பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

பரிக்கல்

விழுப்புரம்-திருச்சி நெடுஞ்சாலையில் விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த தலம். இங்குள்ள லட்சுமி நரசிம்மரைக் காணக் கண்கோடி வேண்டும். பஞ்ச கிரஷ்ணாரண்யம் என்றும் திருமுககுன்றம் என்ற ழைக்கப்படும் விருத்தாசலம் பகுதியை வசந்தராஜன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்.

 வசந்தராஜன் மன்னன் நரசிம்மரின் மீது மிகுந்த பக்தி கொண்டவன். இவன் நரசிம்மருக்கு கோயில் கட்ட எண்ணி, தன் குருவான வாமதேவ ரிஷியை கொண்டு மூன்று இரவுகள் தொடர்ந்து யாகங்கள் செய்ய ஏற்பாடு செய்தான். இதற்காக தன் சிற்றரசர்களுக்கெல்லாம் அழைப்பு அனுப்பினான். வசந்தராஜனின் அழைப்பின் பேரில் குறிப்பிட்ட இடத்திற்கு சிற்றரசர்கள் வந்தனர். யாகம் தொடங்கும் நேரத்தில் பரிகலாசூரன் என்ற அசுரன், யாகத்தை தடுக்க தன் படையுடன் புறப்பட்டான்.

அசுரன் வருவதை அறிந்த குரு, வசந்த ராஜன் கையில் கங்கணம் கட்டி, "அராக்ஷ்ர அமிர்தாக்ஷ்ர' என்று தொடங்கும் மந்திரத்தை உபதேசத்து, அருகில் உள்ள புதறில் மறைந்து கொள்ள செய்தார். இருந்தாலும் அசுரன், வசந்தராஜனை கோடாரியால் தாக்கினான். இதனால் கோபமடைந்த நரசிம்மர், தன் பக்தனை காப்பாற்ற உக்கிர நரசிம்மராக தோன்றி பரிகலாசூரனை அழித்து வசந்தராஜனுக்கு காட்சி கொடுத்தார்.
ஒரு கோடரியால் புதரில் தவ நிலையிலிருந்த மன்னன் வசந்தராஜன் தலையை வெட்டினான். அப்போது மன்னன் தலையின் வெடிப்பிலிருந்து உக்ர நரசிம்மன் தோன்றினார். பரகலாசுரனை அழித்தார். அதன்பின் வசந்தராஜனையும் உயிர்ப்பித்தார். வசந்தராஜன் கேட்டுக் கொண்டபடி நரசிம்ம மூர்த்தி அருள் தோற்றத்துடன் காட்சியளித்தார். பரிகலாசூரன் என்ற அசுரனை அழித்ததால், இத்தலம் பரிக்கல் எனப்படுகிறது.

இந்த தலத்தில் பல்வேறு காலங்களில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டதற்கான கல்வெட்டுக்கள் உள்ளன. இங்கிருந்த முழுமையான கல்வெட்டுக்கள் துண்டு துண்டாக்கப்பட்டு பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

கி.பி. 14-ம் நூற்றாண்டின் கல்வெட்டில் இந்தக் கோவில்களுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடைகள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் வசூலிக்கப்படும் வரிகள் அனைத்தும் இக்கோவிலுக்கே கொடுக்கப்பட்டது. என்கிற தகவலும் ஓர் கல்வெட்டில் உள்ளது.

மற்றும் ஒரு துண்டுக் கல்வெட்டு, பாண்டிய மன்னன் அளித்த கொடையைத் தெரிவிக்கிறது. மேலும் பாண்டிய மீன் இலச்சினையும், பாண்டியர்கள் காலத்திய துவார பாலகர் சிலைகளையும் சிறப்புற்று விளங்வதைப் பார்க்கலாம்.

1000-2000 வருடங்கள் பழமைவாய்ந்தது இந்த திருக்கோயில்...

பொதுவாக நரசிம்மர் கோயிலில் உக்கிர மூர்த்தியான நரசிம்மர் தன் மடியிலுள்ள மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்திருப்பார்.ஆனால் இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் நரசிம்மரை லட்சுமி தாயார் தன் வலக்கையாலும், லட்சுமி தாயாரை நரசிம்மரும் ஆலிங்கனம் செய்தபடி மூர்த்தி உண்டு.

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கோவில் திறந்திருக்கும்.


சாந்த நரசிம்மர்: தனக்கு தரிசனம் கொடுத்த உக்கிர நரசிம்மரிடம்,""பரந்தாமா! தாங்கள் எப்போதும் இங்கிருந்து உன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை தீர்க்க சாந்த நரசிம்மராக அருள வேண்டும்,''என வேண்டினான். அதன்படி வசந்தராஜன் கட்டிய கோயிலுக்கு தேவசிற்பியான விஸ்வகர்மா லட்சுமி நரசிம்மர் சிலை செய்து கொடுத்தார். அதை குரு வாமதேவ ரிஷி பிரதிஷ்டை செய்தார். நரசிம்மரும் லட்சுமி தாயாருடன் இணைந்து சாந்த நரசிம்மராக இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். சிலகாலம் இந்த விக்கிரகத்திற்கு சிறப்பான பூஜை செய்யப்பட்டது. காலப்போக்கில் இது சரிவர பராமரிக்கப்படாமல், புற்று மறைத்து விட்டது.


இவ்வூருக்கு அருகில் அக்ரஹாரத்தில் வாழ்ந்த வாய் பேசமுடியாத ஒருவன் கனவில் தோன்றிய பெருமாள், நரசிம்மர் சிலை புற்றில் மறைந்திருப்பதாகவும், அதை மீண்டும் பிரதிஷ்டை செய்யும்படியும் கூறி மறைந்தார். இதை அவன் ஊர்மக்களிடம் தெரிவித்தான். அதன்படி ஊர்மக்களும் லட்சுமி நரசிம்மரை எடுத்து புதிதாக கோயில் கட்டி பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார்கள். மூலஸ்தானத்தில் லட்சுமி நரசிம்மரும், தனி சன்னதியில் கனகவல்லி தாயாரும் அருள்பாலிக்கின்றனர்.


பிரகாரத்தின் வாயு மூலையில் வாயுமைந்தனான அனுமன், வீர ஆஞ்சநேயராகவும், பக்த ஆஞ்சநேயராகவும் அருள்பாலிக்கிறார். பக்தகர்கள் இவருக்குமுன்னால் நெல்லை கொட்டி அதில் தங்கள் கோரிக்கைகளை எழுதி வழிபாடு செய்கின்றனர். இதனால் தங்கள் கோரிக்கைகள் விரைவில் தீரும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் வடக்கே வரதராஜப்பெருமாள், தென்கிழக்கே விநாயகர், கோயில் எதிரே கருடன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். ஊரின் வடமேற்கில் சக்கர தீர்த்தம் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக