பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 18 ஜூன், 2013

பார்வை இல்லைனா என்ன?

'ஸ்பெஷல் பீப்புள் '  அதாவது உடம்பில் எந்தவித ஊனமும் இல்லாதவங்களை விட சில குறைகளோட இருக்கும் இந்த 'ஸ்பெஷல் பீப்புள் '-க்கு திறமை எப்பவுமே அதிகம் தான்.அதுக்கு முக்கிய காரணம் அவங்களோட மிகப்பெரிய பலமான தன்னம்பிக்கை.

எனக்கு இந்த குறை இருக்கு என்னால எதுவும் பண்ண முடியாதுனு ஒருநாளும் அவங்க தளர்ந்துடமாட்டாங்க.அவங்களுக்குள்ள ஒரு உத்வேகம் இருக்கும் எப்பவும்.சாதிக்கணும்னு வெறி சாதாரண மக்களை விட இவங்ககிட்ட கொஞ்சம் அதிகமாவே இருக்கும்.சாதாரண மக்கள் அவங்களப்பாத்து கத்துக்கவேண்டியது நிறையா இருக்கு.


அப்படியாப்பட்ட ஒரு  மாற்றுத்திறனாளி  பத்தி தான் இப்போ சொல்லப் போறேன்.

பார்வை இல்லைனா என்ன என்னால இதுவும் முடியும்னு படத்துக்கு  'ரீ ரெகார்டிங்' செஞ்சுருக்கார் பார்வை இழந்த 'திரு கிரியோன் கார்த்திக்'.

ஒரு படத்துக்கு  'ரீ ரெகார்டிங்'ங்குங்கறது ஒரு பெரிய வேலை.என்னதான் அருமையான காட்சிகளை படமாக்கினாலும் அந்த காட்சிக்கு தகுந்த உணர்வுகளை பாக்குற நமக்கும் ஏற்படுத்துறது இந்த  'ரீ ரெகார்டிங்' -ல தான் இருக்கு.

பார்வை இருக்குற ஒருத்தர் இந்த வேலையை செஞ்சாலே அந்த படத்துல அது சரி இல்ல பா,இது சரி இல்ல பா.. 'ரீ ரெகார்டிங்' ரொம்ப மோசம் இப்படி பலவித கமெண்ட்களை அடிக்குறவங்க நாம.(உண்மைய ஒத்துக்கணும் தானே).இந்த வேலையை பார்வை இல்லாத ஒருத்தர் பக்காவா செஞ்சு முடிச்சு எல்லாரோட பாராட்டையும் வாங்கிருக்காருனா அவர எப்படி பாராட்டாம இருக்க முடியும்?


சின்ன வயசுல தன்னோட இடது கண்ணுல ஏற்பட்ட சின்ன பிரச்சனையால மருத்துவமனைல சேர்த்து அந்த டாக்டர்களோட தவறான ஆபரேஷனால இடது கண் பார்வையை இழந்துருக்கார் திரு கிரியோன் கார்த்திக்.யாராவது கன்னத்துலையோ இல்ல தலையிலையோ அடிச்சா வலது கண் பார்வையும் போய்டும்னு சொல்லிருக்காங்க டாக்டர்.

ஒரு ஆசிரியர் கோவத்துல இவர்  தலையில அடிச்சுட  ஒரு மணி நேரத்துல வலது கண் பார்வையும் போயிருக்கு. பார்வை திரும்ப கிடைக்க முயர்சிகள் செஞ்சுருக்காங்க ஆனா பலன் இல்ல.

அப்பறம் ,சென்னைல பார்வையற்றோர் பள்ளியில சேர்ந்துருக்கார்.இசையை தேர்வு செஞ்சு பியானோ கலைஞர் ஆகிருக்கார்.1800 பேர் கலந்துகிட்ட போட்டியில முதலாவதா வந்துருக்கார்.

மதுரைல ஒரு மியூசிக் ஸ்டுடியோ அமைச்சு நிறையா இசை ஆல்பம் தயாரிச்சு வெளியிட்டு இருக்கார்.இவரோட திறமையை பாத்து சென்னைக்கு அழைச்சுகிட்டு வந்திருக்கார் தில்லை நாதன் .

அதுக்கு அப்பறம் முழுக்க முழுக்க மாற்று திறனாளிகளால் மாற்று திறனாளிகளை மையமா வச்சு எடுக்கப்பட்ட 'மா' திரைப்படத்திற்கு இசை அமைச்சுருக்கார் .

இதை கேள்விப்பட்டு 'கருட பார்வை '  இயக்குனர் விவேகாநாதன் ,தான் எடுக்கும் ஒரு திகில் படத்துக்கு இசை அமைக்க சொல்லிகேட்க 48 நாளுல பலரும் பாரட்டுறபடி  'ரீ ரெகார்டிங்' முடிச்சுருக்கார்.

சினிமா மூலம் தன்னுடைய இசை பலரை சென்றடையனும்ங்குறதுதான் இவரோட ஆசைனு சொல்றார்.

இவரை பாராட்டுவோம் .நீங்களும் வாழ்த்துக்களை சொல்ல - 9976916847

                                     --நன்றி வாரஇதழ் 

இந்த போஸ்ட்-ஐ ஆடியோவிலும் கேக்கலாம் .(I had an idea to create an audio blog separately. I must thank my sister-in-law who encouraged me and gave me an idea to post an audio file in my blog post itself)

3 கருத்துகள்:

  1. இயக்குனர் விவேகாநாதன் அவர்களுக்கும் நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. நல்ல செய்தியை பகிர்ந்த உங்களுக்கு பாராட்டுக்கள். உங்களின் ஆடியோ முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு