பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 17 மே, 2016

ரயிலின் ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?

ரயிலின் ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?

WDP 3A

முதல் எழுத்து:

முதல் எழுத்து ரயில் எந்த வகைப் பாதைக்கானது என்பதைக் குறிக்கும்
W - அகன்ற இருப்பு பாதை (Broad Gauge / Wide Gauge - 1,676 மில்லி மீட்டர்)
Y - மீட்டர் இருப்புப் பாதை (Metre Gauge - 1000 மில்லி மீட்டர்)
Z - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 762 மில்லி மீட்டர்)
N - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 610 மில்லி மீட்டர்)

WDM 2

இரண்டாம் எழுத்து:

இரண்டாம் எழுத்து ரயில் எந்த வகை சக்தியால் இயங்குகிறது என்பதைக் குறிக்கும்.
D - டீசல் இஞ்சின்
A - மின்சக்தி - மாறுதிசை மின்னோட்டம் (AC traction)
C - மின்சக்தி - நேர் மின்னாட்டம் (DC traction)
CA - மின்சக்தி - எந்த மின்னோட்டத்திலும் ஓடும் (AC & DC traction)
B - பேட்டரி சக்தி

புதன், 4 மே, 2016

பெர்முடா முக்கோணம்

அதிநவீன தொழில் நுட்ப வளர்ச்சியில் தனி மனிதன் தொடங்கி, உலக நாடுகள் வரை எவ்வளவு வளர்ச்சி பெற்று முன்னேறியிருந்தாலும், சில குறிப்பிட்ட விஷயங்களில், அதன் உண்மை தன்மையை அறிய முடியாமல் இன்னும் வெற்றிடமாகத்தான் நாம் உள்ளோம். அப்படி ஏராளமான மர்மங்களும், திகில் கிளப்பும் அமானுஷ்யங்கள் நிறைந்த இடமுமாகத்தான் 'பெர்முடா முக்கோணம்' இன்று வரை திகழ்கிறது.




வட அட்லாண்டிக்கடலின் மேல்பகுதியில், ஒரு முக்கோணப் பகுதியாக காட்சி அளிக்கும் இந்த பகுதி, சாத்தானின் முக்கோணம் என்றும் பெரும்பாலானவர்களால் அழைக்கப்படுகிறது. இந்த பகுதியை கடந்துச் சென்ற ஏராளமான விமானங்களும், கப்பல்களும் மர்மான முறையில் காணாமல் போயிருக்கின்றன. அவை அனைத்தும் என்ன ஆனது என்ற மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க எந்த வான தூதனும் இதுவரை இறங்கி வரவில்லை.

காணாமல்போன பட்டியலில் அமெரிக்காவிற்கு சொந்தமான விமானங்களும், கப்பல்களும் ஏராளம். அதி நவீனத்தையே பெரிதும் நம்பியிருக்கும் அமெரிக்கா, இந்த கடல் பகுதியில் பல மர்மங்கள் மறைந்திருப்பதை இன்று வரை மறுத்துதான் வருகிறது. ஆனாலும், காணாமல்போகும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் குறித்த செய்திகள் இன்னும் தொடரத்தான் செய்கிறது. இதனிடையே வேற்று கிரக உயிரினங்கள் மற்றும் கண்களுக்கு புலப்படாத ஜீவராசிகள் இப்பகுதியில் வசிப்பதாக வெகு ஜன மக்கள் நம்புகிறார்கள். ஆனால், இங்கு நிகழக்கூடிய எந்த மாயங்களையும் இன்னும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

திங்கள், 25 ஏப்ரல், 2016

இனிமே துணி துவைப்பதே சந்தோஷமாகப் போகுது!

அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்கள் துணி துவைப்பதற்கான கடைகளை தேடி அலைவார்கள்.வெளிநாடுகளில் துணி துவைப்பது என்றால் அதற்கு அதிகம் செலவிட வேண்டும்.


இது போன்ற நிலைமைகளில் கை கொடுக்கவென்றே ஒரு துணி துவைக்கும் பை தயாராகியிருந்தது,இதில் துணி, சோப்பு பவுடர், தண்ணீர் மூன்றையும் சேர்ந்து பையை இறுக்கி கட்டி வெளிப்பக்கமாக 30 விநாடிகள் தேய்த்து அழுத்த வேண்டும். இதற்கு பிறகு அழுக்கு நீரை வெளியேற்றிவிட்டு, துணியை அலசிவிட வேண்டும். துணிகளை வெளுப்பதற்கு ஏற்ப உள்பக்கமாக பிரத்யேக அமைப்பு உள்ளது. இயந்திரம் செய்யும் வேலையை கையடக்க இந்த பை செய்து விடுகிறது. இந்நிலையில் கூடிய விரைவில் இனி வாஷிங்மெஷினுக்கு வேலை இருக்கப் போவதில்லை.

வாஷிங்மெஷின் வேலையை இனி ‘டோல்ஃபி’ (Dolfi) என்ற சிறிய கருவியே செய்துவிடப் போகிறது. ஒரு சோப் அளவுக்கு கையடக்கமாக இருக்கும் டோல்ஃபி, அல்ட்ராசோனிக் தொழில் நுட்பத்தில் வேலை செய்கிறது. ஒரு வாளியில் தண்ணீர் விட்டு, சோப்புத் தூளைச் சேர்த்து, அழுக்குத் துணிகளை போட்டு விட வேண்டும். டோல்ஃபியை ஆன் செய்து வாளியில் வைத்து விட வேண்டும்.

டோல்ஃபியில் இருந்து சக்தி வாய்ந்த அல்ட்ராசோனிக் அலைகள் உருவாகி, குமிழ்களை ஏற்படுத்தும். துணிகளில் உள்ள அழுக்குகள் மாயமாகும். அரை மணி நேரத்தில் துணிகளைத் துவைத்துக் கொடுத்துவிடும். கையடக்கமான இந்த டோல்ஃபியை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். வாஷிங்மெஷினை விட துணிகளை மிக மென்மை யாகக் கையாளும் டோல்ஃபி. பருத்தி, பட்டு, பாலியெஸ் டர் என்று எந்த வகையான துணிகளையும் சுத்தம் செய்து கொடுத்துவிடும்.

வாஷிங்மெஷினை விட 80 சதவிகிதம் குறைவான ஆற்றலில் டோல்ஃபி இயங்கு வதால், சத்தமே வெளியே வராது. ஜெர்மனைச் சேர்ந்த தொழிலதிபர் லெனா சோலிஸ் இதை உருவாக்கி இருக்கிறார். டோல்ஃபியை வெளியிடங்களுக்கு செல்லும் போதும் எடுத்துச் செல்லாம். சலவைக்குச் செலவு செய்யும் பணம், நேரம் மிச்சமாகும். துணி துவைப்பதே சந்தோஷ மான விஷயமாக மாறிவிடும். கடந்த ஜனவரியில் திட்டத்தை ஆரம்பித்தோம். விரைவில் விற்பனை செய்ய இருக்கிறோம். ஒரு டோல்ஃபி 7,300 ரூபாய்’’ என்கிறார் லெனா சோலிஸ்.
                                                       --- நன்றி சமூகவளைதளம் 

வியாழன், 21 ஏப்ரல், 2016

ஶ்ரீசக்கரம்

அமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின் தென்கிழக்குல் உள்ள இடம்தான் மிக்கி பேசின் சூரியனின் வெப்பத்தில் மணல் கொப்பளிக்கும் அளவுக்கு பாலைவன தேசம்.பில் மில்லர் என்கிற ராணுவ அதிகாரி இந்த இடத்தை குட்டி விமானம் மூலம் கடந்து செல்கையில் 13.3 mile சதுர அளவுக்கு வரி வரியாக வரைபடம் போன்ற ஒன்றை கண்டார்.

ஏதோ நாட்டின் வரை படம் என்று நினைத்து அதை பற்றி ஆராய்ந்தவருக்கு பயங்கர அதிர்ச்சி காரணம் அது நம் இந்து மதத்தில் காலம் காலமாக வழிபடும் சிவ விஷ்ணு பராசக்தியை குறிக்கும் ஶ்ரீசக்கரம் தான் அவர் பார்த்தது தொடர்ந்து 30 நிமிடங்கள் வட்டமிட்ட பின்னே தான் அவரால் முழு சக்கரத்தையும் 1 தடவை சுற்ற முடிந்தது.

இதை ப் போலவே வரைய அவர்களால் எவ்வளவு முயன்றும் (1990 to 2014) இன்று வரை முடியவில்லை காரணம் நாலாயிரம் அடி மேலே பறந்து பார்த்தால் தான் ஶ்ரீசக்கரம் என்றே தெரியும்.

UFO ஆராய்ச்சியாளர்கள் டான் நியுமேன்,ஆலன் டெக்ளர் இருவரும் இந்த இடத்தை செப் 15 ல் ஆய்வு செய்தனர் அந்த ஆய்வில் இந்த இடத்தை சுற்றியுள்ள எந்த பகுதியிலும் மனித கால் தடமோ வாகன வந்து சென்ற தடமோ இல்லை என்றும் மனிதனால் இது சாத்தியமே இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

                                                    --நன்றி புதிய தமிழா சமூகவளைதளம் 

புதன், 6 ஏப்ரல், 2016

Whatsapp Security !!

வாரத்திற்கு ஒரு அப்டேட் தட்டிக் கொண்டே இருக்கிறது வாட்ஸ் ஆப். அதே போன்ற ஒரு அப்டேட் தான் சமீபத்தில் வந்துள்ளது. ஆனால், இது கொஞ்சம் வித்தியாசமான மற்றும் பாதுகாப்பான அப்டேட். நாம் நம் நண்பர்களுக்கு அனுப்பும் மெசேஜ்களையோ அல்லது க்ரூப்பில் பதிவிடும் மெசேஜ்களையோ, இனி நாம், நம் நண்பர்கள் அல்லது க்ரூப்பில் உள்ளவர்கள் தவிர வேறு யாராலும், பார்க்கக் கூட முடியாது. ஏன்! வாட்ஸ் ஆப் நிறுவனத்தால் கூட பார்க்க முடியாது.

 நாம் அனுப்பும் மெசேஜ், "பப்ளிக் கீ" மூலமாக என்க்ரிப்ட் (குறியீடுகள் மூலம் மறைக்கப்பட்டு) செய்யப்பட்டு, வாட்ஸ் ஆப் சர்வரை சென்றடைகிறது. வாட்ஸ் ஆப் சர்வரில் நம் நண்பரின் ப்ரைவேட் கீ இல்லாததால், நாம் அனுப்பும் மெசேஜினை வாட்ஸ் ஆப் நிறுவனத்தால் பார்க்க முடியாது. வாட்ஸ் ஆப் சர்வரில் இருந்து, நம் நண்பர்களிடம் சென்றடையும் மெசேஜ், நம் நண்பரிடம் இருக்கும் 'ப்ரைவேட் கீ' யால் டீக்ரிப்ட் செய்யப்படுகிறது. இதனால் நம் நண்பர்களால் அந்த மெசேஜினை பார்க்க முடிகிறது.

 எழுத்து, புகைப்படம், வீடியோ என எதையுமே அனுப்புனர் மற்றும் பெறுநரைத் தவிர, வேறு யாராலும் பார்க்க முடியாது. அரசாங்கத்தால் கூட. இந்த தொழில்நுட்பத்தால், தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளின் மெசேஜ்களை கண்டு பிடிக்க முடியாது என சில அரசு அதிகாரிகள் கருதுகின்றனர். ஆனால் வாட்ஸ் ஆப், தனது பயனர்களின் தனிப்பட்ட உரிமையினை பாதுகாக்க விரும்புகிறது.

                                                   ---- நன்றி விகடன் 

வியாழன், 31 மார்ச், 2016

வாட்ஸ்அப்-ல் Bold ,Italic, strikethrough-text எழுத்துக்கள்

வாட்ஸ்அப்-ல இப்போ  Bold ,Italic, strikethrough-text ஸ்டைல் எழுத்துக்கள் அனுப்புற வசதி வந்துருக்கு.வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன்-ல இந்த வசதி இப்போ இருக்கு.

சரி , இப்போ எப்படி இந்த எழுத்துக்களை கொண்டுவரலாம்னு பாப்போம் ..


Bold :      *தடிமன்*                                         -  Ex:  *Emaple*
Italic :       _சாய்வு_                                          -  Ex:  _Emaple_
Bold Italic :       _*தடிமன்சாய்வு*_             -  Ex:  _*Emaple*_
Strikethrough-text:     ~குறுக்குகோடு~        -  Ex:  ~Emaple~



செவ்வாய், 29 மார்ச், 2016

கத்துக்குவாங்களா??

சமீபத்துல நடந்த இளையராஜா 1000 நிகழ்ச்சியில ,நான் பார்த்து எனக்கு பிடிச்ச ஒரு விஷயம்..

பாடகி சித்ரா அவர்கள் இதுவரைக்கும் 25000க்கும் மேல பல மொழிகள்ல பாடல்கள் பாடியிருக்காங்க.6 தேசிய விருது, 5 பிலிம் ஃபார் விருது, 31 மாநில விருதுகள் வாங்கிருக்குற இவங்க அந்த நிகழ்ச்சியில ஜானகி அவர்களோட பாட்ட பாடினாங்க.அவங்க பாடுறதுக்கு முன்னாடி ஜானகி அம்மா அளவுக்கு பாட முடியாது நான் முயற்சி பண்றேன் . தப்பா பாடினா மன்னிச்சு ஏத்துக்கோங்கனு சொல்லி பாட ஆரம்பிச்சாங்க, அதப்பாத்து நான் பிரமிச்சுபோயிட்டேன் .

இப்போ வரும் பாடகர்கள்/பாடகிகள் இளைய தலைமுறை பாடகர்கள் எத்தனைபேர் இத கத்துக்குவாங்கன்னு தெரியல..இந்த தன்னடக்கம் ,மரியாதை ,தலைக்கனம் இல்லாத ஒரு குணம் இதுலாம் இந்த கால தலைமுறையினர்களுக்கு அவ்வளவா இல்லைன்னு சொல்ல வருத்தப்பட்டாலும் அதுதான் உண்மை ..

ரெண்டு பாட்டு பாடிட்டாலே தான் ஒரு பெரிய பாடகர்/பாடகினு பெருமைபட்டுக்கிறது , தலைக்கனத்தோட திரியறதுன்னு இருக்குற இந்த கால இளைய தலைமுறை இவங்களையெல்லாம் பார்த்தாவது நல்ல விஷயங்களை கத்துக்குவாங்களா?