பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 9 ஜூன், 2014

விஜய் டி.வி -கோபிநாத் - நீயா நானா - 5

நேற்றைய "நீயா நானா"வின் தலைப்பு "திருநங்கைகள் VS பொதுமக்கள்"..


திருநங்கைகளை இந்த சமுதாயம் எப்படி பாக்குது...அவங்களுக்குள்ல  இருக்குற உணர்வுகள் என்ன? அவங்க உலகம் இருக்கு? அவங்க மனநிலைமை எப்படி இருக்கு ? அவங்களுக்குள்ல  இருக்குற இருக்குற பெண்மையை எப்படி உணருறாங்க?!!அவங்க எங்க எப்படி வாழுறாங்க?!! இந்த சமுதாயம் அவங்கள எப்படி எல்லாம் புறக்கணிக்குது!!?னு நிறையா விஷயங்களை பத்தி பேசினாங்க..

ரொம்ப அழகாகவும் உணர்வுபூர்வமாகவும் இருந்த அந்த முழு எபிசோட் இதோ ..



இதே நீயா நானாவில் திருநங்கைகளை பத்தி "ஆணுக்குள் இருக்கும் பெண்மை" என்ற தலைப்புல 2013 ஏப்ரல் மாதத்துல ஒரு விவாதம் நடந்தது..அதை பத்தியும் நான் எழுதிருக்கேன் அப்போ..அந்த போஸ்ட்டின் லிங்க் இங்கே ..

ஆணுக்குள் இருக்கும் பெண்மை

ஞாயிறு, 8 ஜூன், 2014

புற்றுநோய் பாதிப்பை ஆர்.என்.ஏ. மூலம் தெரிஞ்சுக்கலாம் ... !!

ஸ்கேன் செய்வதற்குப் பதிலாக, ரத்தப் பரிசோதனை மூலம் கண்களைப் பாதிக்குற புற்றுநோயைக் கண்டு பிடிக்க முடியும்னு கண்டுபிடிசிருக்காங்க, சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். 

இதனால, ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயைக் கண்டுபிடிச்சு சிகிச்சை எடுத்துக்கறதுகான சாத்தியங்கள் அதிகரிசிருக்கு. கண்ல கட்டி இருக்குற இடத்தில இருக்குற ரத்தத்தைப் பரிசோதிச்சு , அதுல இருக்குற மைக்ரோ ஆர்என்ஏ (micro-RNA) அளவை வைச்சு புற்று நோய் பாதிப்பு இருக்காங்கறதை கண்டு பிடிக்க முடியும். 

‘‘கீமோதெரபி கதிரியக்க சிகிச்சையை எடுத்துக்குற நோயாளிக்கு, புற்றுநோய் பாதிப்பு எந்த அளவு இருக்குங்கறதை தெரிஞ்சு , அதுக்கேத்த  சிகிச்சையை தொடரவும் இந்தக் கண்டுபிடிப்பு உதவும்’’ -னு இந்த ஆராய்ச்சியின் திட்ட 
இயக்குநர் டாக்டர். எஸ். கிருஷ்ண குமார் சொல்லிருக்கார்

.

வெள்ளி, 6 ஜூன், 2014

அக்பரும் பீர்பாலும் - பீர்பாலின் 50378 காக்கைகள்

அக்பர் : முகலாயப் பேரரசின் மன்னராக 1556 முதல் இறக்கும் வரை பதவியில் இருந்தவர். ஹிமாயுன் ஹமீதா பானு இவர்களுக்கு பிறந்தவர் தான் அக்பர், இவரது தந்தை மன்னர் நசிருதீன் ஹுமாயூன் இறந்ததை அடுத்து தனது 13வது அகவையில் ஆட்சிக்கு வந்தார். இவரே முகலாயப் பேரரசின் மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் எனக் கருதப்படுபவர். இவரின் இயற்பெயர் ஜலாலுதீன் அக்பர் .

அக்பர் ஒரு சிறந்த கலைஞர் ஆவார். அவர் ஒரு சிறந்த போர் வீரர் ,கலைஞானி ,தச்சு வேலை, கொல்ல வேலைகள் தெரிந்திருந்ததோடு, போர்க்கருவிகளையும் கலை நுணுக்கத்துடன் சேமித்து வைத்துக் கையாளத் தெரிந்த போர் வீரரும் ஆவார். அவர் பேரரசர் மட்டுமல்லாமல் பரந்த மனம் படைத்தவர். அவர் சிறந்த கண்டுபிடிப்பாளர். விலங்குகளைப் பயிற்றுவிக்கும் நல்ல பயிற்சியாளர். தனது ஆட்சியின் போது அவர் ஆயிரக்கணக்கான காட்டு வகைப் பூனைகளைச் சிறந்த முறையில் தானாகவே பயிற்றுவித்தார். அவர் சிறந்த போர்க் காலணி நாடாக்களைத் தயாரிப்பதில் வல்லவர். அவர் சிறந்த தொழில் நுட்ப கலைஞர் மற்றும் தத்துவஞானியும் ஆவார்.

பீர்பால் : 1528-ல் உத்திரப்பிரதேச மாநிலத்தில் கல்பி என்னும் கிராமத்தில் பிறந்த பீர்பால் அக்பரது அவையில் ஒரு கவிஞராக , பாடகராக ,மன்னரின் ஆலோசகராக 1556-1568 வரை இருந்தவர்.


இனி அக்பர் மற்றும்  பீர்பாலின்  கதைகளை படிப்போம் ...


வியாழன், 5 ஜூன், 2014

யானைகள் - நிலத்தில் வாழும் உயிர்களில் மிகப்பெரிய பாலூட்டி


* நிலத்தில் வாழும் உயிர்களில் மிகப்பெரிய பாலூட்டி யானைதான்.

* யானைகள் ஆப்பிரிக்க கண்டத்திலும் ஆசியாவிலும் வாழ்கின்றன.

* யானைகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஆசிய யானை, ஆப்பிரிக்க யானை.

* ஆப்பிரிக்க யானைகளில் பெண், ஆண் இரண்டுக்கும் தந்தங்கள் உண்டு. ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தங்கள் உண்டு. உணவைத் தோண்டித் தின்பதற்குத் தந்தங்கள் உதவுகின்றன.

* பெண் யானைகளுக்கு 12 வயதாகும்போது, குட்டிகளை ஈனத் தொடங்குகின்றன. யானைகளின் கர்ப்ப காலம் 22 மாதங்கள்.

செவ்வாய், 3 ஜூன், 2014

ஐகான்களுக்கு இடையில இருக்கும் இடைவெளியை சரி செய்ய

சில பேர் டெஸ்க்டாப் -ல ஏகப்பட்ட ஐகான்கள் வச்சுருப்பாங்க .சில பேர் டெஸ்க்டாப் முழுசும் ஐகான்களா இருக்கும் .. இந்த ஐகான்களுக்கு இடையில இன்னும் கொஞ்சம் இடைவெளி இருந்தா நல்ல இருக்கும்னு தோணுதா ..தோணுச்சுனா உடனே செய்யல படுத்தி பாத்துடனும் ..எப்படின்னு பாப்போம் ..

1. டெஸ்க்டாப் மேல ரைட் கிளிக் பண்ணுங்க Properties போங்க

2. அதுல Appearance -னு ஒரு Tab இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க..

3 அடுத்து 'Advance' பட்டன் -ஐ கிளிக் பண்ணுங்க.

4. இங்க Item என்ற தலைப்புக்கு கீழ நிறையா ஆப்ஷன்களை பாக்கலாம்.அதுல Icon Spacing -னு இருக்கும் அதை செலக்ட் செஞ்சு அத பக்கத்துல size னு ஒரு பாக்ஸ் இருக்கும் அதுல நமக்கு தேவையான அளவை குடுத்தோம்னா Icon -களுக்கு இடைல இடைவெளி கிடைக்கும் ..

ஞாயிறு, 1 ஜூன், 2014

நன்றி - தி ஹிந்து தமிழ்

'தி ஹிந்து தமிழ்' நாளிதழில் ஒரு விவாதக்களத்தில் வெளியான என்னுடைய கருத்து...

சிவப்பழகின் மீது மக்களுக்கு இருக்கும் மோகத்தைப் பற்றி ஒரு பதிப்பு பலமாதங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன்  (இதுவும் அழகுதான்) ..அதை அப்படியே இந்த விவாதக்களத்திற்கு அனுப்பியிருந்தேன்.அதில் குறிப்பிட்டுருந்த முக்கிய கருத்துக்களை மட்டும் எடுத்து அழகாக வெளியிட்டிருக்கிறார்கள்(the hindu).



மோட்டர் வாகனச்சட்டமும் அபராதமும் ..



தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக


1.உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது/section 180. Rs.50 fine

2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் section 181. Rs.500 fine

3.உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழ்ந்தவர்கள் வண்டி ஓட்டுதல் section 182(1). Rs.500 fine

4.அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் section 183(1) Rs.400 fine

5.மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் .முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) section 183(2).Rs.300 fine

6.அபாயகரமாக ஓட்டுதல் section 184. Rs.1000 fine மற்றும் செல்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) section 177.RS.100 fine

7.குடிப் போதையில் வண்டி ஓட்டுதல் section 185 .

8.மன நிலை ,உடல் நிலை சரியில்லாத் நிலையில் வண்டி ஓட்டுதல் .section 186. Rs.200 fine

9.போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் section 189. Rs 500 fine

10.அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது section 190(2) .Rs.50 fine

11.அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் section 190(2).Rs.50 fine .

12.காற்று ஓலிப்பான் .பல்லிசை ஓலிப்பான் section 190 (2) .Rs.50 fine

13.பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் section 192. Rs.500 fine

14.அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடையுடன் ஓட்டுதல் section 194.Rs.100 fine

15.காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்( uninsured ) section 196 .Rs.1000 fine

16.வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் section 198 .Rs.100 fine

17.போக்குவரத்திற்க்கு இடையூர் செய்தல் section 201 .Rs.50 fine


                                              ---நன்றி FB