பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 7 டிசம்பர், 2012

நவதிருப்பதி - தலம் 1மஹா விஷ்ணுவின் 108 திவ்விய தேசத்துல பரமபதம் திருபாற்க்கடல் தவிர 106 தலங்கள் இந்தியாவுல இருக்கு.அதாவது சோழநாட்ல 40,தொண்டை நாட்ல 22
,பாண்டிய நாட்ல 18,மலை நாட்ல 13,வாட நாட்ல 11,நடுநாடு 2 இப்படி அமைஞ்சிருக்கு .இதுல பாண்டிய நாட்ல இருக்குற 2 திருப்பதிகளில் தாமிரபரணி நதியோட ரெண்டுபக்கமும் இருக்குற 9 திருத்தலங்கள தான் நவதிருப்பதினு சொல்றோமாம் .

1) திருவைகுண்டம் 2) திருவரகுணமங்கை(நத்தம்) 3)திருப்புளியங்குடி
4)இரட்டை திருப்பதி 5)பெருங்குளம் 6)தென்திருப்பேரை
7)திருக்கோளூர் 8)ஆழ்வார் திருநகரி

முதல்ல திருவைகுண்டம் (சூரியன்) பத்தி தெரிஞ்சுக்குவோம் ...

இந்த கோவில் திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில திருநெல்வேலியிலிருந்து 28 கிலோமீட்டர் தூரத்துல இருக்கு.

கோவில் வரலாறு :

ஒரு சமயம் இந்த பூமியில பெரிய பிரளயம் வந்து எங்கபாத்தாலும் தண்ணீர்னுஇருந்த காலத்துல பிரம்மதேவன் வச்சிருந்த (சிருஷ்டி ரகசிய கிரந்தம் ) படைப்பு தொழில் சம்மந்தமான ரகசிய ஏட்டை சோமுகாசுரன் அப்படிங்குற அரக்கன் ஒளிச்சி வச்சுகிட்டானாம் .

என்ன பண்றதுன்னு தெரியாம பிரம்மா அத அவன்கிட்ட இருந்து மீட்டு குடுக்கசொல்லி விஷ்ணுவை வேண்டி தவம் பண்ண முடிவு பண்ணி ,தன்னோட கைல இருந்த தண்டத்தை பெண்ணாக்கி எங்க தவம் செய்யலாம் தெரிஞ்சுகிட்ட வர சொன்னாராம்.அந்த பெண்ணும் தாமிரபரணி ஆற்றங்கரைல சோலைகள் நிறைஞ்ச ஒரு இடத்தை தேர்வு செஞ்சு
சொல்ல பிரம்மாவும் அங்க வந்து ரொம்ப கடுமையா தவம் செஞ்சாராம்.

அவரோட தவத்தை பாத்த பெருமாளும் பெருமாலும் அங்க வந்து பிரமதேவனை வாழ்த்தி அவர் இழந்த ஏடை மீட்டு கொடுத்தாராம்.பிரம்மா திருமால் கிட்ட தனக்கு காசி குடுத்து நின்ன அதே திருக்கோலத்துலயே
இங்க வைகுண்ட நாதனா காட்சி தரணும்னு வேண்ட அவரும் சம்மதிச்சாராம் ...

கால தூஷகன் அப்படிங்குற ஒரு திருடன் எப்பவும் இந்த திருமாலை கும்பிட்டுட்டு திருட போவானாம் .அவன் திருடினதுல பாதிய பெருமாலுக்கு காநிக்கையாவும் குடுப்பானாம்.ஒருதரம் இவனோட கூட்டம் அரண்மனைல திருடும்போது மாட்டிக்கிட்டாங்கலாம் .அப்போ இவன் வைகுண்ட நாதர்கிட்ட சரணடைஞ்சு தன்ன காப்பாத்த சொல்லி கேக்க பெருமாளே கால தூஷகன் வேஷத்துல வர அத அரசன் பாத்தப்போ பெருமாள் தன்னோட சுயரூபத்த காட்டினாராம்.

அப்போ அந்த அரசன் தன கிட்ட கொள்ளை அடிச்ச காரணத்த கேக்க 'தர்மம் காக்காத உன்ன தர்மத்துல ஈடுபட செய்றதுக்காகதான்' தான் வந்ததா சொன்னாராம்.அதனால அரசன் தனக்கு கிடச்ச பாக்கியம் மக்களுக்கும் கிடைக்கணும்னு நினச்சு உட்சவ மூர்த்திய கள்ளபிரான் அப்படினு சொல்லி கும்பிட்டாறாம்.

இந்த கோவில் கொஞ்ச காலத்துக்கு முன்னாடி பூமியில புதஞ்சுபோச்சாம் .அப்பறம் மணப்படை வீட்டை தலைநகரமாக கொண்டு ஆண்ட பாண்டிய மன்னனோட பசுக்களை அத மேய்ப்பவர் இங்க ஓட்டி வந்து மேக்குறதை
வழக்கமா வச்சுருந்தாராம் .அப்போ ஒரு பசு மட்டும் தனியா பெருமாள் புதஞ்சி இருந்த இடத்துல பால் சொறிவதை வழக்கமா வச்சுருந்துசாம் .இத மாடு மேக்குரவனம் பாத்துட்டு மன்னன் கிட்ட சொல்ல மன்னன் பரிவாரத்தோட அங்க வந்து மணலை சுத்தம் செய்ய அங்க வைகுண்ட பெருமாள் சன்னதிய பாது ரொம்ப சந்தோஷப்பட்டு இப்போ இருக்குற இந்த கொவில கட்டினாராம்.

இந்த கோவில்ல பெருமாளை சூரிய ஓளி வருஷத்துக்கு ரெண்டு தடவ சித்திரை 6 ,ஐப்பசி 6 நாள்ல சூரியன் பெருமாளோட பாதத்தை தரிசிச்சு போவாராம்.
இதுக்காக கொடிமரம் தெற்கு நோக்கி கொஞ்சம் தள்ளி தான் வச்சுருக்காங்களாம்.

வீரப்பன் காலத்துல கோடி மரமும் ,சந்தான சபாபதி காலத்துல மண்டபமும் கட்டினாங்களாம் .இங்க இருக்குற உற்சவரை உருவாக்கிய சிற்பி இவரோட அழகுல மயங்கி கன்னத்துல கிள்ள சிற்பியோட ஆத்மார்த்தமான அன்போட அடையாளத்தை கன்னத்துல வடுவா ஏத்துகிட்டாராம் .இப்பவும் இந்த வடுவை உற்சவர்கிட்ட பாக்கலாமாம்.

மூலவர் - வைகுந்தநாதன் - நின்ற திருக்கோலம் .கிழக்கு பார்த்த திருமுக மண்டலம்(மூலவர் கூட தாயார் கிடையாது).உற்சவர் - கள்ளபிரான் ,தாயார் - வைகுண்டவல்லி ,பூதேவி (தனி சன்னதி) தீர்த்தம் - பிருகு தீர்த்தம் ,தாமிரபரணி நதி,விமானம் -சந்திரவிமானம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக