எனக்கு வந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சாரை ரொம்ப பிடிக்கும் .அவர ஒரு தரமாவது லைஃப் டைம்ல பாக்கணும் போட்டோ எடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கு. ஆனா அவரை வந்து சூப்பர் ஸ்டார் என்று கூப்பிடுவதற்கு தான் எனக்கு ஆசையே தவிர தலைவர்னு கூப்பிடுவதற்கு எனக்கு விருப்பமில்லை .அவர் அரசியலுக்கு வராதா இருந்தது, அப்போ நாங்க தலைவர்னு கூப்பிட்டோம் .ஆனா அவர்தான் வரலையே.
தலைவர்னு யாரை சொல்லுவோம் தன்னோட மக்களை சரியான முறையில அவங்களை வழி நடத்துறவங்களை தான் தலைவர்னு சொல்லணும்.
அவருடைய பொண்ணு சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் தான் எப்பயும் வந்து எந்த போஸ்ட் போடும் பொழுதும் தலைவர் அப்படின்னு மென்ஷன் பண்ணி போடுறாங்க .எதுக்காக அவரை நாங்க தலைவர்னு கூப்பிடனும் ?அவர் எந்த அரசியலையும் இல்ல .அவர் இளைஞர்களையோ இல்ல அவருடைய ரசிகர்களையோ வழி நடத்தல. அவங்களை ஒழுங்கு படுத்தல.
இப்போ நடிகர் அஜீத் குமாரை சாரை எடுத்துக்கிட்டோம் அப்படின்னா ,ஒரு கோயிலுக்குப் போகும் பொழுது அங்கு அவரைப் பார்த்து விசில் அடிக்கிறவங்களை அப்படி செய்யாத ! இது அந்த இடம் கிடையாது !,அப்படின்னு சைகையால் சொல்றாரு .ஒரு போட்டோ எடுக்குறதுக்கு கூட நீங்க வரிசையில நின்னாதான் முதல்ல நான் போட்டோ எடுக்க அனுமதியே தருவேன் அப்படின்னு சொல்றாரு. இந்த இடத்துல கத்தாதீங்க ,இந்த இடத்துல எனக்காக சத்தம் கொடுக்காதீங்க அப்படின்னு சொல்றாரு. எனக்காக சண்டை போடாதீங்க .உங்களுடைய வாழ்க்கையை நீங்க பாருங்க இப்படி பல வகைகளில் அவருடைய ரசிகர்களை அவர் வழிநடத்துறாரு.இதுதான் ஒரு தலைவன் பண்றது. இந்த மாதிரி போன்றவர்களை தலைவர்னு சந்தோஷமா சொல்லலாமே, ஆனா ரஜினி சாரை எதுக்கு தலைவர்னு சொல்லணும் நாங்க? சூப்பர் ஸ்டார்னு மட்டும் சந்தோஷமா சொல்றோமே .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக