பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

எங்க பாத்தாலும் ஆங்கிலம் எதுல பாத்தாலும் ஆங்கிலம்னு பொலம்புறவங்களுக்கு

எங்க பாத்தாலும், எப்ப பாத்தாலும் மொழி பற்று, மொழி பற்றுன்னு சொல்றாங்க..சொல்றோம்..தாய் மொழியில பேசாம ஆங்கிலத்துலையே பேசுறோம்னு சொல்றோம்.... குறைப்பட்டுக்குறோம் .


சீன மக்கள் அவங்க தாய்மொழியான சைனீஸ் மொழி பேசுறாங்க..ஜப்பான் மக்கள் அவங்க தாய் மொழியான ஜாப்பனீஸ் மொழி பேசுறாங்க..அமெரிக்காகாரங்க அவங்க தாய் மொழியான ஆங்கிலத்தை பேசுறாங்க..நம்ம தாய் மொழி ஹிந்தி அப்போ இந்தியாவுல இருக்குற நாம எல்லாருமே ஹிந்தி தானே பேசணும்?நமக்குல்லையே தான் ஏகப்பட்ட மாநிலம் இருக்கே..ஒரு ஒரு மாநிலத்துக்கும் ஒரு ஒரு மொழி பேசுறோம்..அப்போ ஒரே நாட்டுக்குள்ள ஒருத்தன்  எத்தன மொழியைத்தான் கத்துக்குறது?அப்போ ஹிந்தியை கட்டாய மொழியாக்கி எல்லாரும் ஹிந்தி பேசணும்..அதுவும் செய்யமாட்டோம்..அப்ப நம்ம நாட்டுக்குள்லயே பரஸ்பரம் எண்ணத்தை பகிர்ந்துக்க நமக்கு ஆங்கிலம் தேவை படுத்து..நமக்கு அதிகமான வேலை வெளிநாட்டுல இருந்து வருதுங்குறதால ஆங்கில அறிவு கட்டாயம் ஆகவேண்டியிருக்கு..

நம்ம நாட்டுக்குள்லையே வேலை செய்யணும்னாலும் நமக்கு பொது மொழி தேவைப்படுது  ஹிந்தியை கத்துக்க மாட்டேங்குறோம் அப்போ அங்கிலத்தை தானே கத்துக்கணும்..அதனால அதிகமா பேசுறது ஆங்கிலமா இருக்கு..என்ன பண்றது..

தாய் மொழி தெரிஞ்சவங்க தாய் மொழி தெரிஞ்சவங்ககிட்ட அதே மொழியிலையே பேசலாம்..தப்பில்ல...அதுக்கு வெக்கப் படாதீங்க..அசிங்கப் படாதீங்கனு சொல்லுங்க..அத விட்டுட்டு அங்கிலத்துலையே பேசக்கூடாதுன்னு சொல்றது எந்த விதத்துலையும் நியாயம் இல்ல..

அடிப்படை கல்வியில மாற்றம் வேணும்...குறைஞ்சபட்சம் ஐந்தாவது வரைக்குமாவது ஹிந்தி முதல் கட்டாய மொழியாக ,அந்த மாநிலத்தின் மொழி இரண்டாவது கட்டாய மொழியாக இருக்கணும் ,அடுத்து ஆங்கில மொழி இருக்கணும்..இப்படி செஞ்சாதான் ஓரளவுக்காவது தீர்வு கிடைக்கும்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக