பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 3 ஜூன், 2013

பப்ப்ப்ப்பாம்பு ....

பாம்புனா படையும் நடுங்கும்னு சொல்வாங்க.பாம்புனா அவ்ளோ பயம் .ஏன்னா அது கடிச்சுடுமோ ,விஷம் நம்ம உடம்புல ஏறிடுமோனு பயம்.அந்த தன்மை மட்டும் பாம்புக்கு இல்லைனா நாம யாரும் அத மதிக்கக்கூட மாட்டோம்.

எல்லா பாம்புக்கும் விஷம் இருக்கா ? கண்டிப்பா இல்ல.விஷம் உள்ள பாம்பு விஷம் இல்லாத பாம்புன்னு ரெண்டுவகை இருக்கு.

விஷம் இருக்குற பாம்போட கருவிழிகள் நீளமா இருக்கும்,செதில்கள் சின்னதா இருக்கும்,தலை முக்கோண வடிவத்துல இருக்கும்.

பாம்புவகைல பச்சைப்பாம்பு,மண்ணுளி பாம்பு,இருதலை பாம்பு மட்டும் தான் குட்டி போடும்.மத்த எல்லா வகையும் முட்டை இடும்.

பிறக்கும் போதே பல்லோட பிறக்கும்.


ஒரு சில பாம்புகள் முட்டை சாப்பிடும்.ஆனா எந்த பாம்பும் பால் குடிக்காது.பாலின் அடர்த்தி அதிகம் அதனால அது பாம்புக்கு செரிமானம் ஆகாம ,இறப்பதற்கு வாய்ப்பு இருக்கு.

ரெண்டுதலை பாம்புகள் தான் இருக்கே தவிர,ஐந்து தலை பாம்புகள் எல்லாம் கிடையாது.

எந்த பாம்பும் நாகரத்தினத்தை எல்லாம் வாய்ல வச்சுருக்காது .

பாம்புக்கும் கீரிக்கும் ஆகாதுனு சொல்றதும் உண்மை இல்ல.காட்டுல இருக்குற மத்த மிருகங்கள் எப்படி சண்டை போடுது அதுமாதிரிதான் இது ரெண்டும் சண்டை போடுதே தவிர விரோதிகள் கிடையாது.

பிடிபட்ட பாம்ப கொல்லாம விட்டோம்னா அது நம்மள எப்படியும்  கொண்னுடும்னு ஒரு நம்பிக்க இருக்குறது சுத்த மூட நம்பிக்கை.ஏனா ,பாம்புக்கு 3 அறிவுதான்.அதுக்கு நியாபக சத்தியே கிடையாது.

பாம்பு மனுஷங்களோட வியர்வை ஸ்மெல் வச்சுத்தான் பழகும்.

பாம்பு வீட்ல வந்துடுச்சுனா வெள்ளை பூண்டு ,வெங்காயம் அரசு தண்ணில கலந்து தெளிச்சோம்னா போய்டும்.(பாம்பு பாத்ததும் பூண்டையும் வெங்காயத்தையும் தேடி அத மிக்ஸிலையோ இல்ல கல்லுலையோ அரைக்கலாம் மைண்ட் போகுமானு சத்தியமா எனக்கு தெரியலைங்க)

பாம்பு கடிச்சா என்ன என்ன முதலுதவி பண்ணனும்?பாப்போம்....

                   முதல்ல பயப்படக்கூடாது .தைரியமா இருக்கணும்.பாம்பு கடிச்ச இடத்துல கயிறு இல்ல ரப்பர் டியூப் மூலம் கொஞ்சம் தளர்வா கட்டணும்.அந்த இடத்த சுத்தமான உப்பு சோப்பு மூலம் கழுவனும்.

பாம்பு கடிக்கு 'ஏ .ஸ் வி 'ங்குற மருந்து தான் பலனளிக்கும்.

பாம்போட விஷத்துல 75% ப்ரோடீனும் 25%விஷத்தன்மை கொண்ட என்சைம்கள் இருக்கு.

25 விஷப்பாம்புல இருந்து 1 மில்லி கிராம் மருந்துதான் எடுக்க முடியும்.அதனால மருந்தின் விலை அதிகமா தான் இருக்கும்.

                                           -நன்றி.வார இதழ் 
                   


இந்த போஸ்ட்-ஐ ஆடியோவிலும் கேக்கலாம்

1 கருத்து:

  1. பாம்புகளைப் பற்றி பல அறிய விஷயங்கள் தமிழில் உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டோம். அது போல மனித வடிவில் வரும் பாம்புகளிடம் இருந்து தப்பித்து கொள்ள நல்ல செய்திகளை தாருங்களேன்

    பதிலளிநீக்கு