நமக்கு ஒரு dream job -னு இருக்கும் அப்படி ஒரு job -க்கு போகணும்னு நினச்சா அதுலாம் நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வராதுனு சொல்லி அவங்க இஷ்டப்படி வேலைக்கு போக வைக்குறாங்க.
சரி செய்ற வேலைய interest-ஆ வேலை செஞ்சா , சீக்கிரம் கல்யாணம் பண்ணு வயசாகுதுனு சொல்றாங்க. கல்யாணம் பண்ணினா சீக்கிரம் கொழந்தைய பெத்துக்கோங்க வயசாகுதுனு சொல்றாங்க கொழந்தைய பெத்ததுக்கு அப்பறம் வேலைக்கு போகலாம்னா சின்ன கொழந்த ஏங்கிடும் கொஞ்சநாள் ஆகட்டுமேனு சொல்றாங்க சரிதானு கொஞ்சநாள் போனா அடுத்த கொழந்த பொறந்துடுது.அப்பறம் அந்த கொழந்தைக்காக 3 ,4 வருஷம் போக்கிடுறோம்.சனி, 12 பிப்ரவரி, 2022
Home maker-job easy இல்லைங்க
வெள்ளி, 7 ஜனவரி, 2022
விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
அன்பான அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்,
நம்ம ஊர் விருதாச்சலத்துல இருக்குற பெரிய கோவில் என்று அழைக்கப்படுற 'விருத்தகிரீஸ்வரர்' ஆலயத்துடைய கும்பாபிஷேகம் வருகிற பிப்ரவரி மாசம் 6-ஆம் தேதி நடக்கவிருக்கு. இதுக்காக கோவிலை சுத்தப்படுத்திகிட்டு இருக்காங்க.கோவிலை பாக்கவே அவ்வளவு அழகா இருக்கு.
எல்லா கோபுரங்களுக்கும் புதுசா பெயிண்ட் நடிச்சிருக்காங்க. கோபுரத்துல ரொம்பவே அழகா எல்லா லைட்டும் எரியுது. [கோபுரம் என்பதை"கோ+புரம்' -னு பிரிக்கணும் . "கோ' என்றால் இறைவன். "புரம்' என்றால் "இருப்பிடம்'. இறைவனின் இருப்பிடமே கோபுரம். அதனால தான் எங்கிருந்து பார்த்தாலும் தெரியுற அளவுக்கு கோபுரத்தை உயரமாகக் கட்டுறாங்க . இதனால தான் "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்'னு சொல்லுற வழக்கம் வந்தது]
சிவன் சன்னதி,விருத்தாம்பிகை சன்னதியை சுத்தி அவ்வளவு அழகா சுத்தப்படுத்தி இருக்காங்க.என்னை பசை, விளக்கு தீபங்களுடைய கரி துகள்கள் எல்லாம் இல்லமா அவ்வளவு அழகா இருக்கு கோவிலை பாக்கவே. இப்படி தான் நம்ம ஊரு கோவில் எப்பவுமே இருக்கணும்னு நினச்சேன்.
இப்படி நம்ம கோவிலை சுத்தமாவும், அழகாவும் வச்சுக்குறது நம்முடைய கடமை. ஊரு உலகமே பாத்து ஆச்சர்யப்படுற நம்ம கோவிலை தூய்மையா வச்சுக்குறது நம்முடைய கடமை. எல்லா இடங்களையும் தீபத்தையும் கற்பூரத்தையும் ஏற்றாம அதற்கான ஒரு இடத்துல மட்டும் எல்லா விளக்குகளையும் ஏத்துறமாதிரி அமைக்கணும், ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் போடணும். அதை மக்களும் கேட்டு,ஏத்துக்கிட்டு நடந்துக்கணும். ஒரு பெரிய கோவிலை சுத்தப்படுத்துறதுங்குறது ரொம்ப பெரிய விஷயம். நம்மால செய்ய முடியல அட்லீஸ்ட் செஞ்சதையாவது பத்திரமா பாத்துப்போமே .
அனைவரும் கும்பாபிஷேகத்துக்கு வாங்க. இறைவனின் அருள் பெறுக
வெள்ளி, 10 டிசம்பர், 2021
அன்புள்ள திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு ரசிகையின் கடிதம்
அன்புள்ள திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு ரசிகையின் கடிதம்
மக்களை வழி நடத்துறவங்களைதான் தலைவர்னு கூப்பிடனும்.தலைவர் தலைவர்னு உங்கள ஏன் கூப்பிட்டோம்?கூப்பிடுறாங்க இன்னமும்.அரசியலுக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பாத்தோம்தான் ஆனா வரலை. அதுனால என்ன ? ஒரு தாய் தன் குழந்தைமேல வைக்குறது unconditional லவ்-னு சொல்லுவாங்க. அதாவது எந்த நிபந்தனையும் இல்லாத அன்பு.உங்க மேல எங்களுக்கு இருக்குற அன்பும் அப்படித்தான் .அது எப்பவுமே மாறாது அப்படியேதான் இருக்கும்.
' Life is very short ' . 100 வயசுவரைக்கும் நாம வாழ்ந்தாலும் உலகத்துடைய வயதை compare பண்ணி பாக்கும்போது ஒரு ஒரு மனிதருடைய வாழ்க்கையும் short தான். 40 / 50 வருடம் ஆரோக்கியமா இருப்போம் அப்பறம் நம்முடைய செல்களுக்கு வயதாகும் .வயதாக ஆக நம்முடைய உடம்புல ஏற்படுற மாற்றம் நமக்கு பெரிய தடையா இருக்கும். உங்களுக்கும் 70 வயசு ஆகிடுச்சு. இன்னும் எதுக்கு தயக்கம்? இன்னும் எதுக்கு யோசனை? இப்போவும் செய்யலைன்னா இனிமே எப்போ செய்யப்போறீங்க?
IF NOT NOW ,THEN WHEN ?
செவ்வாய், 19 அக்டோபர், 2021
மதுரை மீனாட்சி அம்மன் - என் அனுபவம்
2015 -ல கொடைக்கானல் போனோம் . on the way மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போகலாம்னு முடிவு பண்ணினோம்.ரொம்ப அழகான கோயில் அற்புதமான சிற்பங்கள் மண்டபங்கள் பார்க்க முடிஞ்சது . அங்க ஒரு tour guide இருந்தாரு அவருடைய உதவியோடு கோவிலை சுத்தி பாத்துகிட்டு இருந்தோம்.
கோயில ஒரு மரம் இருந்தது (பெயர் மறந்துட்டேன் மன்னிக்கணும்). எங்க tour guide அந்த மரத்தைப்பத்தியும் சொல்லிக்கிட்டே வந்தாரு. மத்த கோயில் மாதிரி இல்லாம இந்த மரத்தை Reverse -ல சுத்தணும்னு சொன்னார். அதாவது மத்த கோயில் மரங்களை வலமிருந்து இடமா சுத்தினா இந்த மரத்தை இடமிருந்து வலமா சுத்தணும்னு சொன்னார்.அறிவியல் ரீதியா பாத்தா அந்த இடத்துல ஈர்ப்பு விசை அப்படிதான் இருக்கு. குழந்தை வேண்டி பிராத்திக்குறவங்க,கல்யாணம் ஆகணும்னு பிராத்திக்குறவங்க அந்த மரத்துல தொட்டில், வளையல், மச்சள் நிற துணி, சிவப்பு நிற துணி, மஞ்சள் கயிறு இதுலாம் கட்டியிருந்தாங்க .
சரி நாமளும் ஒண்ணு கட்டுவோமேன்னு ஒரு தொட்டில் வாங்கி கட்டினோம் . அப்போ அந்த tour guide சொன்னாரு , என் மாமியார் ரெட்டை தொட்டில் காட்டினாங்க அதே மாதிரி எங்களுக்கு ரெட்டை பிள்ளை பிறந்ததுனு . எனக்கு எப்பவுமே ட்வின்ஸ் வேணும்னு ஒரு ஆசை இருந்தது. ஒரு ஆண் ஒரு பெண்ணுன்னு ஒரு சமயத்துல ரெண்டு குழந்தைகள் (அப்பறம் free-ஆ இருக்கலாம்னு ஒரு நப்பாசையும் கூட).இப்போத்தானே ஒரு தொட்டில் கட்டினோம் இப்போ சொல்றீங்களேனு நான் இன்னோர் தொட்டில் வாங்கிட்டு வந்து கணவரை வம்பு பண்ணி கட்ட வச்சேன். கொஞ்ச இடைவெளியில் ரெண்டு தொட்டில் கட்டினேன். ஆனா ட்வின்ஸ் வேணும்னு ஆசைப்பட்டு.
அப்பறம் அத அப்படியே மறந்துட்டேன்.2016-ல எனக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது.2017-ல ரெண்டாவது குழந்தை. ரெண்டு பேருக்கும் இடையில 10 மாசம் வித்தியாசம். ரொம்ப நாளுக்கு அப்பறம் தான் மதுரை கோயிலுக்கு போனதும் அங்க நான் இப்படி தொட்டில் கட்டினதும் நியாபகம் வந்தது எனக்கு. நான் கடவுளை நம்புறவ. அப்போ தான் என் சின்ன மூளைக்கு உரைத்தது இது கடவுள் அருள் தான்னு . நான் நடக்கும்னு நம்பிக்கையோட வேண்டினேன். ஆனா ஒரு சின்ன இடைவெளி விட்டு தொட்டில் கட்டினேன் அதே போல ஒரு சின்ன இடைவெளி விட்டு ரெண்டாவது குழந்தை .
அதை நான் உணர்ந்ததுல இருந்து , தெரிஞ்சவங்க தெறியாதவங்கனு யாரு குழந்தை வரம் கேட்டு மனசு கஷ்டப்பட்டாலும் ,கோயிலுக்கு போனாலும் , அவங்களுக்கு என்னுடைய அனுபவத்தை சொல்லி மதுரை மீனாட்சி அம்மனை வேண்ட சொல்றேன். கடவுளை நம்புற நான் இதைஅந்த மதுரை மீனாட்சி அம்மனின் அருள்னு சொல்லாம வேற என்ன சொல்ல .
(இது மதத்தை திணிக்கவோ அல்லது கடவுளை வணங்குங்கன்னு சொல்லவோ அல்லது இந்த கடவுளை வணங்குங்கன்னு சொல்லவோ நான் எழுதல. என்னுடைய அனுபவத்தை பகிர்ந்துக்குறேன்.)
PC : Wikipedia
வியாழன், 14 அக்டோபர், 2021
மாற்றத்தை விதைப்போம்.
சமீபத்துல என் கணவருடைய பாட்டி கீழவிழுந்து , அவங்களுக்கு கை முறிவு,இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுடுச்சு . இந்தியாவுல பகல்னா அமெரிக்காவுல தான் நைட் ஆச்சே. நடுராத்திரி போன் கால் வந்தது . அவங்கள முதல்ல எங்க சொந்த ஊரான விருதாச்சலத்துல இருந்து சென்னைக்கு கூப்பிட்டு வந்தாங்க .
அவங்க சென்னை வந்து சேருறதுக்குள்ள ,என் கணவர் எந்த ஹாஸ்பிடல்-ல சேர்க்க முடியும் எவ்வளவு செலவு ஆகும்னு விசாரிச்சுக்கிட்டு இருந்தார் போன்ல .
கிட்டத்தட்ட ரெண்டு மணிநேரத்துக்கும் மேல பல இடத்துல விசாரிச்சு ஹாஸ்பிடல் முடிவு பண்ணினாங்க. அதுக்கும் அவங்க சென்னை வந்து சேருறதுக்கும் சரியா இருந்தது. சென்னைல ஒரு நல்ல பெரிய ஹாஸ்பிடல் அது. எலும்பு முறிவுக்கான சிறப்பு மருத்துவமனை அது . அந்த ஹாஸ்பிடல்ல டாக்டர் பாட்டிய செக் பண்ணிட்டு ஆப்ரேஷன் பண்ணனும். கைல எலும்பு முறிவுக்கு பிளேட்டு வைக்கணும்,இடுப்பு எலும்பு முறிவுக்கு ராடு வைக்கணும்னு சொல்லிட்டார். அதுக்கு ஒரு 3 லட்சம் செலவாகும்னு சொல்லிட்டார்.சரினும் எங்க சைடுல இருந்து சொல்லியாச்சு.
ஒரு அரை மணிநேரத்துக்கு அப்பறம் ,எவ்வளவு ஆகும்னு இன்னும் நிறையா ஹாஸ்பிடல்ல, ஆன்லைன்ல X-Ray காட்டி விசாரிச்சப்போ ஒண்ணேமுக்கால்ல இருந்து ரெண்டு லச்சம் ஆகும்னு சொன்னாங்க. ஆனா பாட்டியை சேர்த்த ஹோச்பிடல்ல டாக்டர் 3 லட்சம்னு சொல்லிட்டார். இன்சூரன்ஸ் இல்ல பாட்டி ஹெல்த்க்கு . கைல அவ்வளவு காசு இல்ல என்ன பண்றதுனு தெரியல. வீட்ல யாராவது அமெரிக்காவுல இருக்காங்கனு தெறிஞ்சா பில் எவ்வளவு முடியுமோ அவ்வ்வளவு ஏத்துவாங்க. அதனாலயே வெளிநாட்டுல வேல செய்றாங்கன்னு சொல்லவேண்டாம்னு சொல்லிட்டோம்.
[அதென்னவோ தெரியல வெளிநாட்டுல வேல செஞ்சா அப்படியே ஊரையே வாங்குற அளவுக்கு காசு இருக்கும்னு நினச்சுக்குறாங்க!! நம்ம ஊரு மாதிரியே தான்,இங்க இருக்குற ஒரு ஒரு இந்தியர்களும் எவ்வளவு கடுமையா உழைக்குறாங்க. இவ்வளவு சம்பளம் தருவோம்னு சொல்லி அனுப்பிவைக்குறாங்க இங்க, ஆனா கிடைக்குறது என்னவோ சொர்ப்பமாத்தான் இருக்கு .காலைல ஆஃபீஸ் போனா நைட் தான் விடுறாங்க மாடு மாதிரி உழைக்குறாங்க . இந்த கொரோனா காலத்துல வீட்ல இருந்தே வேலை செய்யலாம்னு சொன்னாலும் ஆஃபீஸ்யே போய் தொலையலாம்னு அளவுக்கு, அதே அளவுக்கு சொல்லப் போனா அதை விட அதிக அளவுக்கு வேலை செய்யுறாங்க. வீடு வாங்கணும்,வீட்டு கடனை அடைக்கணும் , அப்பாவோட அம்மாவோட ஹாஸ்பிடல் செலவை பாக்கணும் , அக்கா தங்கச்சி தம்பியை படிக்க வைக்கணும் கல்யாணம் பண்ணித்தரனும் இப்படி எவ்வளவோ வேலைகளையும் பொறுப்புகளையும் வச்சுக்கிட்டு வேலைபாக்குறாங்க .அதுலாம் தெரியாது மத்தவங்களுக்கு . வெளிநாட்டுல வேலைசெய்றாங்கன்னு மட்டும் தான் தெரியும் . சரி அத விடுங்க ! ]
மறுபடியும் போய் கேளுங்கன்னு சொன்னதும்,அவங்களும் போயி கேட்டாங்க ஹாஸ்பிடல்ல , ரெண்டு லச்சம்னா அப்போ முடியுமான்னு கேக்குறாங்க. மூணு லச்சத்துல இருந்து ரெண்டு லச்சம் வந்துட்டாங்க. அடப்பாவிகளா அப்போ ஒரு லச்சம்ங்குறது எவ்வளவு காசு தெரியுமா ? எப்படி ஒரு நோயாளிக்கிட்ட இப்படி அதிகமா வசூலிக்க மனசு வருது. அப்போ,இதுதான்னு ஒரு fixed amount இல்லயா . சொல்லி பாப்போம்னு சொல்றீங்களா.
மருத்துவம்ங்குறது ஒரு சேவைன்னு மாறி பணம் இருந்தா நல்ல மருத்துவம் தரமான மருத்துவம்ங்குற காலத்துல வாழுறோம் நாம். புது புதுசா நோய் வருது , நம்ம நாட்டுல இப்போ இந்த கொரானாவுக்கு தடுப்பூசி கூட காசு குடுத்துதானே போடுறோம். தைரியமா நம்பிக்கையா அந்த தடுப்பூசியை போட்டுக்கணும்னா தனியார் மருத்துவமனைல போட்டுக்கிட்டாதான் safe -னு தானே போட்டுக்கிட்டோம். நம்ம நிலைமை இப்படி தானே இருக்கு . ஆமா நாடே தனியார் வசம் தான் போகப்போகுது .அத பத்தி இப்போ என்ன பேசிக்கிட்டு.நம்ம விஷயத்துக்கு வருவோம்.
அப்போ காசுக்குத்தான் மருத்துவம் ,சேவைக்கு மருத்துவம் இல்லைனு மருத்துவர்களுக்கு எண்ணம் எப்படி வருது? எவ்வளவோ காசு குடுத்து , செலவு பண்ணி மருத்துவம் படிக்குறதுனாலதான் அவங்களுக்கு இந்த எண்ணம் வருது . போட்ட காச எடுக்கணும் , சம்பாதிக்கணும்னு மட்டும்தான் நினைக்கிறாங்க. சம்பாதிக்க எத்தனையோ படிப்புகள் வேலைகள் இருக்கு .கடவுளுக்கு சமமா மதிக்கிற மருத்துவம் ஏன்? அப்போ தப்பு எங்க இருந்து ஆரம்பிக்குது ?சரியான படிப்பு நாம குடுக்கல .தரமான படிப்பு வேற சரியான படிப்பு வேற.Pre -KG -ல இருந்தே ஆயிரக்கணக்குல லச்சக்கணக்குல செலவு செஞ்சு படிக்குறதுனால அவங்களுக்கு படிப்பு காசா மட்டும் தான் தெரியுது. காசு சம்பாதிக்க்கணும்னு மட்டும் தான் எண்ணம் வருது . தரமான படிப்பை இலவசமா இல்ல ரொம்ப குறைஞ்ச கட்டணத்துக்கு பிள்ளைகளுக்கு கொடுத்தா அவர்களுகையை எண்ணம்,வளக்கப்படுற விதம் ,ஒரு விஷயம் மேல அவங்க பாக்குற பார்வை வேற மாதிரி இருக்கும். பிள்ளைங்களுக்கு படிப்பை நல்ல விதத்துல நல்ல முறையில குடுத்தோம்னா வாழ்க்கை நல்லா இருக்கும் வாழ்க்கை நல்லா இருந்தா நாடு நல்லா இருக்கும். காலம் மாறும் கண்டிப்பா . அந்த மாறின காலத்துல நாம இருக்க மாட்டோம் ஆனா நம் தலைமுறை இருக்கும். மாற்றத்தை விதைப்போம்.
புதன், 29 செப்டம்பர், 2021
புதிய பயணம்
செவ்வாய், 28 செப்டம்பர், 2021
எல்லோருக்குமே இப்படி ஒரு Refreshment தேவை
சமீபத்தில மினசோடா போயிருந்தோம். போகும்போதே என்னோட தோழி சுஹாசினி பாண்டியன் கரெக்ட்-ஆ மெசேஜ் பண்ணின்னா .ஊர்ப்பக்கம் வந்த கண்டிப்பா வா-னு. கூப்பிடலைனாலே அங்க போயி நிப்போம்.கூப்பிட்ட போகாம இருப்போமா. மினசோடா போய் இறங்கிய அடுத்த நாள் அவ வீட்டுக்குத்தான் போனோம்.
அழகான அமைதியான வீடு அறிவான ரெண்டு பிள்ளைங்கள்னு செட்டில் ஆகி இருந்த அவளை பாக்க ரொம்பவே சந்தோஷமா இருந்தது. பலலலலலல (எவ்வளவு காஞ்சி போயி இருந்தா இத்தன 'ல' போடுவேன்னு பாருங்க) வருஷத்துக்கு அப்பறம் என்னுடைய friend-அப்படினு ஒருத்தரை மீட் பண்றேன் நான். நிறையா ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க .ஸ்கூல் ஃப்ரண்ட்ஸ் ,B.sc ஃப்ரண்ட்ஸ், M .sc ஃப்ரண்ட்ஸ் , ஹாஸ்டல் ஃப்ரண்ட்ஸ்(படிச்சது எல்லாம் வேற வேற ஊரு, வேற வேற இடம்) அப்பறம் வேலைக்கு போன போது அங்க ஃப்ரண்ட்ஸ் இப்படி நிறையா( கம்மியா ) ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க. அதுல சுஹாசினியும் நானும் ஒரே ஆஃபீஸ்ல டெவலப்பர்-ஆ வேல பாத்தோம்.
நான் ஆரம்பத்துல இருந்தே டெவெலப்பிங் சைடு தான் போகணும்னு உறுதியா இருந்தேன். அதுக்கு காரணம் என்னுடைய குருக்கள்.காலேஜ் படிச்சபோது எனக்கு கம்ப்யூட்டர் சென்டர்ல டீச்சர் -ஆ இருந்த சரவணன் (இந்த பையனாதான் ஃபியூச்சர்ல கல்யாணம் பண்ணுவேன்னு சத்தியமா கனவுல கூட நினைச்சி பாத்ததில்ல நான்). அடுத்து M .sc படிச்சப்போ ,ஜாவா தாத்தானு ஒருத்தர்.அவரு பேர் கூட தெரியாது ஆனா எல்லாரும் அவரை ஜாவா தாத்தான்னு தான் கூப்பிடுவோம். அப்படி ஒரு முதுமை ஆனா அவர் கோடிங் டெவெலப் பண்ற அந்த அழகு திறமை, கை நடுங்குற தல்லாத வயசுலயும் கோடிங் மேல அவருக்கு இருந்த அந்த ஆர்வம் . இவங்கதான் என்னுடைய இன்ஸ்பிரேஷன் .இவங்கள பாத்துதான் டெவெலபிங்-ல ஒரு ஆர்வம் வந்ததே.
அப்டி டெவெலப்பிங் சைடு வேலைபாத்தப்போ தான் சுஹாசினி எனக்கு பழக்கம்.சுஹாஸ் பேரை எப்பவுமே ofc boss -னு தான் save பண்ணி வச்சுருப்பேன்.அப்படி ஒரு BOSS அவங்க.கிட்டத்தட்ட ஒரு 10 , 11 வருஷத்துக்கு அப்பறம் சுஹாசினியை இப்போதான் பாக்குறேன்.
அதே நக்கல் ,நையாண்டித்தனம், அதே சிரிச்ச முகம், எதையும் பெருசா சீரியஸ்-ஆ எடுத்துக்காத, அதிர்ந்து பேசாத குணம்,பொறுமை முக்கியமா குழந்தைங்ககிட்ட ,அதே சுஹாஸ் தான். ஒரு மாற்றமும் இல்ல . (எனக்கு பொறுமை கொஞ்சம் கம்மிதான் அதுவும் நமக்குன்னு பிள்ளைங்கள் ஆனதுக்கு அப்பறம் பொறுமை ரொம்ப கம்மியாகிடுச்சு). எனக்கு ஆச்சர்யமா இருந்தது எப்படி பிள்ளைங்ககிட்ட கோவப்படாம இருக்கானு . பையன் பேரு கிருஷ்ணா ,பொண்ணு பேர் வைஷு .அவ்வளவு பொறுப்பு ,அறிவு .அவ்வளவு நல்லா வளத்துருக்கா. கடவுள்கள்ல பேபி கிருஷ்ணானா அவளுக்கு ரொம்ப பிடிக்கும் .அதனாலதான் பையனுக்கு க்ரிஷ்ணான்னு பேர் வச்சுருக்கா (அப்டித்தான் இருக்கும்).
சுஹாஸ் என்ன பத்தி ரொம்ப பெருமையா பேசிக்கிட்டே இருந்தா. என் அண்ணா அண்ணி கணவன்னு எல்லார் கிட்டையும் என்னப்பத்தி பெருமையா சொல்லிகிட்டே இருந்தா (காதுல தேனா பாஞ்சதுனு சொல்லலாம். ஒரு கட்டத்துல குடுத்த காசாவிட அதிகமா சொல்லிறியேமா-னு கூட நினைக்க தோணிச்சு). இத்தனை வருஷத்துல வாழ்க்கைல எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் , கஷ்டங்கள் சந்தோஷங்கள்னு லைஃப் வேற மாதிரி ஆகிடுச்சு. இல்ல இல்ல நான் வேற மாதிரி ஆகிட்டேன்.அதான் கரெக்ட் .
நம்மள பத்தி நமக்கு தெரியும் அடுத்து நம்ம அப்பா அம்மாவுக்கு ஃப்ரண்ட்ஸ்க்கு தான் நல்லா தெரியும். கல்யாணம் குழந்தைகள்னு என்ன நானே சுறுக்கிக்கிட்ட காலம்தான் இது.என்ன செஞ்சாலும் சப்போர்டிவ் -ஆ இருக்குற கணவன் .மேல எதாவது படி, வேலைக்கு போ , அடுப்படியில மட்டுமே இருக்காதனு சொல்ற கணவன்தான் , ஆனா பெரும்பாலான பெண்கள் மாதிரியே ஒரு வட்டம் போட்டுக்கிட்டு அந்த வட்டத்துக்குள்ளையே இருக்க ஆசைப்பட்டேன் . அதுக்கு இன்னோர் பேர் சோம்பேறிதனம்னு கூட சொல்லிக்கலாம் . அடுத்தடுத்த பிள்ளைங்கள் , அது இன்னும் வசதியா போச்சு எனக்கு. யோசிச்சு பாத்தா 30 வருஷ பழக்கத்தை 5/6 வருஷம் மாத்திடுது இல்ல . இதுக்கு நடுவுல anxiety , சாவு,பயம்னு மத்த விஷயங்கள் வேற.
சுஹாஸ் என்ன பத்தி சொல்ல சொல்ல எனக்கே என்னப்பத்தி புதுசா கேட்ட மாதிரி இருந்தது. இப்படித்தான் கவுண்டர் குடுப்பா, இப்படித்தான் ரியாக்ட் பண்ணுவா .இப்படித்தான் code பண்ணுவா,இவ்வளவு சீக்கிரம் பண்ணுவானு சொன்னபோதுலாம் , இப்படியா நா இருந்தேன்.இப்படியெல்லாமா செஞ்சேன்னு தோணிச்சு. (நம்மள யாரவது பாராட்டிட்டா அவ்ளோ சந்தோஷமா இருக்கு இல்ல ). என்ன நானே புதுசா பாத்தமாதிரி இருந்தது. (Code பண்ணுவேன்னு எனக்கு தெரியும் ஆனா நமக்குள்ள இவ்வளவு திறமைகள் ஒளிஞ்சு கிடந்ததா .நிறையா மறந்துபோச்சு )
அனேக பொண்ணுங்க மாதிரிதான் நானும் . ஒரு கட்டத்துல குடும்பம் பிள்ளைங்கள்னு மத்த எல்லா விஷயங்களையும்(நண்பர்களையும்) பின்னுக்கு தள்ளிட்டு போயிடுவோம்.அப்டித்தான் நானும் இருந்தேன்.
இந்த 36 வயதினிலே வசந்தி மாதிரியே. வயசாகிடுச்சு , பேமிலி ஆகிடுச்சு அவ்ளோதான்னு இருந்தேன் . எப்படி அந்த அந்த படத்துல வசந்திக்கு -க்கு சூசன் வந்து ,வசந்தி யாருனு வசந்ததிக்கே புரியவச்ச மாதிரி எனக்கு சுஹாஸ் , என்ன பத்தி சொல்லி சொல்லி நான் இப்படியா இருந்தேன் .ஏன் இப்போ இப்படி இருக்கேன்னு என்க்கு என்ன புரிய வச்சுருக்கா.
ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் இன்னைக்கு நான் மறுபடியும் ஒரு புது டெவெலப்பிங் language கத்துக்கலாம்னு ஆரம்பிச்சுருக்கேன்னா அது சுஹஸ்னாலதான். code படிக்க படிக்க எவ்வளவு ஆர்வமா இருக்கு?.எப்பவுமே பிடிச்ச விஷயத்தை செஞ்சோம்னா அதுக்கான மதிப்பே தனிதான். வேண்டாம் போதும்னு ஒதுக்கி வச்சத அட்லீஸ்ட் படிச்சு தெரிஞ்சுப்போம்னு மறுபடிச்சும் ஆரம்பிச்சுருக்கேன். சோம்பேறித்தனமா இருந்த நிறைய விஷயங்கள் இன்னைக்கு செஞ்சுருக்கேன் .இதோ இந்த blog எழுதிருக்கேன். என் blog கொஞ்சம் டெவெலப் பண்ணிருக்கேன். இது எல்லாமே சுஹாஸ் உன்னாலதான்.
இதுவும் ஓரு நல்லதுக்குதான் . கடவுள் சுஹாஸ் வடிவத்துல வந்து எனக்கு ஹெல்ப் பண்ணிருக்காங்கனு தான் நினைக்குறேன்.
சுஹாஸுக்கு நன்றி.
