பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 27 பிப்ரவரி, 2014

நம்ம உடம்ப பத்தி கொஞ்சம் தெரிஞ்சிப்போமா!!!


- நம்ம உடம்புல ரொம்ப பெரிய பகுதி எது தெரியுமா?நம்ம 'தோல்' தான்.ஒரு மனுஷனோட தோல் பரப்பளவு 20 சதுர அடி .

- மொத்த வியர்வை சுரப்பிகள் 20 லட்சம்.

- மொத்த உரோமக்கால்கள் 50 லட்சம்.

- நம்ம உடம்புல இருக்குற செல்லோட எண்ணிக்கை 50 ட்ரில்லியன் அதாவது 500 லட்சம் கோடி.

-ஒவ்வொரு ஒரு மணிநேரத்துக்கும் அழிந்து புதுப்பிக்க படும்  செல்களின் எண்ணிக்கை 6 லட்சம்.இதுமாதிரி சுழற்சி முறையில புதுப்பிக்கப்படுறதுனால ரெண்டு வருஷக்கு ஒருமுறை புதுசா உருவாகுதாம் உடல்.

- உடம்புல ரொம்ப சின்ன செல் ஆணோட உயிரணு.

- ரொம்ப பெரிய செல் பெண்ணோட கரு முட்டை.

- நம்ம உடம்புல ஓடுற ரத்தத்தோட சராசரி அளவு 5 லிட்டர்.

- ரத்த குழாய்களோட மொத்த நீளம் 148800 கிலோமீட்டர் .

- ரத்தத்தின் ஓர் சிகப்பு அணுவின் ஆயுட்காலம் 127 நாட்கள்.

- வெள்ளை அணுவின் ஆயுட்காலம் 120 நாட்கள்.

- நம்ம உடம்புல இருக்குற நீரோட மொத்த அளவு 42 லிட்டர்.

- சிறுகுடலின் நீளம் 6 மீட்டர்.

- இதயம் துடிப்பது ஒரு நாளைக்கு 103689 தடவை.

- பிறக்கும் குழந்தையோட உடம்புல இருக்குற எலும்புகள் 300 ,முழுமையா வளர்ச்சியடைந்த உடலின் மொத்த எலும்புகள் 206 .

- நம்ம உடம்புல இருக்குற தனிமங்கள் கார்பன் ,ஆக்சிஜன் ,ஹைட்ரஜன் ,நைட்ரஜன் ,கால்சியம் ,பாஸ்பரஸ் ,இரும்பு ,அதாவது , 3 அங்குல நீளமுள்ள ஆணி செய்ய தேவையான இரும்பும் ,900 பென்சில்கள் செய்ய தேவையான கார்பனும்,7 சோப்பு கட்டிகள் செய்ய தேவையான கொழுப்பும் ,2200 தீக்குச்சிகள் செய்ய தேவையான பாஸ்பரசும் மனுஷனோட உடம்புல இருக்காம்.

- நாமசிரிக்கும் போது 17 தசைகள் வேலைசெய்யுதாம்.

- கோபப்படும்போது 43 தசைகள் வேலைசெய்யுதாம் .

- தலையில சராசரியா ஒரு லட்சம் முடிகள் இருக்கு.

- கண்ணிமைகள் ஒரு நாளைக்கு 20000 முறை இமைக்குது.

- நாம சாப்பிட்ட உணவு செரிமானம் ஆக 12 மணிநேரம் ஆகும்

- உடல்ல 230 மூட்டு இணைப்புகள் இருக்கு.

- தும்மும் போது நமது மூக்கில் இருந்து வெளியேருற காத்தோட வேகம் 180 கிலோ மீட்டர்.

- உடம்புல இருக்குற வலுவான தசை தாடைல இருக்குற 'மாசெட்டர் தசை '.

- வளர்ந்த ஒருத்தரோட நுரையீரல்ல 30கோடி காற்றுப் பைகள் இருக்கு.

- உடம்புல 70% தண்ணி இருக்கு.

- நம்ம உடம்புல ஓடுற நரம்புகள் எல்லாத்தையும் இணைத்தால் 10000 கிலோமீட்டர் தூரம் இருக்குமாம்.

- மூக்கும் காதும் வாழ்நாள் முழுக்க வளருமாம்..

இவ்வளவு ஆச்சர்யங்கள் இருக்குற நம்ம உடம்ப நல்ல ஆரோக்யமான சாப்பாடு சாப்பிட்டு ஆரோக்கியமா பாத்துக்கலாமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக