பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 3 ஏப்ரல், 2014

புற்றுநோயை தடுக்கும் உணவுகள்

நாம தினமும் சாப்பிடுற காய்கறி,பழங்களுக்கு புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இருக்கு..அது என்ன என்னனு தெரியுமா?
வெங்காயம் :
         வெங்காயத்தில் அல்லிசின் என்ற வேதிப்பொருள் இருக்கு..இது புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் இருக்கு.சமைச்சு சாப்பிட்றதவிட பச்சையா சாபிற்றது நல்லது..

மாதுளம்பழம் :
          மாதுளம்பழத்துல எலாஜிக் ஆசிட் என்ற மூலப்பொருள் இருக்கு.இது புற்றுநோய் செல்லோட வளர்ச்சி வேகத்தை குறைக்கும்.



தக்காளி:
          தக்காளில இருக்குற லைக்கோபின் என்ற நிறமிப் பொருள் பல்வேறுவகையான புற்றுநோயை தடுக்குற தன்மைவாய்ந்தது.குறிப்பா ஆண்களுக்கு வரக்கூடிய ப்ரோஸ்டேட் புற்றினை தடுக்கும்.

முட்டைகோஸ் ,காலிஃபிளவர்:
           இதுல இருக்குற ஃபைட்டோ நியூட்ரியன்ஸ் என்ற வேதிப்பொருள் புற்றுநோய் செல்லோட வளர்ச்சி வேகத்தை குறைக்கும்.

தேநீர்:
           தேநீர்ல இருக்குற கேட்டச்சின் என்ற பொருள் நுரையீரல்,மார்பு,ப்ரோஸ்டேட் ,குடல் புற்றினை தடுக்கும்.கிரீன் டீ -ல இந்த பலன் அதிகம்.

மஞ்சள் :
            குர்க்குமின் என்ற புற்றுநோய் எதிர்க்கும் பொருள் இதுல இருக்கு..

ஆளி விதை,சால்மன் மீன்:
             இதுல இருக்குற ஒமேகா 3 கொழுப்பு எண்ணைகள் புற்றுநோய் செல்லுக்கு எதிராக போராடும் தன்மை வாய்ந்தது..

சர்க்கரைவள்ளி கிழங்கு:
             இதுல நிறைய பீட்டா கரோட்டின் என்ற நிறமி இருக்கு.இது நுரையீரல்,மார்பு,இரைப்பை ,குடல் புற்றினை தடுக்கும்.

திராட்சை,ஆரஞ்சு,ப்ராக்கோலி:
              இதுல விட்டமின் சி நிறையா இருக்குறதால புற்றுநோயை உருவாக்கும் நைட்ரஜன் மூலக்கூறுகளை தடுக்கும்.

வேர்க்கடலை:
               இதுல இருக்குற விட்டமின் இ கல்லீரல்,பெருங்குடல்,நுரையீரல் புற்றை தடுக்கும்.
           



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக