பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 2 ஜூன், 2013

பாடலின் வரிகள் - சிகரம் - வண்ணம் கொண்ட வெண்ணிலவே

படம் : சிகரம் 
பாடல் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே
இசை : S .P .பாலசுப்ரமணியம் 
பாடியவர் : S .P .பாலசுப்ரமணியம் 


வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை

பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை
சுவாசிக்க ஆசை இல்லை
கண்டு வந்து சொல்வதர்க்கு
காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தை பிரித்து விட்டலால்
வானத்தில் ஏதுமில்லை
தள்ளி தள்ளி நீ இருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்கை இல்லை


வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ

நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திர பூ பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி
கன்னி உன்னை பார்த்திருப்பேன்
கால் கடுக்க காத்திருப்பேன்
ஜீவன் வந்து சேரும் வரும் வரை
தேகம் போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்


வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக