பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 15 ஜூன், 2013

மருத்துவச்சேவை

கண் ,காத்து,மூக்கு,தொண்டை,இதயம்,சிறுநீரகம்ஸ்பெஷலிஸ்ட்னு மதுரைல இருக்குற பிரபல மருத்துவர்கள் மூலமா 'அகில இந்திய வித்யார்த்தி பரிஷித் மற்றும் இளைய  பாரதம் சேவா டிரஸ்ட்' எனும் பேர்ல மதுரைல  ஒரு டிரஸ்ட் 14 வருஷமா,ஞாயிற்று கிழமைகள்ல சிறப்பு முகாம்கள நடத்திகிட்டு வருது.


மதுரைல முனிச்சாலை சீனிவாச பெருமாள் கோவில் சந்தில் இருக்குற இவங்க அலுவலகலத்துல ஞாயிற்று கிழமைகள்ல இந்த முகாம் நடந்துகிட்டு வருது.இந்த சேவைக்கு மூலக்காரணமா இருந்தவர் மதுரை கல்லூரி பேராசிரியர் கே.ஆர்.பரமசிவம்.

இதுவரை குழந்தைகள் பெரியோர் முதியவர்கள்க்குனு 607 முகாம்களை நடத்தி இருக்காங்க.சர்க்கரை,இ.சி.ஜி,ரெத்த அழுத்தம் எல்லாம்  செக் பண்ணி மருந்து குடுக்குறாங்க.இதுக்கு ஒரு ரூபாய் கூட இவங்க வாங்குறது இல்ல.


சேவை செய்ற எண்ணம் இருக்குற தொண்டர்கள்,தன்னார்வ இளைஞர்கள் தான் இந்த சேவையை இதனை வருஷம் செய்ய காரணம்னு சொல்றாங்க இவங்க.

இவங்க சேவை இன்னம் மேல மேல தொடர வாழ்த்துவோம்...

இவங்களை வாழ்த்த - 98421 89404

                        நன்றி வாரஇதழ் 

மக்களுக்கு எதையும் எதிர்பாக்காம சேவை பண்றதுக்கும் ஒரு நல்ல மனசு வேணும்.சேவை செய்யணும்னு எண்ணம் வரணும்.. 

என் அப்பா தொழுநோய் ஆய்வாளரா இருந்தாரு.நான் ஹாஸ்பிடல் போய் பாத்துருக்கேன்.தொழுநோய்  இருக்குறவங்கனாலே  ஒதுக்கி வைக்குறதை கேள்விப் பட்ருக்கேன் .ஆனா என் அப்பா அத்தனை பேஷன்ட்களுக்கும் கொஞ்சம் கூட முகம் சுழிக்காம மருத்துவ உதவி செஞ்சாரு.அவங்களை     தொட்டா நமக்கும் ஒட்டிக்குமோனு  ஒதுக்குறவங்க மத்தியில அவங்கள தொட்டு காயத்தை சுத்தம் பண்ணி மருந்து போடுவார்.ஒரு ஒரு கிராமத்துல வொர்க் போட்ருப்பாங்க அங்க போய் இவங்க செக் பண்ணும் ,சில பேர் இது தனுக்கு இருக்குனு தெரிஞ்சாலும் ஹாஸ்பிடல்  வரமாட்டாங்க .,அப்படி பட்டவங்கள கூட தேடி போய் மருந்து குடுத்து  தொடர்ந்து செக்கப் பண்ணி தைரியம் சொல்லிட்டு வருவார்..பல பேர் குணமாகி இருக்காங்க ..இந்த டிரஸ்ட்ல மருத்துவ சேவை பத்தி படிச்சப்போ  இத சொல்லனும்னு தோணிச்சு .


இந்த போஸ்ட்-ஐ ஆடியோவிலும் கேக்கலாம்

1 கருத்து:

  1. அருமையான செய்தி.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி ஸ்ரீ வலைப்பக்கம்.

    பதிலளிநீக்கு