பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 19 ஜூன், 2013

ஒளி ஓவிய புகைப்படக்கலைஞர்

கோவை சேர்ந்த ஜெஸ்வின் ரேபெல்லோ  இவர் ஒரு புகைப்படக்கலைஞர்.இவர் புகைப்படக்கலைத்துறைல வித்தியாசமா ஏதாவது செய்யலாமேனு நினச்சப்போ இவருக்கு வந்த ஐடியா தான் 'ஒளி ஓவிய ' புகைப்படம் .உலகம் முழுக்க இந்த ஒளி ஓவியத்தை மட்டும் எடுக்குற புகைப்படக்கலைஞர்கள் நிறை பேர் இருந்தாலும் அதுல இருந்து சிறந்த 73 பேர் மட்டும் தேர்வு செஞ்சு அவங்களோட புகைப்படத்தை மும்பைல கண்காட்சியா  வச்சிருக்காங்க.அதுல இடம் பெற்ற ஒரே ஒரு இந்திய  ஒளி ஓவிய புகைப்படக்கலைஞர் இவர் மட்டும் .
இவரோட புகைப்படத்தை எல்லாம் பாத்த கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் இவரையே உலகத்துல இருந்து வந்துருக்குற அத்தனை பார்வையாளர்களுக்கும் டெமோ குடுக்க சொல்லிட்டாங்களாம்.

எவ்ளோ பெரிய,பெருமையான விஷயம்ங்க  இது.

இதுவரை 80 புகைப்படங்களை எடுத்துருக்குற ஜெஸ்வின் ,100 புகைப்படங்களை எடுத்ததும் அதை எல்லாம் ஒருகண்காட்சியா வைக்கலாம்னு ஒரு ஐடியா -ல இருக்காறாம் .
இந்த கலையை மத்தவங்களுக்கும் சொல்லிக்குடுக்குற எண்ணத்துல இருக்காறாம் .இது அதை விட பெரிய விஷயம்ங்க.

இவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அவருக்கு நீங்களும்  வாழ்த்துக்களை சொல்லனுமா : 9944252470

ஃபேஸ்புக்கில் இவருடைய புகைப்படங்களை 'Jeswin Rebello Photography' என்ற
பக்கத்தில் பார்க்கலாம்.

இந்த போஸ்ட்-ஐ ஆடியோவிலும் கேக்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக