பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

ஜிமெயிலின் வசதிகள்


ஜிமெயிலின் புதிய வசதிகள் என்ன என்ன தெரியுமா?

ஜிமெயில் ஸ்டார்.

ஜிமெயில்ல இன்பாக்ஸ்ல செய்திக்கு முன்னாடி வலதுபக்கதுல (செய்திக்கு வலதுபக்கதுல) ஒரு ஸ்டார் குறியீடு இருக்கும்.நமக்கு ரொம்ப முக்கியமான மின்னஞ்சல்னா அதை ஸ்டார் பண்ணி வச்சுக்கலாம்..நாம ஏதாவது முக்கியமான மின்னஞ்சலை தேடும் போது இந்த ஸ்டார் குறியீடு இருக்குறதை மட்டும் தேடலாம்.எப்படினா has:yellow-star னு search -ல கொடுத்து தேடினோம்னா மஞ்சள் வண்ண star குறியீட்டுல இருக்குற மெயில் மட்டும் காட்டப்படும்..இந்த ஸ்டார் குறியீட்டோட கலரை மாத்திக்கலாம்.Settings போயிட்டு அதுக்கான General Tab போயிட்டு Stars பிரிவுல நீங்க உங்களுக்கு பிடிச்ச வண்ணத்தை மாத்திக்கலாம்.

மெயில் Tab

இப்போ கூகிள் 5 விதமான Tab வசதியை குடுத்துருக்கு.நமக்கு வேணும்ங்குற அளவுக்கு Tab set பண்ணிக்கிட்டு நம்முடைய மின்னஞ்சலை அதுக்கு தகுந்தமாதிரி வகைபடுத்தி பிரிச்சு அந்த அந்த Tab-களில் செட் பண்ணிக்கலாம்.

இத செய்ய...

மின்னஞ்சலை செலக்ட் பண்ணிக்கோங்க.மேல இருக்குற More option-ஐ கிளிக் பண்ணுங்க இப்போ வரும் பட்டியல்ல அந்த மின்னஞ்சல் எந்த பட்டியலுக்கு போகணுமோ/மாறனுமோ அதை செலக்ட் செஞ்சா உங்க மின்னஞ்சல் அந்த பட்டியலுக்கு மாறிடும்.

கூகிள் டிரைவ்

இந்த வசதி ரொம்ப பயனுள்ள வசதி.இப்போ பொதுவா ஜிமெயில்ல ஒரு மின்னஞ்சல்ல Attachement வசதியில 25MB மட்டும் தான் இணைத்து அனுப்ப முடியும்.அதுக்கும் மேல /பெரிய ஃபைல் அனுப்பனும்னா அதை கூகிள் டிரைவ்க்கு மாத்திக்கிட்டு அந்த டிரைவ்ல இருந்து அந்த ஃபைலை ஷேர் பண்ணிக்கலாம்.கூகிள் டிரைவ் போல்டர் உருவாக்கி அங்க ஃபைல்களை சேமிக்கலாம்.அங்க இருந்து அதை  மின்னஞ்சல் அனுப்பலாம் .இப்படி பல வசதிகள் இருக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக