பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 3 பிப்ரவரி, 2014

வாடிக்கையாளர்களை ஏமாற்றும் DTH சேவைகள்


கேபிள் கனக்ஷன்ல மட்டும் இருந்தப்போ நிம்மதியா இருந்தோம்  , கேபிள் சரியா எடுக்கல வேலை செய்யலனு சொன்னா உடனே வந்து பாப்பாங்க சரி பண்ணுவாங்க...

எல்லா கேபிள்களும்   DTH சேவைக்கு மாறணும்னு சொன்னதும் , தெளிவா சேன்னல்களை பாக்க முடியலையே இதுக்கு நாமே நேரடியா  DTH சேவை இணைப்பை வாங்கிடலாம்னு முடிவு செஞ்சுதான் அனேகபேர்   DTH சேவைக்கு மாறுறாங்க ...

DTH சேவைக்கு மாறிட்டு ,படுற அவஸ்தை இருக்கே.....ஐய்யயயயயயயோ ...முடியல....

1.1500 ரூபாய் குடுத்து டிஷ் வாங்கிவச்சது மட்டும் இல்லாம , அதுக்கு மாசா மாசம் ரீசார்ஜ் 

2.கொஞ்சம் வேகமா காத்தடிச்சா எடுக்காது 


3.மழை வந்தா...!!  அட வரக்கூட வேணாம் ,  மழை மேகம் சூழ்ந்திருந்தாலே எடுக்காது ..

4.வாடிக்கையாளர் சேவைமையதுக்கு (Customer Care)  போன் பண்ணினா காசு ...உடனே எடுப்பாங்கன்னு நினைக்குறீங்களா?கண்டிப்பா எடுக்க மாட்டாங்க....காத்திருக்கவும்னு சொல்லி காத்துக்கிட்டு இருக்க வைப்பாங்க ...காத்துக்கிட்டு இருக்கு நேரம் அவங்க கூட நம்ம புகாரை பதிவு பண்ற நேரம் எல்லாத்துக்கும் காசு போகும்...

வாங்கின புதுசுல ,ஒரு நாலு மாசத்தில் இருந்து ஆறு மாசம் வரைக்கும் ஒழுங்கா எடுத்தது...அதுக்கு அப்பறம் ஒரு நாள் தமிழ் சேனல்கள் எதுவும் எடுக்கல ஒரே ஒரு தமிழ் நியூஸ் சேனல் மட்டும் எடுத்தது..மத்தபடி ஹிந்தி,சில இங்கிலீஷ் நியூஸ் சேனல் மலையாளம் சேனல் இது எல்லாம் எடுத்தது...

வழக்கம் போல வாடிக்கையாளர் சேவைமையதுக்கு போன் செஞ்சா , காத்திருங்கனு சொல்ல சரின்னு காத்திருந்து கொஞ்ச நேரம் கழிச்சு வாடிக்கையாளர் சேவைமைய அதிகாரியோட பேசி எங்களுடைய புகாரை பதிவு பண்ணினா ,உங்களுடைய டிஷ்ல ஒரு பொருள் மாத்தனும் அதுக்கு இவ்ளோ செலவாகும்னு சொல்லி மாத்தி குடுத்து பணம் வாங்கிட்டு போனாங்க .ஒரு ரெண்டு மாசம் ஒழுங்கா எடுத்தது மறுபடியும் அதே பிரச்சனை.மறுபடியும் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு போன் பண்ணினா உங்களுடைய டிஷ்  ரிசீவரை மாத்தனும்னு சொன்னாங்க , எதுக்காக மாத்தனும்  ரிசீவரில் பிரச்சனை இருந்திருந்தா எந்த சேனல்லும் எடுத்திருக்காதே அதென்ன சில சேனல்கள் வருது சில சேனல்கள் வரலைன்னு கேட்டா ,எங்களுக்கு சர்வீஸ் சார்ஜ் 150 ரூபாய் கட்டணும் நீங்கன்னு அப்போதான் சரி பண்ண முடியும்னு சொன்னங்க..எதுக்காக நாங்க பணம் கட்டணும் , என் டிஷ் நல்லாதான் இருக்கு , நான் மாசாமாசம் சரியா பணம் கட்டிடுறேன். என் கணக்கில் இன்னும் ஆறுமாசத்துக்கு பணமும் இருக்கு ,பிரச்சனை உங்க தரப்புல இருக்கு அதுக்கு நாங்க ஏன் பணம் கட்டணும்?சரியான காரணத்தை மட்டும் சொல்லுங்க நீங்க 1000 ரூபாய் கேட்டாலும் கட்ட தயாரா இருக்கேன்னு கொஞ்சம் குரலை உயர்த்தி  சொன்னா போன் இணைப்பை துண்டிச்சுடுறாங்க .. இவங்களுக்கு மறுபடியும் போன் பண்ண மறுபடியும் நான் இணைப்புல காத்துக்கிட்டு இருக்கணும்(காத்துக்கிட்டு இருந்தேன்) அதுக்கு பணம் போகும்(பணம் போச்சு). வேற ஒரு சேவைமைய அதிகாரி இணைப்புல வருவாரு(வந்தாரு) மறுபடியும் முதல்ல இருந்து அவர் கிட்ட புகார் குடுக்கணும் (கொடுத்தேன்) இவரும் அதே பதில் நமக்கு தருவார்(தந்தாரு) இவருகிட்ட காரணத்தை கேட்டாலும் இணைப்பை துண்டிச்சிட்டு போய்டுவார்(போயிட்டாரு)...

வாடிக்கையாளரை பாத்தா முட்டாள்கள் மாதிரி இருக்கா என்ன ? அத்தனை DTH சேவைகளும் வாடிக்கையாளர்களை ஏமாத்திக்கிட்டு இருக்காங்க.. ஒழுங்கா வாடிக்கையாளர்களை மதிக்குறதும் இல்ல , சொல்ற புகார்க்களுக்கு பதில் சொல்றதும் இல்ல. காசு கேட்டா மட்டும் என்ன ஏதுன்னு கேக்காம பணம் கட்டணும். எப்படி எல்லாம் மக்களை ஏமாத்தி சம்பாதிக்குறாங்க..ஒரு மாசத்துல 100வாடிக்கையாளர்களை இப்படி ஏம்மாதினாலே மாசத்துக்கு 15000 சம்பாதிக்குறாங்க ..
எத்தனைநாள் எந்த எந்த வகைல தான் மக்களை ஏமாத்துவீங்க / ஏமாத்தப்போறீங்க ? ஒழுங்கான DTH சேவை குடுக்க முடியாத நீங்க எல்லாம் ஏன் DTH சேவை ஆரம்பிக்குறீங்க? எந்த எந்த வகைல எந்த எந்த ரூபத்துல எப்படி எல்லாம் வாடிக்கையாளர்கள் ஏம்மாந்துகிட்டு இருக்கோம்..


5 கருத்துகள்:

 1. செட் டாப் பாக்ஸ் ரிப்பேர் பண்ணுகிறேன் என்று 150 ரூபாயினை ஒவ்வொரு தடவையும் அழுதது மட்டுமல்லாமல் வீண் மன உளைச்சல்

  பதிலளிநீக்கு
 2. உங்க பதிவை படித்த ரஜினியின் லூசு ரசிகர்கள் உண்மையிலேயே கோவில் கட்டிவிடப் போகிறார்கள் நண்பரே. ஏன் இந்த விபரீத பதிவு..

  இப்படி அவங்களுக்கு போன் போடுவதற்கு பதிலாக படிச்ச நீங்கள் கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு போகலாமே அதை ஏன் படிச்ச நீங்கள் செய்யக் கூடாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புரியல..இந்த போஸ்ட்க்கும் ரஜினி சாரின் ரசிகர்களுக்கும் என்ன சம்மந்தம் ? கன்ஸ்யூமர் கோர்ட்க்கு போறது ஒன்னும் அவ்ளோ ஈஸி இல்ல சார்...நேரமும் இல்ல..நாட்டுல பாதி பேருக்கும் மேல பிரச்சனைய பாத்தும் விலகிபோறாங்கனா பயம் காரணம் இல்ல சார்..ஆயிரம் பொறுப்பு இருக்கு .. அதான் காரணம்..

   நீக்கு
 3. பதில்கள்
  1. எல்லா DTH சேவையும் அப்படித்தான் இருக்கு

   நீக்கு