பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 30 டிசம்பர், 2013

மார்பக புற்றுநோய்


ஒவ்வொரு மார்பகமும் லோப்ஸ் (lobes) எனப்படும் 6 முதல் 9 அடுக்கடுக்கான மடிப்பு சதைகளாலானது. ஒவ்வொரு சதையும் லோப்யூல்ஸ் (lobules) எனப்படும் பல சிறு இதழ்களைக் கொண்டு பாலைச் சுரக்கும் சில டஜன் குமிழ்களாக முடியும். இந்த  மடிப்புத்தொங்கு சதைகள், சதைகள், சிறு இதழ்கள் முனைப் பகுதி குமிழ்கள் அனைத்தையும் மெல்லிய இழை நாளங்கள் ஒன்று சேர்க்குது . இந்த இழை நாளங்கள் மார்பகத்தின் நடுவிலுள்ள ஆரியோலா (areole) எனப்படும் கரும் வட்டத்தின் நடுவிலுள்ள முலைக்காம்பில் ஒன்று சேருது . சிறு இதழ்களுக்கும் நாளங்களுக்கும் இடையேயுள்ள இடைப்பகுதியைக் கொழுப்புப் பொருட்கள் நிறைக்கின்றன. மார்ப்கத்தில் சதைப்பற்று ஏதும் இருக்காது. ஆனால் மார்ப்கத்தின் அடிப்பகுதியில் சதைப்பற்று இருந்து விலா எலும்புகளை மறைக்கின்றன.

ஒவ்வொரு மார்பகமும் இரத்த நாளங்களையும் லிம்ப் (lymph) எனப்படும் வர்ணமற்ற நிணநீர் திரவத்தை எடுத்துச் செல்லும் நாளங்களையும் கொண்டுள்ளது. இந்த லிம்ப் நாளங்கள் அவரை விதை வடிவிலுள்ள லிம்ப் நோட்ஸ் (Nodes )எனப்படும் முடிச்சுகளில் செல்லுகின்றன. இத்தகைய லிம்ப் நோட்ஸ்கள் கூட்டமாக அக்குகளின் மேழேயும் தோற்பட்டை எலும்புகளின் மேலும் மார்ப்கங்களிலும் உள்ளன. இத்தகைய லிம்ப் நோட்ஸ் உடலின் மற்ற பல பாகங்களிலும் உள்ளன.


மார்பக புற்று நோய் அப்படீனா என்னனு முதல்ல தெரிஞ்சிப்போம்:

மார்பகத்தில் உள்ள சில செல்கள் அளவுக்கதிகமாக வளர்வது . புற்று நோய் செல்கள் மற்ற செல்களைக் காட்டிலும் பல வகைகளில் வேறுபட்டிருக்கும். அவை வேகமாகப் பிரிந்து வளர்ந்து சுற்றிலுமுள்ள திசுக்களை ஆக்கிரமிக்கும்

30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் தவறாமல் செய்ய வேண்டும். குறிப்பாக மாதவிலக்கு நிற்கும் நாட்களில் செய்வது சிறப்பானது. மார்பகப் புற்றுநோயில் வலி பெரும்பாலும் தோன்றுவதில்லை.
இதனால் வலியில்லை என்று அலட்சியம் செய்யக்கூடாது. பெரும்பாலும் வலியில்லாமல் காணப்படும் கட்டிகள் தான் இதன் அறிகுறியாக உள்ளது. மற்ற அறிகுறிகள் ,

1. மார்பகங்கள் அல்லது அக்குளில் புதிய அல்லது வழக்கத்துக்கு மாறான கட்டி, அல்லது தடித்து இருத்தல்
2. மார்பகத்தின் அளவு மற்றும் வடிவத்தில் மாற்றம்
3. மார்பக தோலில் சிவப்பு தடுப்புகள் போல தொரிவது
4. மார்பு காம்புகளில் இருந்து தானாகவே ரத்தம் வடிதல்
5. மார்பு காம்புகள் உள்ளிழுத்துக் கொள்வது
6. மார்பகங்களில் வலி இது
போன்ற சந்தேகங்கள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது.
மார்பகப் புற்றுநோய் வரக் காரணங்கள் :

 எச்.ஈ.ஆர்.2 என்ற ஜீனும் இதற்கு ஒரு காரணமாகிறது.
தாய்மை அடையாத பெண்கள், பரம்பரைக் காரணங்கள், சிறு வயதில் பூப்பு அடைவது மற்றும் நீண்ட நாட்கள் கழித்து மெனோபாஸ் அடைவது, அதிக உடல் எடை, மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் ஆகியவை மார்பகப் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணங்களாகும். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகரிக்கும் போதும் கேன்சர் வளர்ச்சி அதிகரிக்கிறது.

மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க என்ன சாப்பிடலாம்?

ஈஸ்ட்ரோஜென் சுரப்பை கட்டுப்படுத்துவதன் மூலம் மார்பகப் புற்றுநோய்க்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம்.
பழங்கள், காய்கறிகள், புரோட்டீன் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அசைவத்தில் ஆட்டுக்கறி, மீன், மாட்டுக்கறி மற்றும் பன்றிக் கறி ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும். இதே போல் பால் மற்றும் பால் பொருட்கள், நெய், வெண்ணெய், டீ, காபி, கொட்டை வகைகளான பாதாம், முந்திரி, பிஸ்தா தவிர்க்கவும். பழ வகையில் பப்பாளி தவிர்க்கவும். காய்களில் உருளைக்கிழங்கு, பீன்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகிவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும்.

முட்டைக்கோஸ், கேரட், பூசணி, சர்க்கரைப் பூசணி, காளான், பூண்டு, மிளகு, பாலக்கீரை ஆகியவற்றை அதிகளவில் சேர்த்துக் கொள்ளவும். ஆப்பிள், செர்ரி, மாதுளை, திராட்சை மற்றும் தர்பூசணிப் பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம். பருப்பு வகைகளில் சோயாபீன்ஸ், கிட்னி பீன்ஸ், கருப்பு பீன்ஸ் சேர்த்துக் கொள்ளவும். அசைவ வகையில் கொழுப்பு இல்லாத எலும்பு உள்ள சிக்கன் மற்றும் முட்டை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
தடுக்கும் வழிமுறைகள்:

குழந்தை பிறந்தவுடன் பெண்கள் கண்டிப்பாக ஆறு மாதங்களாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர வேண்டும்.

மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் மார்பக வலியைக் குறைக்க சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம்.

மார்பக வலியைக் குறைக்க உளுந்தை அரைத்து பற்றுப் போட்டு அதன் மீது வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.

வைட்டமின் ஏ சத்துள்ள கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அகத் திக் கீரை மற்றும் முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் வாய்ப்புகளை குறைக்க முடியும்.

இரவு நேரத்தில் பப்பாளிப் பழம் ஒரு துண்டு சாப்பிடுவதன் மூலம் மாதவிலக்கு பிரச்னைகள் வருவதைத் தடுக்கலாம். ரத்தம் சுத்தம் அடையும். புற்றுநோயையும் தவிர்க்கலாம்.

அதிகாலை வெறும் வயிற்றில் சின்ன வெங்காயத்தை பச்சை யாக சாப்பிடுவது நல்லது.

கொதிக்கும் பாலில் பூண்டைப் போட்டு வெந்த பின்னர் அதனை குழைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும், புற்றுநோய்க்கான வாய்ப்பும் குறையும்.

                                             Courtesy :Internet 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக