பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 28 டிசம்பர், 2013

இதற்கு பெயர் தான் காதல் ...

ஆஞ்சலோ  மெரண்டினோ இவர் நியூயார்க்ல இருக்குற ஒரு போட்டோகிராஃபர் இவர் ஜெனிபரை காதலிச்சு கல்யாணம் பண்ணினார்.அவரோட காதல் வாழ்க்கையை பத்தி அவர் சொல்றப்போ "அது ஒரு அழகான காதல் ,ஜெனிபரை முதன்முதல்லா பாத்த அந்த அடுத்த நொடி தான் என்னோட வாழ்கையின் அற்புத நொடி .அப்போவே முடிவு பண்ணிட்டேன் ஜெனிபர் தான் என் உலகம்னு ,நான் ஜெனிபர் கிட்ட என் காதலை சொன்னப்போ ஜெனிபர் மனசுலையும் அதே எண்ணம் இருக்க எங்க கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது".


இதுல என்ன பெரிய ஆச்சர்யம்னு கேக்குறீங்களா?ஜெனிபர் -ஆஞ்சலோ திருமணம் முடிஞ்ச அஞ்சாவது மாசத்துலயே ஜெனிபர்க்கு மார்பகப்புற்றுநோய் இருக்குறது தெரியவந்துருக்கு.

சும்மா சின்னதா உடம்பு முடியலைன்னு சொன்னாலே ஏதோ நோய்வாய் பட்ட பொண்ணை தனக்கு கல்யாணம் பண்ணிவசுட்டாங்க போலன்னு நினைக்குற சில ஆண்களுக்கு மத்தியில ஆஞ்சலோ தன் மனைவியை அப்போதான் இன்னும் அதிகமா நேசிக்க ஆரம்பிச்சுருக்கார்.


"அவளோட வலியும் வேதனையும் வேணும்னா என்னால பகிர்ந்துக்க முடியாம இருக்கலாம் ஆனா அந்த சமயத்துல ஜெனிபர் உடனே இருந்தேன் ,வலியால அவ துடிக்கும் போது (கேன்சர் சாதாரணமானது இல்ல அதோட வலி ரொம்ப கொடுமையானது.அதுக்கு சிகிச்சை எடுத்துகிட்டாகூட கீமோதெரபி நாம நினைக்குறமாதிரி சுலபமானது இல்ல , அதோட வலியும் வேதனையும் அதை அனுபவிக்குறவங்களுக்கு தான் தெரியும்.) என்னோட கையை இருக்கமா பிடிச்சுக்குவா..'என்னோட கண்ணை உத்துப்பார் ,அது ஒண்ணுதான் என்னோட வலியை பொறுத்துக்க ஒரே வழினு அவ சொல்லும்போது எல்லாம் எங்களுடைய அன்பின் அளவு அதிகமாகும்,அந்த நாட்கள்ல தான் நான் ஜெனிபர்கிட்ட இருந்து எப்படி காதலிக்குறது,மத்தவங்க கஷ்டத்தை கேக்குறது,எனக்குள்ள இருந்த தன்னம்பிக்கையை உணரதுன்னு என்ன நானே அடையாளம் கண்டேன் " னு சொல்றார் ஆஞ்சலோ .


நாலு வருஷம் சிகிச்சைக்கு அப்பறம் சிகிச்சை முடிஞ்ச ஒரு வருஷத்துக்குள்ல ஜெனிபர் இருந்துட்டாங்க.
தன்னுடைய மனைவி அனுபவித்த கஷ்டத்தை பக்கத்துல இருந்து பாத்ததால 
மார்பகப் புற்றுநோயாள பாதிக்கப்பட்டவங்களுக்கு தன்னுடைய மனைவி பெயருலையே ஒரு அமைப்பை ஏற்படுத்தி தான் எடுத்த புகைப்படத்தை கண்காட்சிகளாக வச்சு அதுல கிடைக்குற வருமானத்தை இந்த நோயாள பாதிக்கப்பட்டவங்களுக்கு தந்துகிட்டு இருக்கார்.


 இதுக்காக 'The Battle We Didn't Choose' -னு ஒரு இணைய தளத்தை துவங்கி அதுமூலமா இந்த சேவையை செஞ்சுக்கிட்டு இருக்கார் ஆஞ்சலோ .

இவரை பத்தி மேலும் படிக்க கூகிள்ல 'Angelo Merendino' னு குடுத்து search பண்ணுங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக