பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 19 அக்டோபர், 2021

மதுரை மீனாட்சி அம்மன் - என் அனுபவம்

2015 -ல கொடைக்கானல் போனோம் . on the way மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போகலாம்னு முடிவு பண்ணினோம்.ரொம்ப அழகான கோயில் அற்புதமான சிற்பங்கள் மண்டபங்கள் பார்க்க முடிஞ்சது . அங்க ஒரு tour guide இருந்தாரு அவருடைய உதவியோடு கோவிலை சுத்தி பாத்துகிட்டு இருந்தோம்.


கோயில ஒரு மரம் இருந்தது (பெயர் மறந்துட்டேன் மன்னிக்கணும்). எங்க tour guide அந்த மரத்தைப்பத்தியும் சொல்லிக்கிட்டே வந்தாரு. மத்த கோயில் மாதிரி இல்லாம இந்த மரத்தை Reverse -ல சுத்தணும்னு சொன்னார். அதாவது மத்த கோயில்  மரங்களை வலமிருந்து இடமா சுத்தினா இந்த மரத்தை இடமிருந்து வலமா சுத்தணும்னு சொன்னார்.அறிவியல் ரீதியா பாத்தா அந்த இடத்துல ஈர்ப்பு விசை அப்படிதான் இருக்கு. குழந்தை வேண்டி பிராத்திக்குறவங்க,கல்யாணம் ஆகணும்னு பிராத்திக்குறவங்க  அந்த மரத்துல தொட்டில், வளையல், மச்சள் நிற துணி, சிவப்பு நிற துணி, மஞ்சள் கயிறு இதுலாம் கட்டியிருந்தாங்க .

சரி நாமளும் ஒண்ணு கட்டுவோமேன்னு ஒரு தொட்டில் வாங்கி கட்டினோம் . அப்போ அந்த tour guide சொன்னாரு , என் மாமியார் ரெட்டை தொட்டில் காட்டினாங்க அதே மாதிரி எங்களுக்கு ரெட்டை பிள்ளை பிறந்ததுனு . எனக்கு எப்பவுமே ட்வின்ஸ் வேணும்னு ஒரு ஆசை இருந்தது. ஒரு ஆண்  ஒரு பெண்ணுன்னு ஒரு சமயத்துல ரெண்டு குழந்தைகள் (அப்பறம் free-ஆ இருக்கலாம்னு ஒரு நப்பாசையும் கூட).இப்போத்தானே ஒரு தொட்டில் கட்டினோம் இப்போ சொல்றீங்களேனு நான் இன்னோர் தொட்டில் வாங்கிட்டு வந்து கணவரை வம்பு பண்ணி  கட்ட வச்சேன். கொஞ்ச இடைவெளியில் ரெண்டு தொட்டில் கட்டினேன். ஆனா ட்வின்ஸ் வேணும்னு ஆசைப்பட்டு.

அப்பறம் அத அப்படியே மறந்துட்டேன்.2016-ல எனக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது.2017-ல ரெண்டாவது குழந்தை. ரெண்டு பேருக்கும் இடையில 10 மாசம் வித்தியாசம். ரொம்ப நாளுக்கு அப்பறம் தான் மதுரை கோயிலுக்கு போனதும் அங்க  நான் இப்படி தொட்டில் கட்டினதும் நியாபகம் வந்தது எனக்கு. நான் கடவுளை நம்புறவ. அப்போ தான் என் சின்ன மூளைக்கு உரைத்தது இது கடவுள் அருள் தான்னு . நான் நடக்கும்னு  நம்பிக்கையோட வேண்டினேன். ஆனா ஒரு சின்ன இடைவெளி விட்டு தொட்டில் கட்டினேன் அதே போல ஒரு சின்ன இடைவெளி விட்டு ரெண்டாவது குழந்தை . 

அதை நான் உணர்ந்ததுல இருந்து , தெரிஞ்சவங்க தெறியாதவங்கனு யாரு குழந்தை வரம் கேட்டு மனசு கஷ்டப்பட்டாலும் ,கோயிலுக்கு போனாலும் ,  அவங்களுக்கு என்னுடைய அனுபவத்தை சொல்லி மதுரை மீனாட்சி அம்மனை வேண்ட சொல்றேன். கடவுளை நம்புற நான் இதைஅந்த மதுரை மீனாட்சி அம்மனின்  அருள்னு சொல்லாம வேற என்ன சொல்ல . 


(இது மதத்தை திணிக்கவோ அல்லது  கடவுளை வணங்குங்கன்னு சொல்லவோ அல்லது இந்த கடவுளை வணங்குங்கன்னு சொல்லவோ நான் எழுதல. என்னுடைய அனுபவத்தை பகிர்ந்துக்குறேன்.) 


PC : Wikipedia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக