பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 12 டிசம்பர், 2012

இதுலாம் வேண்டாமே .................


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரின் பிறந்தநாள் இன்னைக்கு.ரஜினி சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கோடி கணக்கான ரசிகர்கள் ஒரு திருவிழா மாதிரி இவரது பிறந்தநாளை கொண்டாடுறாங்க.
நமக்காக உயிரையே விட தயாரா இருக்குற ஒருத்தங்க இருந்தாலே அது பெரிய விஷயம்.ஆனா ரஜினி சாருக்கு ஆயிரம்,லட்சம்,கோடி கணக்கான பேர்
இருக்காங்க அப்படி.இந்த மதிப்பும், மரியாதையும்,அன்பும் எல்லாருக்கும் கிடச்சுடாது.

ரஜினி சார் ஒரு பெரிய நடிகர் அப்படிங்குற அந்தஸ்தை விட அவர் ஒரு அருமையான மனிதர்.அதனாலையே அவரை பலருக்கும் பிடிக்கும்.எனக்கும் தான்.நானும் ரஜினி சாரின் 'டை ஹார்ட் பான்' தான்.நான் மட்டும் இல்ல என் அண்ணன் என் மாமா எல்லாரும் தான்.என் அண்ணன் என் மாமா எல்லாம் ரஜினி சாரின் படத்தை முதல்நாள் முதல் ஷோ- வே பாக்கணும்னு பாக்குறவங்க தான்.நானும் விசில் அடிச்சு கைத்தட்டி ரசிக்குற ஆள் தான்.

ஆனா இந்த பால் அபிஷேகம்,அலகு குத்துறது ,வேல் குத்துறது ,தேர் இழுக்குறது இதுலாம் தேவையா?.. என்ன கொடும சார் இது?!!!!கொஞ்சம் யோசிச்சு பாப்போமே நம்மல்ல எத்தன பேர் நம்ம அம்மா, அப்பா, கூடபிறந்தவங்க பிறந்த நாளை ரொம்ப பிரமாதமா கொண்டாடுறோம்?முதல்ல எத்தன பேருக்கு தன் அம்மா அப்பா பிறந்தநாள் தெரியும்?!!!! இல்ல நியாபகம் இருக்கும்?

அவரே நிச்சயம் இதை எல்லாம் விரும்பமாட்டாறு அதுதான் உண்மை.நாம ஒருதங்கமேல வச்சுருக்குற அன்பை இப்படி எல்லாம் காட்டணுமா?

எத்தனைபேர் தன குடும்பத்துக்காக இப்படி செஞ்சு இருப்பாங்க?தன் குடும்பத்துக்காக இப்படி செலவு செஞ்சு இருப்பாங்க.

அட..கேக் வெட்றோம் ,நம்ம அன்பை காட்ட சில நல்ல விஷயங்களை செய்றோம் சரி, எதுக்குங்க நம்மள வருத்திக்கணும்?அத பாக்குற நம்ம குடும்பம் கஷ்டப்படுங்குறதை நினச்சு பாக்குறோமா?

அட ..இப்படி செய்யறதுனால அவர் மட்டும் இத பாத்து சந்தோஷமா இருப்பாரா?அன்ப காட்டுறோம்குற பேர்ல அவர் பிறந்தநாலுள அவரை கஷ்டம் தான் படுத்துறோம்.

மாறுவோம் இனியாவது.அன்பை காட்ட இப்படி முட்டாள் தனமான வேலைகளை செய்யாம இருப்போம்.இதை தான் அவரும் நிச்சயம் விரும்புவார்.

4 கருத்துகள்:

 1. ரசிகர்கள் வெறியர்களாக மாறும் பொழுது இவை எல்லாம் தானாக சேர்ந்து விடுகிறது, முன்பு விட இதுவெல்லாம் வெகுவாக குறைந்து விட்டது, இருந்தும் படம் வெற்றி பெற பால் குடம் எடுப்பது அழகு குத்துவது என்று தமிழன் ரஜினியை எங்கோ கொண்டு செல்கிறான், இதுவும் அபாயகரமானது,

  இருந்தும் ஒரு ரஜினி ரசிகனாக பெருமையுடன் சொல்லிக் கொள்வேன் நான் ரஜினி ரசிகன் என்று.

  சிறந்த கருத்துள்ள பதிவு வாழ்த்துக்கள் தோழி

  பதிலளிநீக்கு
 2. கோயில்களில் பாலாபிசேகம் செய்பவர்களும் , நீங்கள் சொன்னவர்களும் ஒன்றுதான் என்று நினைக்கும் போது, இங்கே நாம் அனைவருமே முட்டாளாகத் தெரிகிறோம் சகோதரி.

  பதிலளிநீக்கு
 3. முட்டாள் என்று யாரும் இல்லையே இந்த உலகத்தில் .செய்யும் செயல்கள் முட்டாள் தனமானவை.மிகுதியான அன்பின் வெளிப்பாடு இவை.இதை மாற்றி அன்பை வேறுவழியில் வெளிப்படுதினாலே போதும்

  பதிலளிநீக்கு