பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

இவர் - ஒரு அறிமுகம் - 3

இவர் - ஒரு அறிமுகம் தலைப்புல இவங்களை அறிமுகப்படுத்துறதுல நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்.காரணம் !! ஃபேஸ்புக்ல புகைப்படம் சம்மந்தமான ஒரு குரூப்ல இவங்களோட புகைப்படங்களை பாத்து நான் ஆச்சர்ப்பட்டுருக்கேன்.வியந்துருக்கேன்னு கூட சொல்லலாம்.

அவ்வளவு ஒரு அழகான புகைப்படங்கள் ,புகைப்படத்தை எடுக்கும் விதம் அந்த நேர்த்தி சொல்லவார்தையே இல்ல.அந்த அழகிய புகைப்படங்களை பாக்கும் போது நமக்குள்ல ஒரு சந்தோஷம் வருமே அதை இவங்களுடைய புகைப்படங்களில்(லும்)  நான் உணர்திருக்கேன்.

இவங்களை பத்தி "இவர் - ஒரு அறிமுகம்" தலைப்புல எழுதனும்னு ரொம்பநாள் நினச்சதுன்டு.ஆனா கேட்டா என்ன சொல்வாங்களோனு ஒரு தயக்கத்தோட கேட்டுப்பாத்தேன்..சந்தோஷமா சம்மதிச்ச இவங்க பெயர் - வர்ஷினி  ஸ்ரீதர்...இவங்களை மாதிரியே இவங்க எடுக்குற  புகைப்படங்களும் அவ்வளவு அழகு..

அவங்களை பத்தி அவங்ககிட்ட நான் கேட்டு தெரிஞ்சுகிட்ட சில
விஷயங்கள் ....





உங்களை பற்றி :

              "நான் ஒரு  கட்டிடக்கலை பொறியியல்  படிச்சுக்கிட்டு இருக்கேன்.இறுதியாண்டு மாணவி ".



எப்படி புகைப்படம் எடுக்குறதுல ஆர்வம்  வந்தது?

               "எதார்த்தமா எடுக்க ஆரம்பிச்சதுதான் ஒரு கட்டத்துல அதன் மேல தனி காதலே உண்டாகிடுச்சு எனக்கு" .

புகைப்படம் தவிர வேற எதுலலாம் உங்களுக்கு ஆர்வம் இருக்கு ?

                "புகைப்படம் எடுக்குறது தவிரனு சொல்லனும்னா எனக்கு  வரையுரதுல (drawing )அதீத ஆர்வம் இருக்கு..என் மனசுக்கு ரொம்ப ரொம்ப நெருக்கமான விஷயங்கள்ல  இதுவும் ஒன்னு ".

ஆர்வம் மற்றும் எதிர்கால திட்டம் ?

                "ஆர்ட் அன்ட் ஆர்கிடெக் இது ரெண்டுலையுமே விருப்பம் அதிகம்...எனக்கு பிடிச்ச இந்த விஷயங்களை நான் செய்யும்போது என் மனசுக்குள்ல  தனி உற்சாகம் ஏற்படுது .

                  மேலும் "Ides studios"  என்னும் பெயர்ல போட்டோ ஸ்டுடியோ நடத்துறோம் .பிறந்தநாள் விழாக்கள் , திருமணம், அரங்கேற்றம் போன்ற எல்லாவிதமான நிகழ்சிகளுக்கும் போட்டோ எடுக்க நாங்க ஆர்வமா இருக்கோம்".

அதென்ன பெயர் "IDES"?

                   "ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே நானும் என் நண்பர் சேத்தன் ஜெயின்-னும் சொந்த  நிறுவனம் ஆராம்பிக்குறது  பத்தி பேசிட்டு இருந்தப்போ நான் தேர்வு செஞ்ச பெயர் தான் இந்த 'IDES'.

Ides Studios எனும் பெயர் புகைப்படம் சம்மந்தமாகவும் ,Ides Architects கட்டிடக்கலை சம்மந்தமாகவும் இருக்கும்.ஆனா Ides Architects இன்னும் ஆரம்பிக்கல.அதுக்காக என்னை தயார்படுத்தியவுடனே ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்".

இவங்களோட சில புகைப்படங்களை நான் இங்க கொடுத்துருக்கேன். இவங்களுடைய புகைப்படங்களை பாத்து எதை எடுக்குறது எதை விடுறதுன்னு தெரியாம குழம்பினேன்.இந்தப் புகைப்படங்களை நான் ரசிச்ச மாதிரியே நீங்களும் ரசிப்பீங்கன்னு நம்புறேன்.(கீழே இருக்கும் புகைப்படத்தை கிளிக் செய்து  தெளிவாக பார்க்கலாம்...மேலும் Flicker-ல்   இவரது புகைப்படங்களை தெளிவாக அதிக Resolution-ல் காண  https://www.flickr.com/photos/varshnisreethar/)


இவங்களுடைய இந்த ஆர்வம் மேலும் மேலும் வளரனும் , இந்த துறையில பெரிய அளவுல சாதிக்கக்கூடிய பெண்கள்ல இவங்களும் ஒருத்தரா இருக்கணும்னு வாழ்த்துவோம்.


உங்களுக்கும் இதேமாதிரி அழகான புகைப்படங்களை நீங்க எதிர்பாக்குறத விட அதிகமா, அழகா  எடுக்கணுமா  வர்ஷினி  ஸ்ரீதர்-ஐ கூப்பிடுங்க...

வர்ஷினி  ஸ்ரீதரின் தொலைபேசி  - +91 9940312240       

  ஃபேஸ்புக்ல இவங்களோட புகைப்படங்களை I am Arte - Copyrights Varshni Sree எனும் பக்கத்துல பாக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக