பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 21 ஜூன், 2026

என்ன ஒரு கஷ்டம் பாருங்களேன் இந்த பொண்ணுங்களோட நிலைமை .

 ஒரு ஒரு பொண்ணோட நிலையும்  என்ன தெரியுமா? அவ பொறந்து 25 வருஷம் அப்பா, அம்மா, கூட பிறந்தவங்க, செல்ல நாய்க்குட்டி, பூனைக்குட்டி , தன்னோட ஊஞ்சல், தனக்கு பிடிச்ச தோட்டம், பால்கனினு எல்லாத்தையும் விட்டுட்டு கல்யாணம் பண்ணி புருஷன் வீட்டுக்கு போறா. 

அந்த வீடு தன்னுடைய in -laws வீடுன்னா அவ அந்த வீட்ல அவளோட ரூமை தவிர வேற எங்கேயும் எந்த உரிமையையும் எடுத்துக்க முடியாது . அவளுக்கு அந்த வீட்டோட full control எப்போ தெரியுமா வரும் , அவளுக்கு பிள்ளைகள் பிறந்து அவங்க  வளந்து கல்யாணம் ஆகி அவங்களுக்கு பிள்ளைகள் பிறந்ததுக்கு  அப்பறம் அதாவது பேரன் பேத்தி வந்ததுக்கு அப்பறம் அவளோட in -laws போனதுக்கு அப்பறம் அல்லது அவங்களுக்கு ரொம்ப வயசானத்துக்கு அப்பறம் தான் அந்த வீட்டோட முழு control -ம் அவளுக்கு கிடைக்கும். 

சில நேரம் தன் பையனுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்பறம்  கூட கிடைக்கலாம் . அப்படி அந்த சமயத்துல அந்த பெரியவங்க எப்படி தன்னோட வீட்டுக்கு வந்த மருமகளுக்கு தன்னோட இடத்தை குடுப்பாங்க? ஏம்மா எனக்கே இப்போதான்மா இந்த இடம் கிடைச்சிருக்கு கைக்கு வைத்ததும் நீ வந்து வாங்கிட்டா எப்படினு குடுக்க மாட்டாங்க. same இதே நிலைமை அந்த வீட்டுக்கு வந்த  பெண்ணுக்கு  தொடரும் , அந்த பொண்ணு இதையே தன்னோட மருமகளுக்கு செய்வாங்க.இப்படித்தான் போயிகிட்டு இருந்தது . காலம் இப்போ எவ்வளவோ மாறிடுச்சு. 

நீ உன் வாழக்கையை பாரு நான் என் வாழ்க்கையை பாக்குறேன்ன்னு போகுறாங்க. (சில நேரம் புருஷன் பொண்டாட்டியே அப்படி போகிடுறாங்க ).

கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன், அந்த பொண்ணு friends family -னு எல்லாத்தையும் விட்டுட்டு இன்னோர் வீட்டுக்கு போறா , அவளுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சுக்க யாரும் இருக்க மாட்டாங்க. அவளுக்கு என்ன பிடிக்காதுன்னு தெரிஞ்சுக்க யாரும் இருக்கமாட்டாங்க .கல்யாணம் பண்ணினா உடனே புருஷன் எல்லாத்தையும் தெரிஞ்சு புரிஞ்சு வச்சுப்பாங்களாக்கும்? கண்டிப்பா கிடையாது .

அவளுக்கு என்ன திறமை இருக்கு? அவ எப்படி படிச்சா? அவளுக்கு என்ன விளையாட பிடிக்கும்? அவ ஸ்கூல் இல்ல college இல்ல வேல செஞ்ச இடத்துல கிண்டல் கேலியா இருந்தாளா?இல்ல ரொம்ப அமைதியா  சமத்து பொண்ணா இருந்தாளா? இல்ல அறந்தவாலா இருந்தாளா? இது எதுவுமே புகுந்த வீட்ல இருக்கிறவங்களுக்கு தெரியாது . தெரிஞ்சுக்கவும் விரும்ப மாட்டாங்க.

ஆனா அந்த வீட்ல இருக்குறவங்கள பத்தி அந்த பொண்ணு எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுக்கணும் . இல்லைனாலும் எப்படியும் தன்னோட பிள்ளைங்களை புராணத்தை மாமியாரும் மாமனாரும் பேசிக்கிட்டே இருப்பாங்க , இல்ல புருஷன் கொழுந்தனார் ,கொழுந்தியானு அவங்கல பத்தியே பேசிக்கிட்டே இருப்பாங்க ,அது கேட்டு கேட்டு அவளுக்கு பழகிடும் .

இன்னோர் கொடுமையான விஷயம் என்னனா ,பொறந்த  வீட்டுக்கு போயி ஒரு நாலு நாள் மறுபடியும் இளவரசி மாதிரி இருந்துட்டு வரலாம்னு பாப்பா , ஆனா அவளுக்கு அண்ணன்கள் இருந்து அவங்களுக்கு கல்யாணம் ஆகி இருந்தாலோ, இல்ல தம்பிகள் இருந்து அவங்களுக்கு கல்யாணம் ஆகிருந்தாலோ அல்லது அக்கா தங்கைனு இருந்து அவங்களும் அதே நேரத்துக்கு வந்தாலோ அவளுக்கு காட்டப் படுற கவனிப்பு கம்மியாகும் .அதுவும் தன்  கணவனும் கூட வந்தா சத்தியமா அவளை அவங்க வீட்லையே கவனிக்கமாட்டாங்க ,மாப்பிள்ளைக்கு தான் முதல்ல எல்லாமே. ஆக, ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் அவளுக்கு பிறந்த வீடும் இல்ல , புகுந்த வீட்லயும்  அவளுக்கு priority கடைசிதான். அதுவும் பேர பிள்ளைங்க இருந்தா சுத்தம் , அவளுக்கு கடைசி priority-தான் ரெண்டு வீட்லயும்.

என்ன ஒரு கஷ்டம் பாருங்களேன் இந்த பொண்ணுங்களோட நிலைமை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக