பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

I Love you -க்கு என்ன சொல்றதுன்னு தெரியாம முழிச்சி தருணம்

 நான் அமெரிக்கால பார்ட் டயம்ல லிஃப்ட் டிரைவர்-ஆ வேல செஞ்சேன் . அதான் நம்ம ஊருல ஊபர் டிரைவர் மாதிரி. இங்கயும் ஊபர் இருக்கு , ஆனா அது போலவே மத்த கம்பெனிகளும் இருக்கு.

நான்  லிஃப்ட் டிரைவர்-ஆ வேல செஞ்சப்போ நிறைய புது புது அனுபவங்கள் கிடைச்சது.அதுல ஒன்னு கொஞ்சம் பயம், காமெடி கலந்த ஒரு அனுபவம் அதைத்தான் இப்போ ஷேர் பண்ணப்போறேன்.

ஒரு நாள் ஒரு லிஃப்ட் ரெக்குஸ்ட் accept பண்ணினேன். அது ஒரு மோட்டல் . பொதுவா இங்க அமெரிக்கால அதிகம் சம்பாதிக்காதவங்க , கொஞ்சம் வறுமைக்கோட்டுக்கு பக்கத்துல அல்லது கீழ இருக்குறவங்க ஒரு வீடு வாடகை எடுக்குறதுக்கு பதிலா இதுமாதிரி மோட்டல்கள்ல  தங்குவாங்க. மாசா மாசம் ரெண்ட் கொடுத்துடனும் . அந்த சின்ன இடத்துலயே ஸ்டவ் வச்சு சமைப்பாங்க வேற. அதுமாதிரி ஒரு மோட்டல்ல ஒருத்தரை பிக்கப் பண்ண நா போனேன். அவரு போய் சேர வேண்டிய இடம் 25 நிமிஷ தொலைவுல இருந்தது.  வண்டில ஏறினதும் கண்டுப்பிச்சுட்டேன் அவரு கொஞ்சம் குடுச்சிருக்காருனு . மோட்டல்ல விட்டு வெளில வரதுக்கு முன்னாடியே கொஞ்சம் நிறுத்து நிறுத்து நான்  பர்ஸ் மறந்துட்டேனு சொல்லி இறங்கி ஓடி எடுத்துட்டு வந்தாரு.

அங்க இருந்து நான் highway -க்கு போகணும் .அதுக்கு நான் ரைட் எடுக்கணும்.ரைட் எடுக்கும்போது வேற யாராவது எதிர்புறம் வராங்களானு செக் பண்ணிட்டு போகணும். நானும் அப்டித்தான் செக் பண்ணினேன். அந்த நின்ன சில வினாடி அவரால வெயிட் பண்ணமுடியல .போலாம் போலாம் நீ போ னு சொன்னாரு. நான் பொதுவா கேட்கமாட்டேன் .கண்டுக்க மாட்டேன். ஏன்னா எனக்கு என் safety, என்ன நம்பி  வண்டி ஏறுறவங்களோட safety ,என்னோட கார்-ஓட safety எல்லாமே முக்கியம்.

அதனால நா சில வினாடி வெயிட் பண்ணிட்டுதான் எடுத்துட்டேன். உடனே பின்னாடி இருந்து அவரு உச்சு கொட்டி தன்னோட அதிருப்தியை வெளிப்படுத்தினார். நான் கண்டுக்கல.  highway-ல போய்க்கிட்டு இருக்கும் போது ஒரு மாதிரி பரபரப்பாவே உக்காந்துட்டு இருந்தார். highway -ல இருந்து அவரு வேல செய்ற இடத்துக்கு ரெண்டு மூணு சிக்னல் தாண்ட வேண்டி இருந்தது . ஒரு சிக்னல்-ல ஆரஞ்சு இருக்கும் போது நான் ஸ்டாப் பண்ண ரெடி ஆனேன் ஆனா அவர் பின்னாடி உக்காந்து போய்டு போய்டு-னு சொன்னார். நான் தான் சொன்னேனே கேட்கமாட்டேன்னு , நா போகல. நின்னுட்டேன் .ரெட் விழுந்துடுச்சு.  மறுபடியும் அவருக்கு அதிருப்தி . நான் தான் சொன்னேனே போகலாம்னு, போயிருக்கலாம்னு கொஞ்சம் எரிச்சலோட சொன்னார். நான்  பதில் சொல்லல.

அவர் ஒரு இண்டஸ்ட்ரி-ல வேல செய்றவர் போல. அதுக்குள்ள போக left, right -னு ரெண்டு சைடு இருக்கு . நான் left எடுத்துட்டேன் . சரி போ போ-னு சொன்னார். உள்ளபோயி gate  கிட்ட நிறுத்திட்டேன். அவர் கார் விட்டு முழுசா இறங்கல . ஒரு கால் உள்ள ஒரு கால் வெளில இருக்கு . அவர் என்ன பாத்து 'hey thanks . you did  a good job. I love you ' அப்டினு சொன்னாரு. 

அவ்ளோதான் எனக்கு வௌ வெளுத்து போச்சு. விவேக் காமெடி -ல சொல்றமாதிரி I love you-சொன்னா அப்பன் அருவாளோட வருவாரு-னு  , வளந்த புள்ள . I love you -ஒரு காதலன் காதலிக்கிட்ட சொல்லணும் அல்லது ஒரு  காதலி காதலன்கிட்ட சொல்லணும் அவ்ளோதான்.இப்படி சினிமா பாத்து கேட்டு வளந்த  புள்ள தான் நானு. என்னபாத்து இவரு இப்படி சொன்னதும் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. 

நா அப்டியீ பாக்குறேன் அவரை. அவரு போகமாட்றாரு . hey , i  said  I love you-னு வேற சொல்றாரு. எனக்கு என்ன சொல்றதுன்னு அப்பவும் தெரியல . ஆனா அந்த இடத்தை விட்டு சீக்கிரம் கிளம்பனும்னு மட்டும் நினைக்குறேன். இந்த மனுஷன் இறங்கவும் மாட்டறாரே கார் விட்டு. என்ன பண்றதுனு அவரையே பாக்குறேன்.என்னையும் அறியாம love you too -னு சொல்லி மண்டைய ஆட்டுறேன்  பயத்துல. அப்பறம் தான் அவரு இறங்குறாரு. கைப்புள்ள எடுடா வண்டிய-னு reverse -லயே போய் வண்டிய திருப்பிக்கிட்டு அந்த இண்டஸ்ட்ரி -தாண்டினதுக்கு அப்பறம் தான் ரிலாக்ஸ் ஆகி ஒரு ஓரமா நிறுத்தி என்ன நடந்ததுன்னு யோசிச்சேன்.

என்னது love you too -னு சொன்னியா அவன்கிட்ட . அறிவிருக்கா. உனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. இப்படி நீ அவன்கிட்ட சொல்லிட்டு வந்து இருக்கனு என்ன திட்டுறேன். first வீட்டுக்கு போவோம்னு வண்டியை எடுத்துகிட்டு கிளம்பியிட்டேன். offline -போய்ட்டேன் ,so எனக்கு எந்த வண்டி request -ம் வராது.

வழியெல்லாம் இதே மண்டையில ஓடிக்கிட்டு இருக்கு . இப்படி சொல்லிட்டானே பாவி . அதுக்கு நீ பதிலுக்கு இப்படி சொல்லிட்டியே படுபாவினு திட்டிக்கிட்டே வரேன்.

அப்பறம் தான் எனக்கு புரிஞ்சது , நாம நினைக்குற லவ் வேற அவரு சொன்ன லவ் வேற. என் மேல கடுப்பு அடிச்சுக்கிட்டே வந்தாரே அதுக்கு சாரி சொல்லாம அந்த மனுஷன் இப்படி சொல்லிருக்காருனு எனக்கு புரிஞ்சது. அது இந்த நாட்டுல சகஜம் . யாரு யாருக்கு வேணும்னாலும் சொல்லலாம். அது அன்ப சொல்ற விதம் அவ்ளோதான். இளம் வயசுல சொல்ற காதல் இல்ல . அட லூசு பயலே இப்படியா என்ன பயமுறுத்துவனு சொல்லிக்கிட்டு , அட லூசு இப்படியா நீ பயப்படுவ -னு என்ன நானே திட்டிக்கிட்டு வந்தேன். உடனே என் புருஷனுக்கு கால் பண்ணி நடந்ததை சொல்லி  ரெண்டுபேரும் சிருச்சுக்கிட்டு இருந்தோம். அப்பறம் மறுபடியும் online -போயிட்டு வேலைய தொடர்தேன் . 

இப்படி நிறைய சுவாரசியமான அனுபவங்கள் இருக்கு அந்த வேலையில .கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக