பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

ஆசிரியர் வேலையில் ஆர்வம் இருக்கா உங்களுக்கு?கிராமங்கள்ல இருக்குற மாணவர்களுக்கு கல்வி கத்துக்குடுக்கனும்னு விருப்பம் இருக்கா?அப்போ உங்களுக்காகவே சென்னையை சேர்ந்த டீச்சர்ஸ் லேப் அமைப்பு,'டீச்சிங் பெல்லொஷிப்' அப்படீங்குற பயிற்சி திட்டத்தை நடத்துறாங்களாம்.

இந்த திட்டத்தின் கீழ 30 பேரை செலக்ட் பண்ணி அவங்களுக்கு பயிற்சி குடுத்து அவங்க நடத்துற ஸ்கூல்லையே ஆசிரியரா நியமிச்சுக்கிறாங்கலாம்.இந்த பெல்லொஷிப்க்காக தேர்ந்தெடுக்கபட்றவங்க ,அதற்கான பயிற்சிக்கு அப்பறம் ஸ்ரீராம் அறக்கட்டளையால சென்னை மற்றும் ஆந்த்ரா மாநிலத்துல நடத்தப்படுற ஸ்கூலில் ஆசிரியரா நியமனப்படுதப்படுறாங்கலாம்.

இதுக்கு என்ன தகுதிகள் வேணும்னு கேக்குறீங்களா?ஏதேனும் ஒரு துறையில பட்டம் பெற்றிருக்கணுமாம்,35 வயசுக்குள்ள இருக்கணுமாம்.குழந்தைங்களுக்கு எப்படி கல்வி கத்துக்குடுக்கணும்,அவங்களோட எப்படி பழகணும்னு எல்லாம் சொல்லிதருவாங்களாம்.

ஆரம்ப பயிற்சி காலத்துல பயிற்சியாளருக்கு மாசத்துக்கு 3 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை உதவி தொகை குடுக்குறாங்களாம்.ஆசிரியரா அவங்களை வேலைல செத்ததுக்கு அப்பறம் தகுதி,மற்றும் பணி முரக்கேத மாதிரி மாச மாசம் சம்பளம் குடுப்பாங்களாம்.

விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமா மட்டும் தான் அனுப்ப முடியுமாம்  .விண்ணப்பம் அனுப்ப கடைசி தேதி : 01/02/2013.
போன் : 04424527644
வெப்சைட் : www.theteacherslab.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக