பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

கருந்திராட்சை

*கருப்பு திராட்ச்சையில எவ்ளோ சத்து இருக்குனு உங்களுக்கு தெரியுமா?

 கருப்பு திராட்ச்சையில 'புரோ ஆந்தோ சயனிடின்' என்கிற சத்து இருக்கு. இந்த சத்து திராட்சையோட சதைல 20 % -மும்  இதனோட விதைகள்ல 80%-மும் இருக்கு.நாம விதைகள நீக்கிட்டு சதையை மட்டும் தானே சாப்பிட்றோம்.
அப்போ எவ்ளோ சத்துக்களை நாம  இழக்குறோம் பாருங்க.

*அமெரிக்காவுல பயன்படுத்தப்படுற மூலிகை மருந்துகல்ள திராட்சை விதைகள்  ஒன்பதாவது இடத்துல இருக்கு.

*திராட்சை விதையோட சாற்றை ஜப்பான் நாடு இயற்க்கை உணவுன்னு அங்கீகரிச்சுருக்கு.அங்க ஒரு லட்சம் கிலோ விதைகள்  பயன்பாட்டுல இருக்கு.

*இது வைட்டமின் சி-ஐ விட 20 மடங்கு சத்தி வாய்ந்தது .

*ரத்த கொதிப்புக்கு நல்ல மருந்து.

*ரத்த குழாய் அடைப்பு,ரத்தக் குழாய்களின் வீக்கம் இதை எல்லாம் இந்த விதைல கிடைக்குற சத்து குறைக்குது.

*ரத்தப் போக்கை கட்டுப்படுத்துது.

*ரத்தக் குழாய்களில் இருக்குற கொலஸ்ட்ராலை குறைக்குது.*சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் மரத்துபோகுற தன்மை,கண் புரை வளர்றது போன்றவை வரமா தடுக்குது.

*சிறுநீர செயல்பாட்டில் ஏற்படுற குறைகளை சரி பண்ணுது.

*மாலைக்கண் நோயை நீக்குது.

*பெண்களுக்கு மார்பக புற்றுநோய்,கருப்பை கோளாறுகளை  சரிபண்ணுது.

*நினைவாற்றலை வளர்க்க உதவுது.

*வயதான ஆண்களுக்கு ப்ரோஸ்ட்டேட் புற்று வராமல் தடுக்குது.

இவ்வளவு நல்லத செய்யக்கூடிய திராச்சையோட விதைகள தாங்க நாம நீக்கிட்டு வெறும் சதையை சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம்.இனியாவது இந்த கருப்பு திராட்சையை விதையோட சாப்பிடுவோம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக