பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 19 நவம்பர், 2012

இதுவும் அழகுதான் ...


  நிறையபேர் நினச்சுகிட்டு இருக்காங்க வெள்ளையா இருந்தாதான் அழகு கருப்பு அழகு இல்லைன்னு .

ஆரம்பத்துல இருந்தே சிகப்பு கலர்ல நமக்கு இருக்குற மோகம் , அதான் நம்மள கருப்பு கலரை ரசிக்க விடமாட்டே.ங்குது.கருப்பு அழகு இல்ல கருப்பா இருந்தா நம்மள யாரும் கவனிக்க மாட்டாங்கனு எண்ணம் நம்ம மனசுல தானா விதஞ்சிடுது .இதுக்கு யார காரணமா சொல்றது? கருப்பு அழகில்லைன்னு சொல்றது எப்படி நியாயம் ஆகும்?

இந்த மீடியாக்களில் ,இந்த கிரீம் போடுங்க அந்த கிரீம் போடுங்க இதனை நாளுல இதனை வாரத்துல சிகப்பாகிடுவீங்கனு விளம்பரம் பண்றாங்களே ..அவங்க இப்படி விளம்பரம் பண்ணி சிகப்புதான் அழகுன்னு நம்ம மனசுல பதிய வச்சுட்டாங்களா? இல்ல கருப்ப அவமானமா நினச்சு சிகப்பாகனும்னு அனேகபேர் விருப்பபடுரதால புதுசு புதுசா கிரீம்கள் தயாரிச்சு விளம்பரபடுதுரான்களா? கலர்-ல என்னங்க இருக்கு?எல்லாமே நம்ம மனசுலதனே இருக்கு.

ஒருத்தங்க கலர் வச்சு அவங்க குணத்தை தீர்மானம் பண்ணிட முடியுமா ? நம்ம நாட்டோட உண்மையான நிறம் கருப்புதானே.நம்ம நிறத்துக்கு காரணம் நம்ம உடம்புல சுரக்குற நிறமி செல்லான மெலனின் அளவு அதிகமா இருக்குறது தான்.

கருப்பும் அழகுதாங்க.எல்லாரையும் தன அழகால தன் காலடியில கிடத்தின 'கிளியோபாட்ரா' கருப்புன்னு தான் கேள்விப்பட்டு இருக்கேன்.கருப்போ சிகப்போ நமக்கு நாமதான் அழகுன்னு நினைக்கணும். (நாம மட்டும் தான் அழகுன்னு நினைக்கறதுக்கும் நாமளும் அழகுதான்னு நினைக்கறதுக்கும் வித்யாசம் இருக்கு).

எந்த விஷயத்துலயுமே மத்தவங்களோட எப்போ கம்பேர் பண்றோமோ அன்னைக்கு வீனாப்போக ஆரம்பிக்குறோம் நாம் .இத எத்தன பேர் ஒத்துக்குறீங்கனு தெரியல. பிறக்கும் போதே யாரும் செலிபிரிட்டியாக பொறக்குறது இல்ல.

செலிபிரிட்டிக்களின் குழந்தையா பொறக்குறாங்க இல்லைன்னு சொல்லல .அதுக்காக அவங்க செலிபிரிட்டி ஆகிட முடியாது.நம்முடைய நடை ,உடை,பேச்சு ,போடி லாங்குவேஜ் ,மத்தவங்ககிட்ட பழகுற விதம்,பேசுற விதம் இத நாம மாத்தினாலே நாமும் ஒரு செலிபிரிட்டிதான் .

எத்தனையோ வீட்ல பொண்டாட்டியை புருஷனும் புருஷனை பொண்டாட்டியும் சினிமாவுல ,டி.வி -ல பாக்குற அவங்கள மாதிரி இல்ல நீ இவங்கள மாதிரி இல்ல நீ -னு மனசலவுல கஷ்டப்படுத்துறது நடந்துகிட்டு தான் இருக்கு. முதல்ல நாம அழகுன்னு நினைக்கணும் .அந்த தன்னம்பிக்கை வரணும்.

நம்மகிட்ட எது மைனஸ்னு மத்தவங்க சொல்றாங்களோ அதுக்காக மனசு உடஞ்சுடாம கண்ணாடி முன்னாடி நின்னு இதுவும் அழகுதான்னு ரசிக்க ஆரம்பிக்கணும்.அது நமக்கு கொஞ்சம் கொஞ்சமா பிளஸ் ஆகிடும்.முதல்ல மத்தவங்களுக்காக வாழாம நமக்காக வாழனும்.

நல்ல சத்தான சாப்பாடு சாப்பிடுவோம் இயற்கையான முறையில நம்ம அழகை பாதுகாத்துக்குவோம் .

எல்லாருகிட்டயும் ஒரு அழகு இருக்கும் ,எல்லார் கிட்டயும் ஒரு திறமை இருக்கும் ,அதை ரசிப்போம் ,அழிஞ்சு போற மேலோட்டமான நிறத்தையோ அழகையோ ஒஎருசா நினச்சு ஒருதங்களை ஜட்ஜ் பண்ணாம எல்லாரையும் ரசிக்க கத்துப்போம்...சந்தோஷமா தன்னம்பிக்கையோட வாழுவோம்.
Untitled Document
இங்க பாருங்க செலிபிரிடிகள் மேக்கப் இல்லாம எப்படி இருக்காங்கனு.அதுக்காக இவங்க அழகா இல்லைன்னு சொல்லிட முடியுமா?மேக்கப்போட பாத்து பாத்து நமக்கு மேக்கப் இல்லாம பாக்க வித்தியாசமா இருக்கும் அவ்ளோதான்.நமக்கு ரசிக்க தெரியலைன்னு வேணும்னா சொல்லலாம்.

8 கருத்துகள்: 1. ​ கருப்பா ​இருக்குறவங்க எல்லாம் அழகு இல்லை என்றும் .
  வெள்ளையா இருக்குறவங்க எல்லாம் அழகு என்றும் யார்
  உங்களுக்கு சொனனது ?
  முதல்ல வெள்ளை என்றே கலரே கிடையாது .அது தெரிமா உங்களுக்கு ?

  ஏதும் நாம் பார்க்கும் பார்வையில் உள்ளது .
  இந்த உலகத்தில் இயற்கையால் உண்டாண எல்லாமே அழகு தான் .

  இந்த மாதிரி மொக்க மேட்டர் எல்லாம் சொல்லாதிங்க .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mr .கணபதி ,நல்லா படிக்காம அவசரத்துல கருத்து சொல்றீங்களா.நீங்க சொன்னத தான் நானும் சொல்லி இருக்கேன் நல்லா படிங்க முதல்ல.

   நீக்கு
 2. கருத்து எல்லாம் என்னமோ நல்லாத்தான் சொல்லியிருக்கிங்க. ஆனா, கருப்பா இருக்கிற நாங்க யாரும் எங்களை தாழ்வா நெனக்கிறதில்லை. உங்களை மாதிரி சிவப்பா இருக்கிறவங்க தான் எங்களை அப்படி நெனக்க வெக்கிறாங்க. பொது இடங்கள்ள இந்த மாதிரி விசயத்துக்கெல்லாம் அவமானப்படும்போது எப்படி இருக்கும்ன்னு அனுபவிக்கிறவங்களுக்கே தெரியும்.

  பதிலளிநீக்கு
 3. சில பேர் அப்படி நடந்துக்கிறதால நாம எல்லாரையும் தப்பா சொல்லிட முடியாது இல்லையா.அவங்களுக்கு ரசிக்குற உணர்வு இல்லைன்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
 4. நல்ல பதில் தான்... ஆனா கருப்பா இருக்கறவங்களை பார்த்ததுமே இவன் திருடன்தான் இருப்பான்னு முடிவு கட்றதை எல்லாம் ரசிப்புதன்மையில சேர்க்க முடியாதுன்னு நெனக்கிறேன். நீங்க என்ன நெனக்கிறிங்க...???????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு எனக்கு தெரியாது,
   நான்,நீங்க சொல்றது சரின்னு நினைக்கிறேன்.

   நீக்கு