் மட்டும் அர்வமா இருந்து போட்டிகள்ல கலந்துகிட்ட  இவங்க , கார் மேலையும் ஈர்ப்பு வர அதையும் ஒரு கை பாத்துடுவோமேனு கார் ரேஸ்லயும் கலக்க ஆரம்பிச்சுட்டாங்க.

கார்,பைக் ரேஸ்களில்  இதுவரை ஏகப்பட்ட விருதுகளை வாங்கி இருக்கும் அலீஷாவின் முதல் விருது 11 வயசுல, "கோ கார்டிங்ல" வாங்கினது..
ரேஸிங் ஒரு சாதாரண விஷயம் கிடையாது...அதுவும் பெண்களுக்குனா சொல்லவே வேணாம்,இதுக்கு நிறையா தியாகம்,அர்பணிப்பு,உழைப்பு இருக்கணும்..

பெண்கள் 200 கிலோ எடையுள்ள பைக்கை பேலன்ஸ் செஞ்சு ஓட்டறதுக்கு திறமை வேணும். அந்த அர்பணிப்பு.கடின  உழைப்பு, திறமை அலீஷா கிட்ட இருக்குறதாலதான் அவரால இந்த ஃபீல்டுல சாதிக்க முடியுது .


பல ஆயிரம் ஆண்களுக்கு மத்தியில ஒரே ஒரு பெண்ணா அவங்களுக்கு சமமான வேகத்தோடையும் ,திறமையோடையும் சவால்களை சந்திக்கும் அலீஷாவுக்கு பிடிச்ச பைக்குகள் ,யமஹா ஆர் 1000 சிசி ,ஹோண்டா சிபிரா 600 சிசி ,கவாஸாகி நிஞ்சா 600 சிசி,சிகி நிஞ்சா 1000 சிசி (இதுலாம் என்ன சாப்பிடற ஐய்ட்டமானு என்னமாதிரியே கேக்கக்கூடாது பெண்களே )

இன்னும் பல போட்டிகளில் இவர் கலந்துக்கனும்,பல விருதுகளை வாங்கனும்னு இவரை வாழ்த்துவோம்...

(கெளப்புடா வண்டிய ...... .....விர்ர்..விர்ர்...விர்ர்ர்ர்ர்ர்ர்ர் ............... )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக