பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

தயவுசெஞ்சு மனசை காயப்படுத்தாதீங்க ....


சஞ்சீவும்  ஷர்மியும் கணவன் மனைவி..சஞ்சீவ்க்கு சினிமானா ரொம்ப பிடிக்கும் .ரொம்ப பிடிச்ச நடிகர்னு குறிப்பிட்டு சொல்ல முடியாது .நல்ல கதை அம்சம் இருந்தா ரொம்ப பாராட்டுவார்.  அந்த படத்தை பத்தி மனைவி ஷர்மிகிட்ட பேசிக்கிட்டே இருப்பார் .

ஷர்மிக்கும் சினிமா பாக்குறதுனா ரொம்ப பிடிக்கும்  படிக்குற காலத்துல இருந்தே.ஒரு படம் பாத்தா அதை பத்தி ஃப்ரண்ட்ஸ் கூட நிறையா டிஸ்கஸ் பண்ணுவா .

சஞ்சீவுக்கு நடிகைகளையும்  ரொம்ப பிடிக்கும்..ஒரு கட்டத்துல சினிவாவுல அந்த நடிகைகள் கவர்ச்சியா டிரஸ் பண்ணிட்டு நடிக்குறதை ஆடுறதை பாடுறதை பாத்து மனைவி ஷர்மியை ரொம்ப டீஸ் பண்ண ஆரம்பிச்சார்..படத்துல இருக்குற நடிகை மாதிரி உன் உடல்வாகு இல்ல அந்த நடிகை மாதிரி அழகில்ல ,அந்த நடிகைமாதிரி அது இல்ல அந்த நடிகை மாதிரி இது இல்லன்னு தினம் தினம் அவரோட டீஸ் அதிகமாகிட்டே இருந்தது..ஒரு கட்டதுல தான் அழகில்ல தனக்கு அந்த மாதிரி உடல்வாகு இல்ல லட்ச்சணம் இல்லனு தன் மேலையே ஷர்மிக்கு தாழ்வு மனப்பான்மையும்  வெறுப்பும்  வர ஆரம்பிச்சிடுச்சு ..தன்னையே அவ வெறுக்க ஆரம்பிச்சுட்டா..இது கேள்வி பட்டு அவளோட உறவினர்கள் அவள ரொம்ப கஷ்ட்டப்பட்டு அவளை அந்த மன நிலைமைல இருந்து வெளில கொண்டுவந்தாங்க..

இதை  ஏன் சொல்றேனா ஆண்களே ....சினிமாவுல பாக்குறது எல்லாமும்  உண்மை இல்ல..தன்னை திரைல அழகா தெரியவைக்க அவங்க எவ்வளவு மேக்கப் போடுறாங்கனு தெரியுமா?உச்சந்தலைலயிருந்து உள்ளங்கால் வரை மேக்கப் போடுறாங்க..தன் அழகை பராமரிக்க பாதுகாக்க குறுப்பிட்ட தொகை செலவு பண்றாங்க..பல லட்சங்கள்,கோடிகள் சம்பளம் வாங்குற அவங்களுக்கு பல ஆயிரங்கள் செலவு பண்ணி உடம்பின் அழகை பாதுகாக்குறது பெரிய விஷயம் இல்ல...பல ஆயிரம் மட்டுமே சம்பளம் வாங்குற மிடில் கிளாஸ் எல்லா பணத்தையும் இப்படி செலவு பண்ணினா குடும்பம் என்ன ஆகுறது?அவ்ளோ பணம் இருந்தா நீங்க செலவு பண்ணுங்க..உங்க பொண்டாட்டி சினிமாவுல வரும் நடிகைகள் மாதிரி இருக்கணும்னா நீங்க சினிமாவுல வர நடிகர்கள் மாதிரி இருக்கீங்களான்னு முதல்ல யோசிங்க.அப்பறம் உங்கள கட்டிகிட்டவள காயப்படுத்தலாம்.நீங்களும் அப்படி செலவு பண்ணுங்க உங்க பொண்டாட்டிய நடிகைகள் மாதிரி பளிச்சுன்னு அழகா மாத்துங்க.அத விட்டுட்டு உங்கள நம்பி இருக்குறவளை தயவு செஞ்சு  இப்படி அசிங்கமா காயப்படுத்தாதீங்க.

பேன்கேக்,கிரீம்,பவுடர் அது இதுன்னு உடம்பு முழுக்க பூசிக்கிட்டு நடிக்குற அவங்க கூட உங்கள நம்பி கல்யாணம் பண்ணினவங்கள கம்பேர் பண்ணி காயப்படுத்தாதீங்க.அழகு வெளில மட்டும் இல்ல மனசுலையும் இருக்கு.அந்த உள் அழகை பாருங்க.சந்தோஷமா வாழுங்க.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக