பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 1 ஜூன், 2013

சந்தானம் 100 !!!!!

சந்தானத்தின்  சதம் !!!

சந்தானம்...இவரோட காமெடி எல்லாருக்குமே பிடிக்கும் .சரிதானே.நல்ல டைமிங் சென்ஸ் இவருக்கு.லொள்ளு சபா பலபேரோட ஃபேவரட் ப்ரோக்ராம்னு நினைக்குறேன்.எனக்கு லொள்ளு சபா பிடிக்கும்.அப்போதுள இருந்தே சந்தானம் அவர்களோட ஜோக்ஸ்-ம் பிடிக்கும்.


சந்தானம் 1999-லையே விஜய் டிவில்-டீ கடை பெஞ்ச் ,2000-ல் சகலை vs ரகளை ,2001-ல் இருந்து லொள்ளு சபா மூலமா பிரபலம் .
2002-ல் பேசாத கண்ணும் பேசுமே படம் தான் முதல் படம்னாலும் 2004-ல் மன்மதன் தான் ரிலீஸ் ஆனது.பிப்ரவரி 14,இங்கிலிஷ்காரன்னு ஆரம்பிச்சு இப்போ சேட்டை படம் வரைக்கும் 81 படங்கள்ல நடிச்சுருக்கார். சந்தானம் இல்லாத படத்தை இப்போ பாக்குறதே அரிதுங்குற நிலைல இருக்கு.

சிவா மனசுல சக்தி படத்துக்காக,விஜய் டிவி-யின் சிறந்த காமெடியன் அவார்ட்டு ,பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துக்கு விஜய் டிவி-யின் சிறந்த காமெடியன் , சிறந்த காமெடியனுக்கான எடிசன் அவார்ட்டு , சிறந்த காமெடியனுக்கான பிலிம் ஃபேர் அவார்ட்டு ,சிறுத்தை படத்துக்கு விஜய் டிவி-யின் சிறந்த காமெடியன் அவார்ட்டு ,வானம்படத்துக்கு SIIMAவின் சிறந்த காமெடியன் அவார்ட்டுனு நிறையா அவார்ட்டுகளை வாங்கிட்டு இருக்கார்.


தன்னை மேல ஒரு படி உயர்த்திக்கிட்டு ,கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்கு ப்ரொடியூசர் ,ஸ்கிரிப்ட் ரைட்டர் ,சேட்டை படத்துக்கு டயலாக் ரைட்டர்னு உயர்ந்து இருக்கார்.இதுவரை சந்தானம் 81 படங்களில் நடிச்சிருக்கார்.2013 -ல் மட்டும் சிங்கம 2,தலைவா உள்ளிட்ட 25 படங்களில் நடிச்சுகிட்டு இருக்கார்.2013-ல் இந்த படங்கள் வெளியாகும்னு நம்புவோம் .ஸோ ,நடிச்ச ,நடிக்குற படங்களை சேர்த்தா 100கும் மேல நடிச்சு இருக்கார் ,குறுகிய காலத்துல .

அவருக்கு நம்முடைய வாழ்த்துக்களை  தெரிவிப்போம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக