பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 13 ஆகஸ்ட், 2026

குறையாத காதலும் , மரியாதையும்

 சமீபத்துல சூர்யா ஜோதிகா இன்டெர்வியூ பாத்தேன். நான் சூர்யா ரசிகை கிடையாது. ஆனா இவரை பார்த்து நான் ஆச்சர்யப்படுற விஷயம் இன்னைக்கு இல்ல 20 வருஷத்துக்கு முன்னாடி இருந்து சொல்றேன் , எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு , இவங்களை பத்தி கிசு கிசு வந்த காலம் .. 

சூர்யா சொன்னதா ஒரு விஷயம் படிச்சேன் -"ஜோ எப்பவும் சீக்கிரமா சாப்பிடுவாங்க .ஏன் இப்படி அவசரமா சாப்பிடுறீங்கன்னு கேட்டப்போ , எனக்கு அப்பறம் என்னோட அசிஸ்டன்ட் , மேக்கப் ஆர்ட்டிஸ்ட் சாப்பிடணும் இல்ல அதனால தான்னு சொன்னாங்க. நான் ஒருநாளும் அவங்கள பத்திலாம் யோசிச்சதில்லையேனு எனக்கு தோணிச்சுனு" சொல்லிருப்பார் .

அப்பறம் காக்க காக்க படம் பிரீமியர் ஷோ முடிஞ்சதும் , படம் எப்படி இருந்ததுனு நிருபர்கள் கேக்கும்போது , ஜோதிகாவின் நடிப்பு பத்தி சொன்னார் "ஜோதிகா சூப்பரா நடிச்சிருக்காங்க, அவங்க கிட்ட இருந்து நிறையா கத்துக்கணும்"-னு சொல்லுவார் .உண்மையா சொன்னா இவருதான் நல்ல நடிப்பார் .ஆனா அவங்கள உயர்வா சொல்லுவார் .

அது மட்டும் இல்ல ஒரு ஒரு மேடையிலும் ஒரு ஒரு நிகழ்ச்சியிலும் மனைவியை பெருமையா பேசாம இருக்கவே மாட்டார்.

ஜோதிகாவும் சும்மா சொல்லக்கூடாது , அவர் பத்தி பெருமையாதான் சொல்லுவாங்க. தேவையில்லாம கூட நடிக்கிற நடிகைகளை தொடக்கூட மாட்டாரு. ஒரு பாடல் , ஒரு நெருக்கமான காட்சினா கூட இந்த அளவுக்கு தோட்டா போதுமா இப்படி காய் இருந்தா போதுமானு டைரக்ட் கிட்ட இல்ல நடனம் சொல்லித்தரவங்ககிட்ட கேட்டுப்பார்.அதுக்குமேல தொட கூட மாட்டார்னு சொல்லுவாங்க.என் பையனுக்கு சூர்யாவோட குணத்துல 10 சதவிகிதம் இருந்தா கூட போதும் எனக்குனு சொல்லிருக்காங்க.

20 வருஷம் ஆகப்போகுது இன்னும் அவர் அதே மாதிரிதான் சூர்யா  பேசுறார். எனக்கு ஆச்சர்யமான விஷயம் என்னனா எப்படி ஒரு மனுஷனால இப்படி இருக்க முடியுதுனு ? இத்தனைக்கும் இவருக்குனு தனி ரசிகர்கள்/ரசிகைகள் இருக்காங்க. இவர் ஒன்னும்சாதாரண / சுமாரான நடிகர் இல்ல .இவரும் டாப் நடிகர்கள்ல ஒருத்தர்தான். சில சமயம் தோணும் எனக்கு மைக் கொடுத்துட்டா போதும் உடனே பொண்டாட்டிய பத்தி புகழ்ந்துக்கிட்டே இருப்பாரேனு . இப்போ அவர் படம் ரிலீஸ் ஆகப்போதுனு அத பத்தி பேசுவார்னு பாத்தா அதுலயும் wife பத்தி பேசுறாரு .

சமீபத்துல நடந்த  சூர்யா ஜோதிகா இன்டெர்வியூல மனைவியை புகழ்ந்துருப்பார்.ஜோதிகாவே கொஞ்சம் உங்கள பத்தி பேச விடுங்களேன்னு சொல்ற அளவுக்கு புகழ்ந்துக்கிட்டே இருப்பார். ஆனா அதுக்கு அப்பறம் , சூர்யாவோட படத்துக்காக கொடுத்த இண்டர்வீயூ -ல அவர் ஒரு விஷயம் சொன்னார் "ஒரு ஆணா சொல்றேன் , ஒரு பெண்ணோட வாழ்க்கை , அவங்க என்ன நிலையில இருக்காங்க , எதை கடந்து வந்தாங்க இதையெல்லாம் நாம புரிஞ்சுக்குறதே சிரமனான விஷயம்.பக்கத்துல இருக்கலாம் பாக்கலாம் ஆனா actual -ஆ நாம அதையெல்லாம் எடுக்குகிட்டோமா , புரிஞ்சுக்கிட்டோமானு , தெரியுதா புரியுதானா ?- இல்ல .ஒரே வீட்ல இருந்தாலும் அவங்க வேறு ஒரு வாழ்க்கையை வாழுறாங்க.வேறு வேறு உணர்வுகளில் இருக்காங்க .ஈடுகுடுக்குறது மட்டும் இல்ல அதை பக்குவமா கையாளுறாங்க .ஒரு வீடை நடத்துறது, அவங்க வாழ்க்கையை மட்டும் பாத்துருக்குறது இல்லாம சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையை வாழ வழிநடத்துறாங்க.LOVE அப்படீங்குறதுக்கான அர்த்தம் ஒரு ஆணுக்கு ஒரு விதமா இருக்கும் பெண்ணுக்கு வேறு விதமா இருக்கும்". வாவ் .. யாரு சார் நீங்க ?! ஒரு கணவனா உங்கள பாத்து ஆச்சர்யப்பட்டது போக இப்போ மனிதனா உங்கள பாத்து ரொம்ப ஆச்சர்யப்படுறேன். இந்த புரிதல் எல்லாருக்கும் இருக்காது . கண்டிப்பா இருக்காது . உண்மையாவே உணரணும் , உணர்ந்தா மட்டும் தான் இப்படி பேச முடியும் . மனிதர்கள் வித்யாசம். ஆனா இவர் தனியா தெரியுறார். இந்த அபியும் நானும் படம் பாத்திருந்தீங்கனா தெரியும் பிரகாஷ் ராஜ் தன்னோட மருமகனை பத்தி மகள் மூலமா அவர் செய்த நல்ல விஷயங்களையும் , அவர் ஒரு குடும்பத்தையே தத்துஎடுத்ததை பத்தி தெரிஞ்சுக்கிட்டதும் மருமகன் அப்படியே உயரம் மேல மேல மேல போகும் அவரை அப்படியே அண்ணாந்து பார்ப்பாரே அதுமாதிரி நான் பாக்குறேன் சூர்யாவை இப்போ .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக