பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 4 மே, 2014

சில தகவல்கள்

விவசாயத்துல அறிமுகமாகியிருக்குற புதிய தொழில்நுட்பங்கள், இயற்கை வேளாண் முறைகள், பயிர்களை சந்தைப்படுத்த மார்க்கெட் நிலவரங்கள், நீர் மேலாண்மை போன்ற வேளாண் தகவல்களை ஒலிபரப்புவதற்காகவே பசுமை 90.4 என்ற எஃப்.எம்., திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் இயங்கி வருது. இந்தப் பண்பலை வானொலி நிலையத்தை பால்பாஸ்கர் என்ற விவசாயியே நடத்தி வரார்.

திண்டுக்கல் மட்டுமில்லாம, அருகிலுள்ள மாவட்ட விவசாயிகளுக்கும் விவசாய நிகழ்ச்சிகள் தெளிவா கேட்கணும்ங்கிறதுக்காக சிறுமலை மேல பசுமை வானொலியை அமைச்சிருக்காங்க .

விவசாயத்துல புதிய உத்திகள், இயற்கை உணவு தயாரிப்பு முறைகள்,விவசாயப் பொருள்களை சந்தைப்படுத்த மார்க்கெட் நிலவரங்கள், இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்க ஆலோசனைகள்னு ஒவ்வொரு நிகழ்ச்சியாக வழங்குவதோடு, விவசாயத்துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு லைவ்வாகவும் போன் மூலமும் பதிலளிக்க வைக்கிறாங்க . எஃப்.எம். ஆரம்பிச்ச புதுசுல குறைஞ்ச நேயர்கள்தான் இருந்துருக்காங்க . தொடர்ந்து புதுசு புதுசா விவசாயத் தகவல்களைச் சொல்லவே, இப்போ திண்டுக்கல் மட்டுமில்லாம திருச்சி, கரூர், திருப்பூர், மதுரை மாவட்ட விவசாயிகள் என்று ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிங்க நேயர்களா இருக்காங்க...ஆரம்பத்தில் 4 மணி நேரம் மட்டுமே இயங்கி வந்த பசுமை 90.4 எஃப்.எம்.மிற்கு வரவேற்பு அதிகரிக்கவே, தற்போது காலை 6 மணியிலிருந்து இரவு 12 மணிவரை 18 மணி நேரமாக செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வருஷமும் ‘பசுமை சந்திப்பு’ என்ற மாபெரும் விவசாயக் கருத்தரங்கை பசுமை எஃப்.எம். சார்பாக நடத்தி, விவசாயிகளை ஊக்கப்படுத்த கமர்ஷியலா வெற்றிபெற்ற சிறந்த விவசாயி விருது, சிறந்த பெண் விவசாயி விருது, சிறந்த நுகர்வோர் விவசாயி விருது என்று சாதித்த மூன்று விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து விருது கொடுத்தும் கவுரவப்படுத்தி வரார் பால்பாஸ்கர். மேலும் சிறுதானிய உணவுகள், ஆரோக்கியமான இயற்கை உணவுகள் தயாரிப்பது எப்படி? கால்நடைகள் பாராமரிப்பும், அதற்கு வரும் நோய்களைக் கட்டுப்படுத்தும் முறைகள், மத்திய - மாநில அரசுகளின் புதிய விவசாயக் கொள்கைகள், திட்டங்கள் போன்றவற்றோடு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உள்ள படிப்புகள், அதற்கான இணையதளங்கள் போன்ற தகவல்களையும் தனித்தனி நிகழ்ச்சிகளின் மூலம் கொடுக்குறாங்க பசுமை எஃப்.எம். குழுவினர்.

பால்பாஸ்கர் செல்பேசி எண்: - 94433 41082

புதுச்சேரி ஆரோவில் மூங்கில் மையத்தில் மூங்கில் பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடர்புக்கு - 04344-260564, 260565

இயற்கை விவசாய முறையில் சந்தேகம் இருக்குறவங்க திரு.ராமசுப்பிரமணியராஜா அவர்களை தொடர்புகொள்ளலாம்.

செல்பேசி எண் : 99446 62599

மாணவர்களுக்கு நினைவாற்றல் பயிற்சிகளைக் கொடுத்து வருகிறார் .ஜான்லூயிஸ்..அவரது செல்பேசிஎண் : 97153 33175


                                                     


                                                           --  நன்றி வார இதழ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக